- Advertisement -

மேஷம்:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சுபகாரியங்கள் ஏற்பாடாகும். தெய்விகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேருமஎதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் நன்மை ஏற்படும்.

ரிஷபம்:

வீண் அலைச்சலுடன் ஆதாயமும் உண்டாகும். வெளியூர்களில் இருந்து சுபச் செய்திகள் வரும். பிள்ளைகளை அனுசரித்துச் செல்லவும். பிற்பகலுக்குமேல் ஒரு சிலருக்கு சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்படும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

- Advertisement -

மிதுனம்:

பிற்பகலுக்கு மேல் நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

கடகம்:

சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

- Advertisement -

சிம்மம்:

மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. மனம் உற்சாகமாகக் காணப்படும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ தரிசனமும் மகான்களின் ஆசியும் கிடைக்கும்.

கன்னி:

ஒரு சிலருக்கு வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். நண்பர்களாலும், உறவினர்களாலும் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உள்ளது. மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மைகள் ஏற்படும்.

- Advertisement -

துலாம்:

பிற்பகல்வரை மனதில் இனம் தெரியாத சஞ்சலம் இருந்தாலும் அடுத்தடுத்து வரும் வேலைகளின் காரணமாக அதை அவ்வளவாகப் பொருட்படுத்தமாட்டீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் அனுபவ அறிவு பெரிதும் பாராட்டப்படும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும்.

விருச்சிகம்:

பயணத்தின்போது கவனமாக இருக்கவேண்டியது அவசியம். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் வீண் செலவுகள் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

தனுசு:

உறவினர்களிடம் இருந்து சுபச் செய்தி வரும். மனதில் உற்சாகம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் உங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தவும். கொடுத்த கடன் திரும்ப வரும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

மகரம்:

மாலையில் உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். இன்று உங்களுக்கு மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும். மனம் உற்சாகமாகக் காணப்படும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரியங்களில் சிறு சிறு தடைகளைச் சந்திக்க நேரும்.
- Advertisement -

கும்பம்:

வீண் அலைச்சல் உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளியூர்களில் இருந்து சுபச் செய்திகள் வரும்.புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் தடை தாமதம் ஏற்படும்.

மீனம்:

மனம் உற்சாகமாகக் காணப்படும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -
Published by