- Advertisement -
ராசி பலன் | Indraya rasi palan

Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (14/07/2019): வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்

மேஷம்:

ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

- Advertisement -

ரிஷபம்:

வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகக் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். எதிர்பாராத உறவினர்கள் வருகை உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணம் வாங்கும் யோகம் உண்டாகும்.

மிதுனம்:

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படுகிறது சிலருக்குப் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். திட்டமிட்டு அலைச்சலைக் குறைக்க முயற்சிக்கவும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் உண்டாகும்.

- Advertisement -

கடகம்:

கடக ராசிக்கு இன்றைய ராசி பலன் படி புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. தாய் வழி உறவுகளிடம் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

சிம்மம்:

முற்பகல் வரை காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் வைத்துக்கொள்ளவும். பணவரவும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தன லாபம் ஏற்படும்.

- Advertisement -

கன்னி:

உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தபடி இருக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் பொருள் சேர்க்கை உண்டாகும்.

துலாம்:

இன்று நீங்கள் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் சிறு சிறு தடைகள் ஏற்படும்.

விருச்சிகம்:

எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. நண்பர்களிடம் கனிவாகப் பேசி உங்கள் காரியங்களை திறமையாக முடித்துக் கொள்வீர்கள். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். திடீர் பயணங்கள் ஏற்படக்கூடும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு:

இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. மாலை நேரத்தில் நீங்கள் கேள்விப்படும் செய்தி மனதுக்கு மகிழ்ச்சி தரும். அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சிலர் கடன் வாங்கவும் நேரும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

மகரம்:

தாய்மாமனிடம் எதிர்பார்த்திருந்த காரியம் இன்று அனுகூலமாக முடிவதற்கு வாய்ப்பு உண்டு. வீட்டில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
- Advertisement -

கும்பம்:

அலுவலகத்தில் உங்கள் ஆலோசனைக்கு அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.

மீனம்:

வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் இறைவழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -
Published by