- Advertisement -
வீட்டு குறிப்புகள்

சின்ன சின்ன வீட்டு குறிப்புகள்

- Advertisement -

இதெல்லாம் ஒரு விஷயமா என்று யோசித்தாலும் திடீரென்று நமக்கு தேவைப்படும் பொழுது அந்த விஷயங்கள் தோன்றாது, அப்படிப்பட்ட விஷயங்களால் நமக்கு பல நேரங்களில் நேரம் மிச்சமாகும் மேலும் வேலையும் சுலபமாகும் அப்படியே நம்முடைய வேலையை சுலபமாக்குவதற்கும் நேரத்தை மிச்சப்படுத்துவதற்கும் சில எளிமையான வீட்டு குறிப்புகளை பற்றி தான் இந்த வீட்டு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்

டீ போடும் பாத்திரத்தை அனைவருக்கும் கழுவுவது எரிச்சலான ஒன்றுதான். அதை எளிதாக விளக்குவதற்கு டீ போட்ட உடனே டீ பாத்திரத்தில் உள்ள அந்த டீ தூளை வைத்து நன்கு தேய்த்து விட்டு தண்ணீர் விட்டு கழுவினால் பாத்திரம் உடனடியாக சுத்தம் ஆகும்.

- Advertisement -

குழம்பிற்கு தேவையான புளியை ஊற வைக்க மறந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? உடனடியாக புளிக்கரைசல் வேண்டும் என்றால் சுடு தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு அந்த தண்ணீரில் புளியை ஐந்து நிமிடம் ஊற வைத்தால் புளி கரைசல் உடனடியாக ரெடி ஆகிவிடும். புளியை கரைப்பதற்கும் எளிமையாக இருக்கும்.

தேங்காய் எண்ணெய் அதிகமாக நாம் வாங்கும் பொழுது அடியில் அழுக்கு போல தங்கிவிடும். அப்படி தங்காமல் இருக்க ஐந்து மிளகுகளை போட்டு விட வேண்டும்.தேங்காய் எண்ணெய் வாங்கும் பொழுது எப்படி இருந்ததோ கடைசி வரைக்கும் அப்படியே மாறாமல் இருக்கும்.

- Advertisement -

முட்டையை வேகவைத்து உடைக்கும் பொழுது சில பேருக்கு உடைந்து உடைந்து வரும். அவசர அவசரமாக சூடாக இருக்கும் பொழுது உரித்தால் இப்படித்தான் ஆகும். அதற்கு பதிலாக மிதமான சூட்டில் அந்த வேக வைத்த முட்டை இருக்கும் போது ஒரு டம்ளரில் போட்டு நன்கு குளுக்கி விட்டால் முட்டை ஓடானது அழகாக தனியே கலண்டு வந்து விடும்.

உருளைக்கிழங்கு, வாழைக்காய் மற்றும் கத்தரிக்காய் போன்றவற்றை நறுக்கும் பொழுது கருப்பாக இருக்கும். அப்படி கருப்பாகாமல் நிறம் மாறாமல் அப்படியே இருப்பதற்கு நறுக்கிய காய்கறிகளை தண்ணீரில் போட்டு விட்டால் அப்படியே நிறம் மாறாமல் இருக்கும்.

- Advertisement -

உறை மோர் ஊற்றும் பொழுது சில பேருக்கு தயிர் மிகவும் தண்ணியாக இருக்கும். சில பேருக்கு கடையில் விற்கும் கெட்டி தயிர் போன்று இருந்தால் மிகவும் பிடிக்கும். அப்படி தயிர் வருவதற்கு 500 மில்லி பாலை தண்ணிர் ஊற்றாமல் அப்படியே காய்ச்சி விட வேண்டும். பிறகு நன்கு ஆற வைக்க வேண்டும். ஆறிய பாலில் உரை மோர் ஊற்றிவிட வேண்டும். அப்படி ஊற்றிவிட்டு காலையில் பார்த்தால் தயிரானது கடையில் விற்கும் கெட்டி தயிர் போன்று இருக்கும்.

இதையும் படிக்கலாமே: சிங்க் பாத்திரங்களை எளிமையாக தேய்த்து முடிக்க வீட்டு குறிப்பு

மிகவும் எளிமையான இந்த வீட்டு குறிப்புகள் நம்முடைய வீட்டு வேலைகளை சுலபமாக்க உதவும் விருப்பம் இருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -