- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெப்டம்பர் மாதம் பணம் சேர சொல்ல வேண்டிய வார்த்தை

செப்டம்பர் மாதம் பணம் சேர சொல்ல வேண்டிய வார்த்தை

- Advertisement -

தினம் தினம் நம்முடைய வாழ்க்கையில் எதை நினைத்துக் கொண்டே இருக்கின்றோமோ, எதை சொல்லிக்கொண்டே இருக்கின்றோம், அதுதான் நடக்கும். அனுதினமும் பண கஷ்டமாக இருக்கிறது, கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுமோ, எனக்கு பணக்கஷ்டம், எனக்கு பணக்கஷ்டம், வருமானம் இல்லை என்று சொல்லிக் கொண்டே இருக்கிறோம்.

அதனால் தான் நம்மை கஷ்டம் வந்து ஒட்டிக் கொள்கின்றது. கஷ்டத்தை சொல்லும் வார்த்தைகளை திரும்பத் திரும்ப சொல்லாதீங்க. இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தாதீங்க. நேர்மறையான வார்த்தைகளை பயன்படுத்தும் போதுதான், நமக்கும் நேர்மறையான விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நடக்க தொடங்கும்.

- Advertisement -

இந்த செப்டம்பர் மாதம் நம்முடைய பணகஷ்டம் தீர வேண்டும் என்றால் தினமும் இரவு தூங்க செல்லும் போது சொல்ல வேண்டிய வார்த்தை என்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா. வழக்கம்போல எல்லா மாதங்களைப் போலவும், இந்த மாதமும் உங்களுக்கு சம்பளம் வரும்.

நீங்கள் வியாபாரம் செய்பவர்களாக இருந்தால், தினமும் வருமானம் வரும். அது கூட, குறைய எவ்வளவு வந்தாலும் சரி. எவ்வளவு செலவு ஆனாலும் சரி, கவலையே படவேண்டாம். தினமும் எல்லா வேலையும் முடித்துவிட்டு தூங்க செல்லும் போது உங்கள் குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இன்றைய நாள் நல்லபடியாக சென்றது. இந்த நாளை இனிய நாளாக எனக்கு கொடுத்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லிவிட்டு, ‘இந்த செப்டம்பர் மாதத்தில் தினம் தினம் பணம் என்னை நோக்கி வந்து கொண்டே இருக்கிறது’ என்ற வார்த்தையை 11 முறை சொல்லிவிட்டு தூங்க செல்லுங்கள்.

- Advertisement -

இந்த வார்த்தையை சொன்னால் மட்டும் இந்த செப்டம்பர் மாதத்தின் பண பிரச்சனை தீர்ந்து விடுமா என்று சில பேருக்கு சந்தேகம் வரும். நம்பிக்கையோடு இந்த வார்த்தையை தினமும் தூங்க செல்லும் போது நீங்கள் 11 முறை சொல்லி பாருங்கள். செப்டம்பர் மாதம் முழுவதும் இதை பின்பற்றும்போது, உங்களுக்கே உங்களை அறியாமல் ஒரு நல்ல மாற்றம் தெரியும். பண வரவு அதிகரிப்பதை உணர்வீர்கள். கடன் சுமை குறைவதை உணருவீர்கள்.

இதோடு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் மன அழுத்தம் குறையும். மனது லேசாகும். செய்யக்கூடிய வேலைகளில் கவனம் அதிகரிக்கும். ஒரு பாசிட்டிவ் எனர்ஜி உங்களை சுற்றி வந்து விட்டால், பிறகு உங்களை சுற்றி நடக்கும் விஷயங்கள் எல்லாம் பாசிட்டிவ் ஆக நடக்கும். பிறகு பணம் தானாக உங்களை நோக்கி வர தொடங்கிவிடும். நீங்கள் பணத்தை ஈர்க்கும் நபராக மாறிவிடுவீர்கள். இதற்குப் பின்னால் எந்த மாய மந்திர வித்தைகளும் கிடையாது.

- Advertisement -

நம்முடைய மனதை நாம் பாசிட்டிவ் ஆக மாற்றப் போகின்றோம். இன்றிலிருந்து தூங்க செல்லும் போது இந்த வார்த்தையை சொல்லி பாருங்கள். கடந்த மாதத்தை விட இந்த மாதம் நான் நிறைய சாதித்து இருக்கிறேன். நிறைய கடனை திருப்பிக் கொடுத்திருக்கிறேன் என்றால் அடுத்த மாதம் தொடரும் போதும் தினமும் இந்த மந்திரத்தை சொல்ல தொடங்கி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: சொந்த வீடு வாங்க ஞாயிற்றுக்கிழமை செய்ய வேண்டிய தானம்

இந்த பிரபஞ்சம் உங்களுக்கானது. நீங்கள் கேட்டதை கொடுக்கக் கூடியது. நல்லதையே கேட்போம் நல்லதையே கிடைக்கும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்