- Advertisement -
- Advertisement -

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தேவைகள் இருக்கும். அந்த தேவைகள் பூர்த்தியடைவதற்குரிய வாய்ப்புகளை நாம் தேட வேண்டும். அப்படி தேடி அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டும் நம்மால் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்ய இயலவில்லை என்றாலும், பூர்த்தி செய்யும் சூழ்நிலை வரும் நிலையில் தடைகள் ஏற்பட்டு அது நம்மை விட்டு நழுவி சென்றாலோ அதற்கு பலவிதமான காரணங்கள் இருக்கும். எப்பேர்ப்பட்ட காரணமாக இருந்தாலும் நம்முடைய நியாயமான தேவைகள் பூர்த்தியடைய வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஒவ்வொரு நபர்களும் நவராத்திரியில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டிய ஒரு பூஜையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நவராத்திரி என்பது பெண் தெய்வ வழிபாட்டிற்கு உரிய நாட்கள் என்று நம் அனைவருக்குமே தெரியும். நவராத்திரியில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்த கிழமையாக திகழ்கிறது. அதிலும் இது நவராத்திரியின் 5ஆம் நாள். இந்த நாளில் பஞ்சமி திதி என்பது இருக்கிறது. பலவிதமான சிறப்புகள் நிறைந்த இந்த நாளில் நாம் செய்யக்கூடிய ஒரு பூஜை நம்முடைய தேவைகள் அனைத்தையுமே பூர்த்தி செய்யும். நம்முடைய தேவைகள் பூர்த்தி அடைவதற்கு தடைகளாக இருக்கக்கூடிய அனைத்தும் நிவர்த்தி அடையும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பூஜையைப் பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்த பூஜையை செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். நல்ல நேரம் பார்த்து செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பூஜையை செய்வதற்கு நமக்கு மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய கோமதி சக்கரம் மற்றும் லட்சுமி சோலி வேண்டும். இதை புதிதாக வாங்கி செய்வது என்பது மிகவும் சிறப்பு. கோமதி சக்கரம் மூன்று எண்ணிக்கையில் இருக்க வேண்டும். லக்ஷ்மி சோலி 5 எண்ணிக்கையில் இருக்க வேண்டும். புதிதாக வாங்கி வரப்பட்ட இந்த கோமதி சக்கரம் மற்றும் லட்சுமி சோலியை முதலில் சுத்தமான தண்ணீரில் கழுவிக்கொள்ளுங்கள். பிறகு இவை அனைத்தையும் காய்ச்சாத பசும்பாலில் நன்றாக கழுவி திரும்பவும் தண்ணீரில் சிறிதளவு பன்னீரை ஊற்றி இந்த சக்கரத்தையும் சோலியையும் போட்டு நன்றாக சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் தொடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தட்டிற்கு மேல் மஞ்சள் நிற துணியை விரித்துக்கொள்ள வேண்டும். இந்த துணி பட்டு துணியாக இருந்தால் கூடுதல் சிறப்பு. இந்த துணிக்கு மேல் தயார் செய்து வைத்திருக்கும் கோமதி சக்கரத்தையும், லக்ஷ்மி சோலியையும் வைக்க வேண்டும். பிறகு சிறிதளவு குங்குமம் சிறிதளவு குங்குமப்பூ சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக குலைத்து இந்த கோமதி சக்கரத்திற்கும், லட்சுமி சோலிக்கும் பொட்டு வைக்க வேண்டும். பிறகு இதற்கு சிறிது மலர்களை வைத்து வீட்டில் இருக்கக்கூடிய பெண் தெய்வங்களுக்கு முன்பாக வைத்துவிட்டு முழு மனதோடு தேவைகள் அனைத்தும் பூர்த்தி அடைய வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு ஊதுபத்தி சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும்.

- Advertisement -

நவராத்திரி நாட்கள் முடிவடையும் வரை பூஜையறையிலேயே இருக்கட்டும். நவராத்திரி நிறைவு நாளன்று ஒரு மூட்டையாக கட்டி வீட்டில் எந்த இடத்தில் பணம் வைக்கிறோமோ அந்த இடத்தில் வைத்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்முடைய தேவைகள் பூர்த்தியடைவதற்குரிய பண வரவுகள் உண்டாகும். தடைகள் அனைத்தும் தவிடு பொடி ஆகும். தினமும் இந்த கோமதி சக்கரம் மற்றும் சோலிக்கு புதிதாக மலர்களை வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நவகிரக பாதிப்புகள் விலக வாராஹி மந்திரம்

மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய கோமதி சக்கரத்தையும் லக்ஷ்மி சோலியையும் இந்த முறையில் பயன்படுத்தி நவராத்திரி சமயத்தில் வழிபாடு செய்பவர்களுக்கு அடுத்த நவராத்திரி வரை எந்தவித பண கஷ்டமும் ஏற்படாது என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -