- Advertisement -
ராசி பலன் | Indraya rasi palan

Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (15/07/2019): புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்

மேஷம்:

வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மை அளிக்கும். வாகனத்தில் சிறிய அளவில் பழுது ஏற்பட வாய்ப்பு உண்டு. கனிவாகப் பேசி உங்கள் காரியங்களை முடித்துக் கொள்வீர்கள். இன்று எதையும் பொறுமையாக யோசித்து முடிவெடுப்பது நல்லது. அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

- Advertisement -

ரிஷபம்:

இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு, மனை வாங்க நினைத்த முயற்சி இன்று சாதகமாக முடியும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ தரிசனமும் மகான்களின் ஆசியும் கிடைக்கும்.

மிதுனம்:

மிதுன ராசிக்கு இன்றைய ராசி பலன் படி சுப காரியங்களுக்கான பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். சிலருக்குப் புதியவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். வாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். அவர்களால் பெருமை ஏற்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் ஏற்படும்.

- Advertisement -

கடகம்:

புதிய முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். இன்று காலையில் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

சிம்மம்:

பணவரவும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். வெளியூர்களில் இருந்து நீண்டநாட்களாக எதிர்பார்த்த தகவல் வரும். தந்தை வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க அனுகூலம் உண்டாகும்.

- Advertisement -

கன்னி:

புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். இன்று முயற்சிகளில் வெற்றி உண்டாகும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். கோர்ட் வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

துலாம்:

உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். பிரபலங்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் நன்மைகள் ஏற்படும்.

விருச்சிகம்:

மனதுக்கு இனிய சம்பவங்களைக் கேட்பீர்கள். இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். நீண்டநாள்களாக நினைத்திருந்த குலதெய்வ பிரார்த்தனையை இன்று நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

தனுசு:

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாகும். அன்றாடப் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். மற்றவர்களுடன் வீண்மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசால் ஆதாயம் உண்டாகும்.

மகரம்:

விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாகும்.
- Advertisement -

கும்பம்:

உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சகோதரர்கள் வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். சிலருக்குக் குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளைச் செலுத்தும் வாய்ப்பு உண்டாகும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் அனுகூல பலன்கள் ஏற்படக்கூடும்.

மீனம்:

மனதுக்கு இனிய சம்பவங்கள் நடைபெறும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். உங்கள் தேவை அறிந்து மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துர்கை வழிபாட்டால் நன்மை பெறலாம்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -
Published by