- Advertisement -

மேஷம்:

வெளியில் செல்லும்போது பள்ளி, கல்லூரி கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பிற்பகலுக்கு மேல் சிலருக்கு எதிர்பாராத சந்திப்பு மகிழ்ச்சி தரும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

ரிஷபம்:

- Advertisement -

புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சகோதரர்களுடன் சிறு அளவில் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும்.

மிதுனம்:

சிலருக்கு எதிர்பாராத பயணங்கள் செல்ல நேரிடும். காலையில் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம். கனிவான பேச்சால் மற்றவர்களைக் கவர்வீர்கள். பிற்பகலுக்கு மேல் பேச்சில் கவனம் தேவை. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

கடகம்:

- Advertisement -

பிற்பகலுக்குமேல் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். காலைப் பொழுது இதமாக விடியும். அனைத்து முயற்சிகளும் உங்களுக்குச் சாதகமாக முடியும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

இன்றைய நல்ல நேர பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

சிம்மம்:

- Advertisement -

வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். காலையில் அன்றாடப் பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். இன்று திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். பிற்பகலுக்குமேல் நீங்கள் எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உயர் பதவியில் இருப்பவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கன்னி:

எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். நீண்டநாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று கிடைக்கக்கூடும். சிலருக்குச் சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

துலாம்:

பணியின் காரணமாக சிலர் வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும்.

விருச்சிகம்:

சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. உற்சாகமாகக் காணப்படுவீர்கள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ தரிசனமும் மகான்களின் ஆசியும் கிடைக்கும்.

தனுசு:

தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும். ஒரு சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனைகளைச் செலுத்தும் வாய்ப்பு உண்டாகும். கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

மகரம்:

மாலையில் குடும்பத்துடன் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று வருவீர்கள். உற்சாகமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாகும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சகோதரர்களுடன் சிறு அளவில் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும்.

கும்பம்:

உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மனதில் உற்சாகம் நிலவும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

மீனம்:

நீண்டநாள்களாக நினைத்திருந்த குலதெய்வ பிரார்த்தனையை இன்று நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

இந்த நாளுக்குரிய ராசி பலன் எல்லோருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

- Advertisement -