- Advertisement -
ராசி பலன் | Indraya rasi palan

Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (24/05/2019): எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும்

மேஷம்:

தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சங்கடங்கள் ஏற்படும்.

ரிஷபம்:

இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. ஆனாலும், புது முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

- Advertisement -

மிதுனம்:

இன்று நீங்கள் அன்றாடப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். நேரத்துக்குச் சாப்பிட முடியாதபடி வேலைச் சுமை இருந்து கொண்டே இருக்கும். ஆனால், பிற்பகலுக்குமேல் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். தேவைப்படும் பணம் கடனாகக் கிடைக்கும். நண்பர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

கடகம்:

இன்று பிற்பகலுக்குள் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பயணங்களைத் தவிர்க்கவும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் தாய்மாமன் வகையில் நன்மை ஏற்படும்.

- Advertisement -

சிம்மம்:

மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பணியின் காரணமாக சிலர் வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் வீண் செலவுகள் உண்டாகும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணிகளில் கவனமாக இருக்கவும்.

கன்னி:

கன்னி ராசிக்கு இன்றைய ராசி பலன் படி அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத வகையில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சிலருக்கு வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தினருக்குப் புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

- Advertisement -

துலாம்:

இன்று உங்கள் ராசிக்கு பலன் தரக்கூடிய கிரகங்கள் சுப கிரகங்களாக இருப்பதால், எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும்.

விருச்சிகம்:

மனம் உற்சாகமாகக் காணப்படும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

தனுசு:

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாய்வழியில் நன்மைகள் உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட யோகம் உண்டாகும்.

மகரம்:

உற்சாகமான நாள். உங்கள் தேவையறிந்து நண்பர்கள் உதவி செய்வார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
- Advertisement -

கும்பம்:

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அரசு அதிகாரகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. புது முயற்சிகள் வேண்டாம். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

மீனம்:

சகோதரர்கள் வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் நன்மை ஏற்படக்கூடும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -
Published by