- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

வலம்புரிச் சங்கை இப்படி பிரதிஷ்டை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆழ் கடலில் இருந்து எடுக்கப்படும் ஒரு பொருள் தான் சங்கு. கடலில் இருந்து எடுக்கப்படும் எல்லா பொருட்களுக்கும் எதிர்மறை ஆற்றலை நீக்கும் சக்தி உள்ளது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். பாற்கடலிலிருந்து பிறந்தவள் மகாலட்சுமி. அதே பாற்கடலில் பிறந்த இந்த சங்கினை மகாலட்சுமியின் சகோதரன் என்றும் கூறுவார்கள். அதுமட்டுமல்லாமல் இதிலிருந்து ஒலிக்கப்படும் ஓம்கார ஒலியானது நம்மைச் சுற்றி எந்த கெட்ட சக்தியையும் அண்டவிடாது. இதனால்தான் வீட்டில் கண்டிப்பாக சங்கு இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். குறிப்பாக சங்கில், வலம்புரி சங்காக இருந்தால் இன்னும் விசேஷம். இந்த வலம்புரிச் சங்கானது சிறிய அளவில் இருந்தால் எந்த பூஜையும் செய்ய வேண்டாம். உங்கள் வீட்டில் பணம் வைக்கும் பெட்டியிலோ அல்லது அலமாரியிலோ வைத்துக் கொள்ளலாம். அளவில் பெரியதாக உள்ள வலம்புரிச் சங்காக இருந்தால் அதை கண்டிப்பாக உங்கள் வீட்டு பூஜை அறையில் பிரதிஷ்டை செய்து தான் வைக்க வேண்டும். இந்த வலம்புரிசங்கினை உங்கள் வீட்டு பூஜை அறையில் எப்படி பிரதிஷ்டை செய்து பூஜை செய்யலாம் என்பதை பற்றிய பதிவுதான் இது.

வலம்புரி சங்கினை புதியதாக வாங்கி வைத்து உள்ளவர்களாக இருந்தால் முதலில் அதை பச்சை பாலை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். அடுத்ததாக சுத்தமாக நீரில் நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். வலம்புரிச் சங்கிற்கு மூன்று என்ற கணக்கில் சந்தனமும் குங்குமமும் இட்டுக் கொள்ளலாம். அதன்மேல் பூவுடன், துளசி இலையையும் வைக்கவேண்டும். வலம்புரி சங்கின் உள்ளே நாணயங்கள், உதிரிப்பூ துளசி இலைகளை போட்டு தண்ணீரால் நிரப்ப வேண்டும். வலம்புரி சங்கை தண்ணீர் இல்லாமல் வெற்றிடமாக வைக்கக்கூடாது. சங்கில் ஊற்றப்பட்ட தண்ணீரை உங்கள் வீடு முழுவதிலும் தெளிப்பது உங்கள் வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை தரும். உங்களால் முடிந்தால் தங்க நாணயத்தையோ அல்லது வெள்ளி நாணயத்தையோ அந்த வலம்புரி சங்குனுல் போட்டு வைப்பது இன்னும் சிறப்பானது.

- Advertisement -

ஒரு பித்தளை தாம்பாளலத்திலோ அல்லது செம்பு தாம்பாளத்திலோ பச்சரிசியை பரப்பி அதன்மேல், அலங்கரிக்கப்பட்ட இந்த வலம்புரி சங்கினை பிரதிஷ்டை செய்து தீபாராதனை காட்ட வேண்டும். நீங்கள் பிரதிஷ்டை செய்யும் வலம்புரி சங்கின் கூர் பகுதி கிழக்கு நோக்கியும், தலைப்பகுதி மேற்கு நோக்கியும் இருக்க வேண்டும். இப்படி நீங்கள் முதல்முறையாக வலம்புரி சங்கின் பூஜையை ஆரம்பிப்பதாக இருந்தால் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் தொடங்குவது மிகவும் சிறப்பான ஒன்று.

தினம்தோறும் வலம்புரி சங்கிற்கு பூஜை செய்ய முடியவில்லை என்றாலும் வாரம் ஒருமுறையாவது துடைத்து சுத்தம் செய்து பூஜை செய்வது நன்மை தரும். வலம்புரி சங்குனுல் ஊற்றி வைத்து இருக்கும் தண்ணீரை வாரத்திற்கு ஒரு முறையாவது மாற்ற வேண்டும். தாம்பூலத்தில் பரப்பி வைத்திருக்கும் பச்சரிசியை மாதத்திற்கு ஒருமுறை மாற்றிவிடுங்கள்.

- Advertisement -

மகாலட்சுமியின் அம்சமான வலம்புரி சங்கினை கவனிக்கப்படாமல் வீட்டின் ஒரு மூலையில் போட்டு வைக்கக்கூடாது. அது நம் வீட்டிற்கு நல்லது அல்ல. வலம்புரி சங்கினை வீட்டில் வைத்து தொடர்ந்து பூஜை செய்து வருபவர்களின் வளர்ச்சியை நம்மால் வெகுவிரைவில் உணர முடியும்.

இதையும் படிக்கலாமே
தேய்பிறை அஷ்டமியில் இந்த கடவுளை வணங்கினால் கடன் நீங்கி பணம் பெருகுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Valamburi sangu in Tamil. Valamburi sangu details in Tamil. Valamburi sangu palangal in Tamil. Valampuri sangu benefits in Tamil.

- Advertisement -