- Advertisement -
ராசி பலன் | Indraya rasi palan

Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (21/07/2019): கடன் தொகை திரும்பக் கிடைக்கும்

மேஷம்:

பிற்பகலுக்குமேல் புதிய காரியங்களில் ஈடுபட வேண்டாம். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

- Advertisement -

ரிஷபம்:

புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். காலையில் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல நண்பர்களின் தொடர்பு உண்டாகும்.

மிதுனம்:

இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். பரபரப்பாகச் செயல்படுவீர்கள். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்குத் திடீர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

- Advertisement -

கடகம்:

கோர்ட் வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பேசும்போது பொறுமை அவசியம். தந்தை வழி உறவுகளால் நன்மை ஏற்படும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

சிம்மம்:

ஆனாலும், அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.

- Advertisement -

கன்னி:

தேவையான உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் சந்திப்பு மனதுக்கு மகிழ்ச்சி தரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் வேலைகள் அடுக்கடுக்காக வந்தாலும் அழகாகச் சமாளிப்பீர்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

துலாம்:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அலுவலகப் பணிகளில் உங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தவும். பிற்பகலுக்கு மேல் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

விருச்சிகம்:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மனம் உற்சாகமாகக் காணப்படும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

தனுசு:

உறவினர்கள் வருகை வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்தும். அரசாங்க காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும், உற்சாகமாகச் செயல்படுவீர்கள். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம்:

இன்று நீங்கள் தொடங்கும் காரியங்கள் அனைத்தும் சாதகமாக முடியும். பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். நீண்டநாளாக எதிர்பார்த்துக் காத்திருந்த தகவல் வந்து சேரும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.
- Advertisement -

கும்பம்:

சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனம் உற்சாகமாகக் காணப்படும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

மீனம்:

அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்கள் நிறைவேறும். தாய் வழியில் நன்மைகள் நடக்கும். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகாரிகளுடன் பேசும்போது பொறுமை அவசியம்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -
Published by