- Advertisement -

தீராத கஷ்டத்தை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி

- Advertisement -

முழுமுதற் கடவுளாக திகழக் கூடியவர் விநாயகப் பெருமான். அவரை வணங்காமல் எந்த ஒரு காரியத்தையும் யாரும் செய்ய தொடங்க மாட்டார்கள். அவரை வணங்கிய பிறகு செய்யக்கூடிய காரியங்களில் வெற்றிகள் உண்டாகும். தெளிவான அறிவையும் சிறந்த சிந்தனையும் தரக்கூடிய புத்தி காரகனாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானுக்கு உரிய திதியான ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி திதி அன்று விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும் முறை மற்றும் விநாயகர் பெருமானுக்குரிய மந்திரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

தீராத கஷ்டத்தை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி

நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களையும் சங்கடங்களையும் தீர்க்கக்கூடிய தெய்வமாக திகழ்பவர் விநாயகப் பெருமான் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. அதனால் தான் அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் ஒவ்வொரு தெருமுனையிலும் விநாயகர் பெருமானை வைத்து வழிபாடு செய்தார்கள். நம்முடைய கெட்ட காலமும் நல்ல காலமாக மாறுவதற்கும் நமக்கு இருக்கக்கூடிய தோஷங்கள் நீங்குவதற்கும் கிரக தோஷங்கள் நீங்குவதற்கும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்வது நல்ல பலனை தரும் என்றே கூறலாம். அந்த வகையில் சங்கரஹர சதுர்த்தி நாளன்று விநாயகப் பெருமானை எப்படி வழிபாடு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

அன்றைய தினத்தில் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய விநாயகரின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அவருக்கு வாசனை மிகுந்த மலர்களால் அலங்காரம் செய்து ஒரே ஒரு அருகம்புல்லை அவருடைய பாதத்தில் வைத்து விட வேண்டும். அவருக்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து “ஓம் கணேசாய நமஹ” என்னும் மந்திரத்தை 21 முறை உச்சரிக்க வேண்டும். பிறகு மூன்று முறை தோப்புக்கரணம் போட்டுவிட்டு காலை நேர பூஜையை நிறைவு செய்து விட வேண்டும்.

விரதம் இருக்க இயன்றவர்கள் அன்றைய தினம் முழுவதும் விரதம் இருக்கலாம். விரதம் இருக்க இயலாதவர்கள் விநாயகப் பெருமானை வழிபாடு மட்டும் செய்யலாம். அன்றைய தினத்தில் அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு சென்று விநாயகப் பெருமானை தரிசனம் செய்வது என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. மேலும் சங்கடஹர சதுர்த்தி என்பது மாலை நேர வழிபாடு என்று கூறப்படுகிறது. இருப்பினும் சில குறிப்பிட்ட நேரத்தில் விநாயகப் பெருமானுக்குரிய சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டை செய்யும் பொழுது நமக்கு நல்ல பலன் கிடைக்கும். அந்த வகையில் காலை 6:00 மணியிலிருந்து 8:40 குள்ளும் 10:45 இல் இருந்து 11 45 குள்ளும் மாலை 5:30 மணியிலிருந்து 10:30 மணிக்குள்ளும் இந்த வழிபாட்டை நாம் செய்யலாம்.

- Advertisement -

இந்த வழிபாட்டிற்கு கண்டிப்பாக முறையில் விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்ற வேண்டும். பிறகு விநாயகப் பெருமானுக்கு என்று நெய் தீபத்தை ஏற்றி வைத்து அவருக்கு நெய்வேத்தியமாக தேன், அவல், பொறி, கடலை, பழங்கள், இனிப்பு வகைகள், சுண்டல், கொழுக்கட்டை ,கலவை சாதம் போன்றவற்றில் தங்களால் எதை செய்து வைத்து வழிபாடு செய்ய முடியுமோ அதை செய்து வைத்து வழிபாடு செய்ய வேண்டும். விநாயகப் பெருமானுக்கு தூபம் காட்டிய பிறகு “ஓம் விக்னேஸ்வராய நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை மனதார உச்சரிக்க வேண்டும்.

இப்படி உச்சரித்து வழிபாட்டை நிறைவு செய்த பிறகு அன்றைய இரவு நிலவு தரிசனம் செய்து விநாயகப் பெருமானிடம் நம்முடைய கஷ்டங்கள் தீர வேண்டும் என்ற வேண்டிக் கொள்ள வேண்டும். வீட்டில் இந்த முறையில் வழிபாடு செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் அருகில் இருக்கக்கூடிய விநாயகரின் ஆலயத்திற்கு வாசனை மிகுந்த மலர்களை வாங்கித் தந்து நிலவு தரிசனம் செய்வது நல்ல பலனை தரும். மேலும் இந்த வழிபாட்டை செய்து முடித்த பிறகு 11 முறை தோப்புக்கரணம் போட்டு விநாயகப் பெருமானின் வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே:சகல பிரச்சனைகளையும் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி

வீட்டிலேயே எளிமையான முறையில் சங்கடஹர சதுர்த்தி நாளன்று விநாயகர் பெருமானை வழிபாடு செய்து அவருக்குரிய மந்திரங்களை கூறுவதன் மூலம் நம்முடைய தோஷங்களும், கஷ்டங்களும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -