உங்களோட சட்டை பாக்கெட் இப்படி இருந்தால், கட்டாயம் பணம் சேரவே சேராது! பணம் சேர இந்த 1 பொருளை உங்க பாக்கெட்டில் எப்போதும் வெச்சுக்கோங்க.

shirt-packet1

ஒருவருடைய வாழ்க்கை அதிர்ஷ்டமாக இருப்பதற்கும், துரதிஷ்டமாக இருப்பதற்கும் காரணம் இந்த பணம் தான். ஏனென்றால் இந்த கால கட்டத்தில், பணம்தான் ஒருவருடைய வாழ்க்கையை தீர்மானிக்கின்றது. இப்படி இருக்கும் பட்சத்தில், எவரொருவர் பாக்கெட்டில் அதிகப்படியான பணம் இருக்கிறதோ, அவர் அதிர்ஷ்டசாலி ஆகின்றார். எவருடைய பாக்கெட்டில் பணம் இல்லையோ கட்டாயம் அவர்கள் துரதிர்ஷ்டசாலிகள் தான்.

shirt-packet

நீங்கள் அதிர்ஷ்டசாலியாக மாற வேண்டும் என்று நினைத்தால், இந்த ஒரு பொருளை உங்களது பாக்கெட்டில் 48 நாட்கள் வைத்து பாருங்கள். பலன் இருந்தால் தொடர்ந்து வைத்துக் கொள்ளலாம். இதேபோல், கட்டாயம் உங்களுடைய சட்டை பாக்கெட் தெரியாமல் கூட இப்படி இருக்கக் கூடாது! அது எப்படி இருக்கக்கூடாது? இந்த இரண்டு விஷயங்களைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ஆண்கள் தங்களுடைய சட்டை பாக்கெட்டை எப்போதும் கிழிந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தெரியாமல் கூட கிழிந்த பாக்கெட் உள்ள சட்டையை அணிந்து விடாதீர்கள். கிழிந்த பாக்கெட் உள்ள சட்டையை அணிவது ஒரு பக்கம் இருக்க,(கிழிந்த துணியை பொதுவாக சாஸ்திரப்படி போடக்கூடாது) அந்த பாக்கெட்டில் சில்லரை காசுகளை போட்டு, அதை கீழே சிதர விட்டால் மிகவும் தவறு. நாணயங்களை இப்படி சிதற விட்டால், உங்களிடம் லட்சுமிதேவி நிரந்தரமாக தங்க மாட்டாள் என்பதும் உண்மையான ஒன்று.

stitching

ஆக, இனி ஓட்டை பாக்கெட்டாக இருந்தால் அதை தைத்த பின்பு, அந்த சட்டையை போட்டுக் கொள்ளுங்கள். நிறைய பேர் கவனம் இல்லாமல் ஓட்டை பாக்கெட்டில் சில்லரை காசை போட்டு, சிதர விடுவார்கள். இப்படி ஓட்டை பாக்கெட்டில் சில்லரையை போட்டு தவறவிட்டால் கட்டாயம் கஷ்டப்படுவீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களில் சில பேருக்கு இந்த அனுபவம்  இருந்திருக்கலாம். ஆனால், இதன் மூலம் தான் கஷ்டம் வந்தது என்று தெரியாமலும் இருக்கலாம். சற்று சிந்தித்துப் பாருங்கள் இந்த தவறை நீங்கள் செய்திருக்கிறீர்களா என்று! இனிமே கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துகோங்க!. சிலபேர் ஓட்டை பாக்கெட்டில், பல விலை உயர்ந்த பொருட்களையும் தவறவிட்டு உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தயவுசெய்து ஓட்டை பாக்கெட் சட்டையை அணிய வேண்டாம்.

- Advertisement -

இதோடு சேர்த்து ஒரு ஜாதிக்காயை வாங்கி நீங்கள் பணம் வைக்கும் பர்ஸிலோ அல்லது உங்கள் பேண்ட் பாக்கெட்டிலோ சட்டை பாக்கெட்டிலோ எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். நாட்டு மருந்து கடைகளில் இருந்து ஜாதிக்காயை வாங்கிக் கொள்ளவும். பேரம்பேசி வாங்கக்கூடாது. கேட்ட விலை கொடுத்துதான் வாங்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Jathikkai

நீங்கள் வாங்கிய அந்த ஜாதிக்காயை வெள்ளிக்கிழமை அன்றோ அல்லது பௌர்ணமி தினத்தன்றோ உங்களது சட்டை பாக்கெட்டில் வைக்க தொடங்கலாம். சில நாட்கள் வைத்து பாருங்கள்! உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடியதாக இருந்தால், தொடர்ந்து நீங்கள் இந்த முறையை பின்பற்றலாம். ஜாதிக்காயை மாற்ற வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ஒரு வருடத்திற்கு ஒருமுறை மாற்றினாலே போதும்.

அடுத்ததாக, சில பேர் தங்களுடைய பர்ஸ் ராசியான பர்ஸ் என்று சொல்லி, கந்தகோலமாக ஒரு பர்ஸை வைத்திருப்பார்கள். அதாவது அந்தப் பர்ஸ் முழுமையாக கிழித்து போயிருக்கும். இந்தப் பர்ஸை வைத்துக்கொண்டால், ராசி என்று கிழிந்த பர்ஸில் பணத்தை வைப்பார்கள். இடிந்து போன வீட்டில் நீங்கள் தங்குவீர்களா? கிழிந்த பர்ஸில் மகாலட்சுமி எப்படி நிரந்தரமாக தங்குவாள்! நீங்களே யோசித்துப் பாருங்கள். சில பேர் இப்படி கிழிந்த பர்ஸில் தொடர்ந்து பணத்தை வைத்துக் கொண்டு இருப்பார்கள். அந்தப் பணம் சிலசமயங்களில் அந்த பர்ஸோடு சேர்ந்து தொலைந்து போயிருக்கும். எதிர்மறையாக பேசுவதாக அர்த்தமில்லை. சிலபேருக்கு இது அனுபவத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

purse

நீங்கள் எந்த பரிகாரத்தை செய்தாலும், அந்த பரிகாரத்தை லெதர் பர்ஸில் செய்தால், கட்டாயம் பலன் அளிக்காது. ஜாதியையும் லெதர் பர்ஸில் வைக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. முடிந்தவரை லெதர் பர்ஸை  தவிர்த்துவிட்டு, வேறு ஏதாவது பர்ஸை பயன்படுத்தலாம். அதாவது, ஒரு உயிரை வதைக்கப்பட்டு, எடுக்கப்பட்ட தோல் சம்பந்தப்பட்ட பைகளில் மகாலட்சுமியை வைப்பது அவ்வளவு சிறந்ததல்ல என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த தேவியை மனதார வேண்டிக்கொண்டு, தூங்கச் செல்லுங்கள்! நிம்மதியான தூக்கம் உங்கள் கண்களைத் தழுவும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Panam sera Tamil. Panam sera tips Tamil. Panam peruga in Tamil. Panam peruga tips Tamil.