
கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் முருகப் பெருமானை வழிபாடு செய்வார்கள். அதுவும் முருகப்பெருமானுக்குரிய கிழமையான செவ்வாய்க்கிழமை அன்றுதான் வழிபாடு செய்வார்கள். அப்படிப்பட்ட செவ்வாய் பகவானுக்கு அங்காரகன் என்ற பெயர் வருவதற்கு காரணமே விநாயகப் பெருமான்தான் என்று கூறப்படுகிறது. விநாயகப் பெருமானை சதுர்த்தி திதியில் வழிபட்டதால் தான் செவ்வாய் பகவானுக்கு அங்காரகன் என்ற பெயர் வந்ததாம்.
அப்படிப்பட்ட செவ்வாய்க்கிழமை அன்று சதுர்த்தி திதி வருவதால் அது மேலும் விசேஷமாக கருதப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் செவ்வாய் பகவானுக்குரிய எண்ணாக ஒன்பது திகழ்கிறது. நாளைய தினம் தேதியும் 9 என்பதால் அது மேலும் பல மடங்கு சிறப்பை தரக்கூடியதாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த நாளைய தினத்தில் செய்யக்கூடிய ஒரு எளிமையான தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு இரண்டு பொருட்கள் தேவைப்படும். ஒன்று வசம்பு, மற்றொன்று நெய். பொதுவாகவே வசம்பு என்பது பணத்தை ஈர்க்கும் சக்தி உடையதாக திகழ்கிறது. எந்த பரிகாரமும் செய்யாமலேயே வீட்டில் வசம்பை மட்டும் வாங்கி வைத்தாலேயே அந்த இடத்தில் பண வரவு என்பது அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட வசம்பை வைத்து நாம் பரிகாரம் செய்தோம் என்றால் கண்டிப்பான முறைகள் பணவரவிற்கு எந்தவித தடையும் இல்லாமல் இருக்கும் என்றுதான் கூற வேண்டும். இந்த வசம்பை நாளைய தினம் வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நாம் செய்யலாம். வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து அந்த தீபத்தில் இந்த வசம்பை காட்டி நன்றாக எரித்து கரியாக்கிக் கொள்ளுங்கள்.
பிறகு அதனுடன் மகாலட்சுமி தாயாருக்குரிய பொருளாக கருதப்படும் நெய்யை கலந்து நன்றாக குழைத்து மையாக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த மையை பயன்படுத்தி உங்கள் வீட்டு நிலை வாசல் கதவின் பின்புறமாக சில வார்த்தைகளை எழுத வேண்டும். முதலில் விநாயகப் பெருமானுக்கு உரிய சின்னமான ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து கொள்ளுங்கள்.
அடுத்தது முருகப்பெருமானுக்கு உகந்த பிரணவ மந்திரமான ஓம் என்பதையும் எழுதிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக விநாயகப் பெருமானுக்குரிய ஏஞ்சல் எண்ணெய் எழுதிக் கொள்ள வேண்டும். அந்த எண் 4 6 4 2 9. இப்படி எழுதிய கொள்ள வேண்டும். இது யார் கண்ணிற்கும் தெரியாத அளவிற்கு எழுதிக் கொள்ளுங்கள். இதை மறுபடியும் அடுத்த மாதம் சதுர்த்தி திதி வரும் பொழுது நிறைவாசல் கதவை தொடைத்து விட்டு மறுபடியும் எழுத வேண்டும்.
இப்படி நாம் ஒவ்வொரு வளர்பிறை சதுர்த்தி தினத்திலும் செய்யும் பொழுது முருகப்பெருமான் மற்றும் விநாயகப் பெருமானின் அருளால் நம் வீட்டில் பண வரவிற்கு எந்தவித தடையும் இல்லாமல் இருக்கும்.
இதையும் படிக்கலாமே: தீரா கடன் தீர துர்க்கை வழிபாடு
மிகவும் எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தை வீட்டில் இருக்கும் யார் வேண்டுமானாலும் முழு நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம்.