- Advertisement -
- Advertisement -

பணக்காரனோ, ஏழையோ யாராக இருந்தாலும் அவரவர் தகுதிக்கு ஏற்ப அவசர தேவைக்கோ அல்லது ஆடம்பர செலவுகளுக்கோ கடன்களை வாங்கி வைத்து விடுகிறோம். அதை திருப்பி கட்டுவதில் தான் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பாராத பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். கிரக சூழ்ச்சியால் கடன் வாங்கி தவிப்பவர்கள், அதிலிருந்து விடுபடுவதற்கு குலதெய்வ அருளை எப்படி பெறுவது? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவலை இப்பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.

கிரகங்களின் வலிமையால் நமக்கு ஆசைகள் தூண்டப்பட்டு ஆடம்பர செலவுகளுக்கு கடன்களை வாங்க வைத்து சூழ்ச்சிகளில் சிக்க வைக்கிறது. சிலருக்கு அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட கடன் வாங்க வேண்டிய நிலை நீடிக்கிறது. எப்படி இருந்தாலும் கடன் நம்மை நிம்மதி இல்லாமல் செய்து நம் வாழ்க்கையையும், உழைப்பையும் பணயம் வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளுகிறது.

- Advertisement -

இந்த கழுத்தை நெரிக்கக்கூடிய கடன் பிரச்சனையை தீர்க்கக் கூடிய சக்தி குலதெய்வத்திற்கு உண்டு. உங்களுடைய குலதெய்வத்தை வேண்டுங்கள், விரைவிலேயே கடனை அடைத்து விடலாம். குலதெய்வம் தெரியாதவர்கள் காஞ்சி காமாட்சி அல்லது முருகரை குலதெய்வமாக ஏற்று வழிபாடு செய்யலாம். வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரையில் இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

உங்கள் குலதெய்வத்தை முன்வைத்து மல்லிகை பூக்களால் அலங்காரம் செய்து பூஜை அறையில் அமர வையுங்கள். பின்னர் குலதெய்வத்திற்கு கலசத்தில் தீர்த்தம் வைக்க வேண்டும். சாதாரண தண்ணீர் வைத்தாலும் சரி தான், அல்லது பச்சை கற்பூரம், ஏலக்காய், துளசி போன்ற பொருட்களை போட்டு தெய்வீக தீர்த்தம் செய்து படைத்தாலும் நன்மை உண்டாகும். பின்னர் குலதெய்வத்திற்கு நைவேத்தியம் படைக்க சர்க்கரை பொங்கல் போதுமானது.

- Advertisement -

சர்க்கரைப் பொங்கல் தயார் செய்து வாழை இலையில் வைத்து படைத்து, தீர்த்தம் வைத்து, பின்னர் நெய் தீபம் ஏற்ற வேண்டும். நெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி வைத்து, குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு செம்பு அல்லது பித்தளை தாம்பாளம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி அளவிற்கு கல் உப்பை எடுத்து கையில் வைத்துக் கொண்டு, கீழ் வரும் இந்த மந்திரத்தை சொல்லி தாம்பாளத்தில் போட்டு தட்டு முழுவதும் பரப்பிக் கொள்ள வேண்டும்.

கடன் தீர மந்திரம்:
ஓம் ஸ்ரீம் ஓம்!!!

இதையும் படிக்கலாமே:
மனிதனின் ஏழு திரைகள்

இந்த மந்திரத்தை சொல்லி உப்பை சேர்த்த பின்னர், உங்களுக்கு எவ்வளவு கடன் தொகை இருக்கிறதோ, அந்த தொகையை உப்பின் மீது வலது கை ஆள்காட்டி விரலால் எழுத வேண்டும். பத்தாயிரம் ரூபாய் கடன் வைத்திருந்தால் பத்தாயிரம் என்று எழுதுங்கள். லட்ச ரூபாய் கடன் இருந்தால் ஒரு லட்சம் என்று எழுதுங்கள். இப்படி உங்கள் கடன் தொகை எழுதி வைத்து, மேற்கூறிய ஸ்ரீம் மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். பின்னர் மறுநாள் வரை அந்த உப்பு தட்டு பூஜை அறையில் இருக்கட்டும். மறுநாள் சுப ஹோரை ஆக பார்த்து அந்த உப்பை யாராவது ஒருவருக்கு தானம் கொடுத்து விடுங்கள். உப்பை ஒருபோதும் வெள்ளிக்கிழமையில் தானம் செய்யக்கூடாது, மற்ற கிழமைகளில் தானம் செய்யலாம்.

- Advertisement -