- Advertisement -
ராசி பலன் | Indraya rasi palan

Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (18/06/2019): வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

மேஷம்:

மகிழ்ச்சியான நாள். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை கூடினாலும், சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் ஒத்துழைப்பு தருவார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். கணவன் – மனைவிக்கு இடை யில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்படும்.

- Advertisement -

ரிஷபம்:

இன்று தேவையான பணம் இருப்பதால், திடீரென ஏற்படும் செலவுகளைச் சமாளித்து விடுவீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் யோசனையை ஏற்றுக்கொள்வார். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அலட்டிக்கொள்ளாமல் முடித்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பொறுப்புகளில் கூடுதல் கவனம் தேவை.

மிதுனம்:

இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்குக் கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட யோகம் உண்டு.

- Advertisement -

கடகம்:

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூல மாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிற்பகலுக்கு மேல் அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும்.வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். பேசும்போது பொறுமை அவசியம். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.

சிம்மம்:

புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்தும் வாய்ப்பும் சிலருக்குக் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் எதிர்பாராத வகையில் உறவினர்களின் வருகையும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

- Advertisement -

கன்னி:

சிலருக்கு வேலையின் காரணமாக பயணம் மேற்கொள்வீர் . எதிர்பார்த்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணியை கண்டு பாராட்டுவார்கள். குடும்பத்தில் சிக்கல்கள் வந்து விலகும் , அதனால் செலவுகள் ஏற்படலாம் . அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

துலாம்:

எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும் சொத்து வகையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

விருச்சிகம்:

வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

தனுசு:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பூராடம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.

மகரம்:

எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகை ஆதாயம் தரும்.
- Advertisement -

கும்பம்:

இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்

மீனம்:

அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -
Published by