- Advertisement -

உங்களுடைய சமையல் அறையும், பூஜை அறையும் மட்டும் சுத்தமாக இருந்துவிட்டால் போதுமா? வீண் விரயம் ஆகாமல் இருக்க இந்த இடமும் சுத்தமாக இருக்க வேண்டும்.

நம்முடைய வீட்டின் சமையலறையும், பூஜை அறையும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்கு ஆன்மீகத்தில் பல குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏனென்றால், இந்த இடங்களில் மகாலட்சுமியும், தானிய லட்சுமியும் வாசம் செய்வதால், இந்த இடங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் உண்டு. ஆனால், இந்த இரண்டு இடங்களை தவிர நம்முடைய வீடு முழுவதும் சுத்தமாக இருக்கவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் தான். இருப்பினும் நம்முடைய வீட்டில் மூன்றாவது ஒரு இடத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது நம்முடைய கடமை. அது எந்த இடம் என்பதைப் பற்றியும், அந்த இடத்தை எந்த தினத்தில், எப்படி சுத்தம் செய்தால் நம் வீட்டில் இருக்கும் பொருளும், பணமும் வீண் விரயம் ஆகாமல் இருக்கும் என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அந்த மூன்றாவது இடம் நம்முடைய வீட்டில் இருக்கும் குளியலறையும், கழிவறையும் தான். அதுவும் குறிப்பாக கழிவறையை சனிக்கிழமை அன்று சுத்தம் செய்வது நல்லது என்று ஜோதிட ரீதியாகவும், வாஸ்து ரீதியாகவும் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே, உங்களது கழிவறையை சுத்தம் செய்ய சனிக்கிழமையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். குளியலறையை தினந்தோறும் சுத்தம் செய்வது கொள்ளலாம். முடியாதவர்கள் குளியலறையும் சனிக்கிழமைகளில் சுத்தம் செய்வதில் தவறு ஒன்றும் இல்லை.

- Advertisement -

குறிப்பாக கழிவறையை நீங்களே சுத்தம் செய்வதாக இருந்தாலும், அல்லது வேலை ஆட்கள் வந்து சுத்தம் செய்வதாக இருந்தாலும் சனிக்கிழமைகளில் சுத்தம் செய்யும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அசுத்தமாக இருக்கும் இடங்கள் எல்லாம் சனி கிரகத்தை குறிப்பதாக ஜோதிடம் சொல்கிறது.

குறிப்பாக சனிக்கிழமைகளில் கழிவறையை சுத்தம் செய்யும்போது வினிகர் வைத்து சுத்தம் செய்ய வேண்டும். இதேபோல் உங்கள் வீட்டில் கழிவறையை வேலையாட்களை வைத்து சுத்தம் செய்பவர்களாக இருந்தால், பின்வரும் விஷயங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இப்படி செய்து வரும் பட்சத்தில், அதிர்ஷ்டம் இல்லாதவர்களுக்குக் கூட, அதிர்ஷ்டமானது தேடி வரும்.

- Advertisement -

உங்கள் வீட்டிற்கு வந்து, உங்களது கழிவறையை சுத்தம் செய்யும் அந்த பணியாளருக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கப்பட்டாலும், சனிக்கிழமை அன்று வந்து கழிவறையை சுத்தம் செய்தவுடன் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும். அந்த நபர் உங்களிடம் மாதச் சம்பளத்திற்குப் பணி புரிபவராக இருந்தாலும் சரி. மாதச் சம்பளத்தை தவிர்த்து, தனியாக ஒரு தொகையை அவருக்கு நீங்கள் மனதார கொடுப்பது மிகவும் சிறப்பானது. அதாவது உங்களால் முடிந்த தொகையை தரலாம்.

இதோடு மட்டும் நிறுத்திவிடாமல், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வரலாம். அந்த உதவி பொருட்களும், கருப்பு நிறத்தில் இருந்தால் இன்னும் சிறப்பு. காலில் அணிந்து கொள்ள கருப்பு நிறப் புதிய செருப்பு. கருப்பு நிற குடை. கருப்பு நிற போர்வை. இப்படிப்பட்ட உபயோகமுள்ள பொருட்களை அவர்களுக்கு நீங்கள் தானமாக கொடுப்பது மேலும் நல்ல பலனை தரும்.

- Advertisement -

கழிவறையை சுத்தம் செய்வதில் கூட இவ்வளவு குறிப்புகளா? என்று கேள்வி எழுப்பாதீர்கள்! இப்படிப்பட்ட  சின்ன சின்ன விஷயங்களை, முறையாகப் பின்பற்றினால், கட்டாயம் வீண் விரையம் குறையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. பிரச்சினை இருக்கிறது ஆனால் ‘எதனால் பிரச்சனை வருகிறது என்று தெரியவில்லை’ இப்படிப்பட்ட குழப்பத்திற்கு எல்லாம் சின்னச் சின்ன மாற்றத்தை நம் வீட்டில் ஏற்படுத்தினால் போதும். அந்த வரிசையில் உங்கள் வீட்டுக்கு கழிவறையை சனிக்கிழமையன்று சுத்தம் செய்து தான் பாருங்களேன்! மாற்றம் தெரிந்தால் இந்த முறையையே பின்பற்றி கொள்ளலாம். உங்களுக்கு மாற்றும் தெரியவில்லை என்றால், இந்த சாஸ்திரத்தை பின்பற்றும் பழக்கத்தை நிறுத்தி கொள்ளலாம். இதில் நமக்கு நஷ்டம் ஆவதற்கு எதுவும் இல்லையே!

இதையும் படிக்கலாமே
உங்களோட சட்டை பாக்கெட் இப்படி இருந்தால், கட்டாயம் பணம் சேரவே சேராது! பணம் சேர இந்த 1 பொருளை உங்க பாக்கெட்டில் எப்போதும் வெச்சுக்கோங்க.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Toilet cleaning Tami. Kalivarai sutham in Tamil. Sutham sugatharam. Sutham in Tamil. Sutham Tamil. Toilet cleaning tips Tamil.

நின்றி – தாந்த்ரீக ஜோதிடர் ஸ்ரீகுரு. வாமனன் சேஷாத்ரி (9840130156)

- Advertisement -