- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

திருப்பதி கோயிலில் இவரை வழிபட்டால் என்ன பலன் தெரியுமா?

திருமாலின் ஏழாவது அவதாரமான ராமாவதாரத்தின் போது ஸ்ரீராமரின் அன்பிற்குரிய தொண்டனாகவும், அவருக்கு நிழல் போலவும் இருந்தவர் ஸ்ரீ ஆஞ்சநேயர் எனப்படும் அனுமன். தேவர்கள், பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்ற அனைத்து தெய்வங்களின் வரங்களை பெற்ற ஆஞ்சநேயர் இறவா வரம் பெற்ற சிரஞ்சீவி ஆவார். வானர தலைவன் கேசரி அஞ்சனா தேவியின் மைந்ததனாக பிறந்தவர் அனுமன். இந்த அனுமன் திருப்பதி திருமலை கோயிலின் முன்பாக அனுமன் இருகரம் கூப்பி வணங்கும் நிலையில் இருப்பதற்கான ஆன்மீக காரணம் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

தனக்கு சிறந்த ஒரு மைந்தன் பிறக்க பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருப்பதி திருமலையில் பெருமாளை நோக்கி தவமியற்றினாள் அனுமனின் தாயான அஞ்சனா தேவி. திருமலையில் இருக்கும் ஏழுமலைகளில் அஞ்சனை தவமியற்றிய மலை அஞ்சனாத்திரி என்கிற பெயரில் அழைக்கப்படுகிறது. குழந்தை பருவத்தில் மிகவும் விளையாட்டுதனம் கொண்ட குழந்தையாக இருந்தார் ஸ்ரீ ஆஞ்சநேயர். அடிக்கடி தாய் அஞ்சனா தேவிக்கு தெரியாமல் வனப்பகுதிக்குள் ஓடி விடுவார் அனுமன்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் அனுமனின் இந்த செயல்களால் போன அஞ்சனா தேவி அனுமனை திருமலை கோயிலுக்கு எதிராக ஸ்ரீனிவாச பெருமாளை வணக்கம் கோலத்தில் அனுமனின் சுட்டித்தனத்திற்கு தண்டனையாக நிற்கவைத்தாள். மேலும் மற்ற வானர வீரர்களின் துணைகொண்டு விண்வெளியை மாயக்கயிறாக திரித்து, மகாசக்தி கொண்ட ஆஞ்சநேயரின் கைககளை கட்டினாள். வெங்கடாசலபதி அருளால் அனுமன் பிறந்ததால் அவரை எப்போதும் வணங்கிய படி இருக்குமாறு அஞ்சனை அனுமனுக்கு ஆணையிட்டாள்.

அன்றிலிருந்து இன்று வரை திருமலை வெங்கடாசலபதி கோயிலின் மகாதுவாரத்திக்கு எதிராக கைகூப்பி பெருமாளை வணங்கும் கோலத்தில் காட்சி தருகிறார் ஸ்ரீ ஆஞ்சநேயர். இதே போன்று தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டப்பட்டிருக்கும் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலிலும் அனுமன் மகாதுவாரத்திற்கு எதிராக பெருமாளை வணங்கும் நிலையில் விக்கிரகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பெருமாளையும் அவரின் சிறிய திருவடி என அழைக்கப்படும் அனுமனையும் வழிபடுபவர்களுக்கு எண்ணியதெல்லாம் ஈடேறும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
திருப்பதி செல்ல முடியாதவர்கள் இங்கு சென்றால் போதும்

இது பன்னிரு மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Tirupati anjaneyar silai in Tamil. It is also called as Anjanadri tirumala in Tamil or Tirupati hanuman in Tamil or Hanuman statue tirumala in Tamil or Tirupati kovil in Tamil.

- Advertisement -