திருப்பதி கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு சென்றாலே போதும் தெரியுமா?

Tirupathi Perumal
- Advertisement -

மனிதனாக பிறந்து விட்ட நாம் நமது வாழ்க்கையில் ஏற்படும் எத்தகைய விடயங்களின் பலன்களையும் இறைவனின் திருவடி பாதங்களில் சமர்ப்பித்து விடுவதால் எத்தகைய வினைகளும் நம்மை பாதிக்காது. எனது திருவடியில் அனைத்தையும் விட்டுவிடுங்கள் என நின்றவாறு திருப்பதி திருமலையில் கோயில் கொண்டிருக்கும் வேங்கடாசலபதி பலருக்கும் விருப்பத்திற்குரிய தெய்வமாக இருக்கிறார். அந்த திருப்பதி பெருமாளுக்கு புதிதாக கட்டப்பட்டிருக்கும் கோயில் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

tirupati

பூமியில் வாழும் மனிதர்களுக்கு செல்வம், புகழ் மற்றும் இன்ன பிற இன்பங்களை அளித்து இறுதியில் வைகுண்ட பதவி எனப்படும் முக்தி நிலையை அருளும் தெய்வமாக திருமால் இருக்கிறார். அப்படி திருமால் வெங்கடாசலபதியாக கோயில் கொண்டிருக்கும் திருப்பதி – திருமலை ஸ்ரீ ஏழுமலையான் சுவாமி திருக்கோயில் உலக புகழ் பெற்றதாகும். நாள் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து ஸ்ரீனிவாச பெருமாளை வழிபட்டு, அவரின் அருள்பெறும் ஒரு கோயிலாக திருப்பதி திருமலை வெங்கடாசலபதி கோயில் இருக்கிறது.

- Advertisement -

elumalayaan

பொதுவாக ஏழுமலைகளின் மீதிருக்கும் திருமலை கோயிலுக்கு நாம் நினைத்த போதெல்லாம் சென்று பெருமாளை வழிபட முடியாது. திருமலை வாசனாகிய பெருமாள் நமக்கு தரிசனம் தரும் விருப்பமிருந்தால் மட்டுமே நாம் அக்கோயிலுக்கு செல்லும் சூழல் ஏற்படும் என்பது பலரின் அனுபவமாக இருக்கிறது. சில பக்தர்கள் தினமும் திருப்பதி பெருமாளை தரிசிக்கும் பேறு பெற்றிருக்கிறார்கள். ஒரு சிலர் வாரமொரு முறை திருப்பதி சென்று பெருமாளை வழிபடுகின்றனர். பெரும்பாலான பக்தர்கள் வருடமொரு முறை புரட்டாசி, மார்கழி போன்ற பெருமாள் வழிபாட்டிற்குரிய மாதங்களில் மட்டுமே சென்று வழிபடும் நிலை இருக்கிறது.

kanyakumari

உலகெங்கிலும் வாழும் இந்துக்களின் புனித வழிபாட்டு தலமாக இருக்கும் திருப்பதி திருமலை கோயிலுக்கு ஆந்திர மாநிலத்தின் தென் பகுதியில் வாழ்பவர்களும், தமிழ் நாட்டின் வடக்கு மாவட்டங்களில் வாழும் மக்களே அடிக்கடி சென்று பெருமாளை தரிசித்து வழிபடும் பாக்கியம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். தமிழ் நாட்டின் பிற பகுதிகளில் வாழும் மக்கள் பலருக்கும் வருடம் ஒரு முறை திருப்பதி செல்வதே சமயங்களில் முடியாமல் போய்விடுகிறது.

- Advertisement -

Kanyakumari-Tirupati

திருப்பதி செல்ல முடியாத ஏக்கம் கொண்ட தமிழகத்தின் தென் மாவட்ட மக்கள் திருமலைவாசனாகிய ஏழுமலையானின் அருளை எப்போதும் பெற முக்கடலும் சங்கமிக்கும் கடலுக்கருகில் கன்னியாக அம்பாள் கோயில் கொண்டிருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் விவேகானந்தர் கேந்திர கட்டிட வளாகத்தில் திருப்பதி பெருமாள் கோயில் கட்டப்பட்டுள்ளது. திருப்பதி திருமலை கோயிலில் என்னென்ன பூஜைகள், ஆகமங்கள் கடைபிடிக்கப்படுகிறதோ அவை இக்கோயிலில் பின்பற்றப்படுகிறது. இக்கோயிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.

இதையும் படிக்கலாமே:
கேது பகவான் பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Tirupati temple kanyakumari in Tamil. It is also called as Kanyakumari perumal kovil in Tamil or Tirupati perumal in Tamil or Thirupathi perumal kovil in Tamil or Kanyakumari sirappugal in Tamil.

- Advertisement -