- Advertisement -

வளமான வாழ்க்கை அருளும் வளர்பிறை பஞ்சமி

- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையை சிறப்பாக வாழ வேண்டும், எந்தவித குறையும் இல்லாமல் வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். ஆனால் இது பலருக்கும் நடக்காது. அப்படி நடப்பதற்காக எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றி அடையவும் பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கவும் சிறப்பான வாழ்க்கை வாழவும் வளர்பிறை பஞ்சமி நாளன்று நாம் இந்த ஒரு வழிபாட்டை செய்தால் போதும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வளமான வாழ்க்கை அருளும் வளர்பிறை பஞ்சமி

வாராகி அம்மனுக்கு உரிய திதியாக பஞ்சமி திதி திகழ்கிறது. இந்த பஞ்சமி வளர்பிறை பஞ்சமி தேய்பிறை பஞ்சமி என்று இரண்டு முறை வரும். மாசி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை பஞ்சமி என்பது மார்ச் மாதம் 3ம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 4ம் தேதி இரவு 8:17 வரை இருக்கிறது. இது செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வருவது கூடுதல் சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த பஞ்சமி திதி அன்று நம்முடைய இஷ்ட தெய்வத்தை நினைத்து நாம் செய்யக்கூடிய ஒரு வழிப்பாடானது நம்முடைய வாழ்க்கையை மிகவும் சிறப்பாக மாற்றும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை அன்று ராகு காலம், எமகண்ட நேரத்தை தவிர்த்து மீதமிருக்கக்கூடிய நேரத்தில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்ய வேண்டும். அந்த நேரத்தில் வீட்டு பூஜை அறையில் ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். கிழியாத நல்ல வெற்றிலையாக ஒரு வெற்றிலையை எடுத்து அதை மஞ்சள் கலந்த தண்ணீரில் கழுவி சுத்தமாக துடைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஐந்து மிளகு, ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் கஸ்தூரி மஞ்சள் தூளை சேர்த்து அதனுடன் ஏலக்காய் தூள், பட்டை தூள், ஜவ்வாது, பச்சை கற்பூரம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்து அதனுடன் பன்னீர் அல்லது தண்ணீர் ஊற்றி குழைத்து தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தனியாக இரண்டு துண்டு பச்சை கற்பூரத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு ஒரு விரிப்பை விரித்து அதில் அமர்ந்து கொண்டு நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் வெற்றிலையை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு துளசி இலை குச்சி, வில்வ இலை குச்சி, மருதாணி இலை குச்சி போன்ற குச்சிகளில் ஏதாவது ஒரு குச்சியை எடுத்து நாம் தயார் செய்து வைத்திருக்கும் மஞ்சள் கலவையை அந்த குச்சியால் தொட்டு வெற்றிலையில் 520 என்று எழுதி அதற்கு பக்கத்திலேயே மகாலட்சுமியின் பீஜ மந்திரமான “ஸ்ரீம்” என்னும் மந்திரத்தை எழுத வேண்டும்.

- Advertisement -

பிறகு சிறிது நேரம் அதை உலர விடுங்கள். அது நன்றாக காய்ந்த பிறகு அதற்கு மேல் நாம் எடுத்து வைத்திருக்கும் ஐந்து ரூபாய் நாணயத்தையும் வைக்க வேண்டும். இந்த ஐந்து ரூபாய் நாணயத்தையும் மஞ்சள் கலந்த தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு நாம் எடுத்து வைத்திருக்கும் அந்த ஐந்து மிளகையும் ஒவ்வொரு மிளகாக பணவரவு அதிகரிக்க வேண்டும், ஐஸ்வரியம் பெருக வேண்டும், சிறப்பான வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் கூறி ஒவ்வொரு மிளகாக வைக்க வேண்டும். பிறகு இதனுடன் பச்சை கற்பூரத்தையும் சேர்த்து வைத்து மடித்து உங்களுடைய வலது கையில் வைத்துக்கொண்டு உங்களுடைய இஷ்ட தெய்வம் யாரோ அவர்களை மனதார நினைத்துக் கொள்ளுங்கள்.

வாராகி அம்மனை நினைத்தும் வழிபாடு செய்யலாம். செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப்பெருமானை நினைத்தும் இந்த வழிபாட்டை செய்யலாம். வேறு ஏதாவது தெய்வங்கள் உங்களுக்கு பிடித்திருந்தாலோ அல்லது உங்களுடைய குலதெய்வத்தின் பெயரை கூறியோ இந்த வழிபாட்டை செய்துவிட்டு இதை அப்படியே பூஜை அறையில் இருக்கக்கூடிய உங்களுடைய இஷ்ட தெய்வத்தின் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். ஐந்து நாட்கள் இது அப்படியே இருக்கட்டும். ஐந்தாவது நாள் காலையில் இதை எடுத்து கால் படாத இடத்திலோ அல்லது ஓடுகின்ற தண்ணீரிலோ போட்டு விட வேண்டும். ஐந்து ரூபாய் நாணயத்தை படம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். இப்படி நாம் செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த பணத்தடைகளும் காரிய தடைகளும் நீங்குவதோடு சிறப்பான ஐஸ்வர்யம் நிறைந்த வாழ்க்கையை வாழ முடியும்.

இதையும் படிக்கலாமே:வீண் செலவுகள் குறைந்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட

சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கு எடுக்கக்கூடிய முயற்சிகளோடு இஷ்ட தெய்வ வழிபாட்டையும் இப்படி செய்வதன் மூலம் நம்முடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் சகல ஐஸ்வர்யத்தோடு சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -