
இன்றைய காலத்தில் பலரும் தாங்கள் செய்யும் செலவுகள் அர்த்தமுள்ள செலவுகளாக இருக்க வேண்டும், பிற்காலத்தில் அதனால் நமக்கு நன்மைகள் உண்டாக வேண்டும் என்ற அடிப்படையில் தான் செலவுகளை செய்கிறார்கள். அப்படி செய்யக்கூடிய ஒரு செலவுகளில் ஒன்று தான் தங்கத்தை வாங்கி வைப்பது. பிற்காலத்தில் அவர்களுக்கு தேவைகள் ஏற்படும் பொழுது அந்த தங்கத்தின் விலை உயர்ந்திருக்கும். அப்பொழுது அதை தங்களுடைய தேவைக்கேற்றவாறு பணமாக மாற்றிக் கொள்வார்கள். இப்படி ஒரு புறம் இருக்க, தாங்கள் பெற்ற பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடக்கும் பொழுது தங்களால் இயன்ற அளவு தங்க நகைகளை போட வேண்டும் என்பதற்காக தங்கத்தை வாங்கி சேர்த்து வைப்பவர்களும் இருப்பார்கள். இப்படி வாங்குபவர்களை தவிர்த்து தங்கத்தை வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தும் அந்த தங்கத்தை வாங்க முடியாமல் கஷ்டப்படுபவர்களும் இருக்கிறார்கள்.
தங்கத்தை வாங்கினாலும் அதை அனுபவிக்க முடியாமல் ஏதாவது ஒரு ரூபத்தில் தடைப்பட்டு கொண்டே செல்லும் நபர்களும் இருக்கிறார்கள். இப்படி யாராக இருந்தாலும் தங்கத்தை எளிதில் வசியம் செய்தால் அவர்களுக்கு தங்க நகை சேரும். அந்த சூட்சுமத்தை தான் இந்த ஆன்மீகம் குறித்த பதில் நாம் பார்க்க போகிறோம்.
எந்த ஒரு பொருளும் நம்மிடம் இருக்க வேண்டும் என்றால் அந்த பொருளுக்கும் நமக்கும் ஒரு வித ஈர்ப்பு விசை என்பது இருக்க வேண்டும். அது இயற்கையிலேயே அமைந்துவிட்டால் மிகவும் அதிர்ஷ்டசாலியாக நாம் திகழ்வோம். அப்படி அமையாமல் போய்விட்டது என்றால் அந்த ஈர்ப்பு சக்தியை நாம் உருவாக்க வேண்டும். அந்த ஈர்ப்பு சக்தியை உருவாக்குவதை தான் வசியம் என்று கூறுகிறோம். ஒரு ஆண் தான் விரும்பிய பெண்ணிற்கு வசியம் வைப்பதும், பெண் தான் விரும்பிய ஆணிற்கு வசியம் வைப்பதும், குலதெய்வத்தை வீட்டிற்கு வரவைத்து நம்முடன் இருக்க வைப்பதற்கு குலதெய்வத்திற்கு வசியம் வைப்பது என்று பல வகைகளில் பல வசியங்கள் இருக்கின்றன. அந்த வகையில் தங்கத்தை வசியம் செய்வதற்கான முறையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த வசியம் செய்யும் முறைக்கு நாம் வாரத்தில் இரண்டு கிழமைகளை தேர்வு செய்ய வேண்டும். இந்த இரண்டு கிழமையில் ஏதாவது ஒரு கிழமை மட்டும் நாம் இந்த வசிய செயலை செய்தால் போதும். ஒவ்வொரு வாரமும் நாம் செய்ய செய்ய நமக்கு தங்க நகை சேர்வதற்குரிய வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அந்த கிழமைகள்தான் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை. செவ்வாய்க்கிழமையாக இருக்கும் பட்சத்தில் காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள் சுக்கிர ஹோரை வரும், அந்த நேரத்தில் நாம் இந்த வசிய செயலை செய்யலாம். வெள்ளிக்கிழமை செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் சுக்கிர ஹோரை வரும், அந்த நேரத்திலும் நாம் இந்த வழிமுறையை பின்பற்றலாம்.
வாரத்தில் ஒரு முறை மட்டும் செய்தால் போதும். இதற்கு நமக்கு தேவைப்படக்கூடிய பொருட்கள் ஜவ்வாது, அரகஜா, பன்னீர், பச்சை கற்பூரம். இந்த நான்கு பொருட்களில் ஏதாவது ஒரு பொருள் கிடைத்தால் போதும். முதலில் உங்களுடைய கைகளை சுத்தமாக கழுவி ஈரம் இல்லாமல் துடித்துக் கொள்ளுங்கள். பிறகு இந்த நான்கு பொருட்களில் எது உங்களிடம் இருக்கிறதோ அதை உங்களுடைய கையில் நன்றாக வாசனை வரும் வரை தடவிக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக நம் வீட்டில் இருக்கக்கூடிய ஒரு சிறிய தங்கமாக இருந்தாலும் அந்த தங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தங்கத்துடன் மல்லிகைப்பூ அல்லது துளசி இலை இவை இரண்டில் எது கிடைக்கிறதோ அதையும் சேர்த்து வைத்துக்கொண்டு மகாலட்சுமி தாயாருக்கு ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து மனதார மகாலட்சுமி தாயாரிடம் தங்கம் சேர வேண்டும் என்று வழிபாடு செய்ய வேண்டும்.
இப்படி செய்து முடித்துவிட்டு அந்த தங்கத்தை எப்பொழுதும் வைப்பது போல் வைத்து விடலாம். தங்கத்துடன் எதை வைத்து வழிபட்டோமோ அதை அப்படியே வைத்து விடுங்கள். இப்படி ஒவ்வொரு வாரமும் நாம் செய்யும்பொழுது தங்கத்தால் ஏற்பட்ட தோஷங்கள் நீக்கி வசியம் உண்டாகும். அதனால் தங்கம் அதிக அளவில் சேரும்.
இதையும் படிக்கலாமே: செப்டம்பர் மாதம் பணம் சேர சொல்ல வேண்டிய வார்த்தை
மகாலட்சுமி தாயாரின் அருளால் தங்கத்தால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கி தங்கத்தை எளிதில் வசியம் செய்ய இந்த எளிய வழிமுறையை பின்பற்றலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.