- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதீரா கடன் தீர துர்க்கை வழிபாடு

தீரா கடன் தீர துர்க்கை வழிபாடு

- Advertisement -

நாம எல்லாருக்குமே கடன் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. சில கடனை வாங்குவோம், வாங்கிய உடனே திருப்பித் தருவோம். அப்படி இல்லை என்றாலும் ஒரு சில மாதங்கள் வட்டி கட்டி விட்டு, வாங்கிய அசல் தொகையை திருப்பிக் கொடுத்து விடுவோம். ஆனால் ஒரு சில கடனை வாங்கிய நேரம் அந்த கடனை திருப்பி கட்ட விடாமல் தடுக்கும். வட்டிக்கு மேல் வட்டி குட்டி போடும். அசல் தொகையை திருப்பி கொடுக்கவே முடியாது. இப்படிப்பட்ட பிரச்சனையில் நீங்கள் சிக்கி இருந்தால் உங்களுக்கான பரிகாரம்தான் இது.

கடன் தீர்க்கும் துர்க்கை அம்மன் வழிபாடு

உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சனையிலேயே எது மிகப் பெரிய அளவில் தொந்தரவு கொடுக்கிறது. நிறைய வட்டியை எந்த கடனுக்கு கொடுக்குறீங்க. அந்த கடனை உங்களுடைய மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். அந்த நபருக்கு சீக்கிரம் கடனை திருப்பி தர வேண்டும் என்று பிரார்த்தனை வைத்துக்கொண்டு, இந்த வேண்டுதலை செய்யவும்.

- Advertisement -

9 வாரம் செவ்வாய்க்கிழமைகளில் ராகு கால நேரத்தில், துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று செவ்வரளி பூக்களை வாங்கி கொடுத்து, ஒரு மண் அகல் விளக்கில் கடுகு எண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு, தீபம் ஏற்ற வேண்டும். கடுகு எண்ணெய்க்கு அபரிவிதமான சக்தி இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

தீபம் ஏற்றி வைத்துவிட்டு துர்க்கை அம்மனுக்கு நேர் எதிராக மண்டி போட்டு, அதாவது முட்டி போட்டு துர்க்கையை இரண்டு கைகளை ஏந்தியபடி வேண்டுதல் வையுங்கள். ஒன்பது வாரம் செவ்வாய்க்கிழமை விடாமல் இந்த விளக்கை ஏற்றினால், உங்களுக்கு நிச்சயம் கடன் சுமை குறையும்.

- Advertisement -

ஆண்கள் பெண்கள் யார் வேண்டும் என்றாலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம் வீட்டு பெண்கள் கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் இருக்கும்போது கணவர் இந்த விளக்கை போடலாம் தவறு கிடையாது. நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து விட்டு கடனை திருப்பித் தருவதற்கு என்னென்ன முயற்சிகள் இருக்கிறதோ அதை இடைவிடாமல் பின்பற்றுங்கள். முயற்சிகளில் வெற்றி கிடைத்துவிடும்.

செவ்வாய்க்கிழமை விளக்கு போட்டு விட்டு, துவரம் பருப்பால் செய்த கடுகு எண்ணெயால், செய்த சாப்பாட்டை சாப்பிட வேண்டும். கடுகு எண்ணெய் உங்கள் ஆரோக்கியத்திற்கு செட்டாகுமா, என்பதை ஒரு முறை மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக் கொள்ளுங்கள். உடல் உபாதைகள் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் கடுகு எண்ணெய் சாப்பிடலாம். ஏதாவது மருந்து மாத்திரை சாப்பிடுறீங்க. உடல் ஆரோக்கிய பிரச்சனை இருக்கிறது என்றால் ஒரு முறை மருத்துவரை, ஒரு வார்த்தை கேட்டுக் கொள்வது நல்லது.

- Advertisement -

சாதாரணமாக துவரம் பருப்பில் செய்த சாம்பார், பருப்பு, ஏதோ ஒரு சமையல். அதில் 1 ஸ்பூன் கடுகு எண்ணெயில், கடுகு, கருவாப்பிலை வரமிளகாய் தாளித்துக் கொட்டி சாப்பிட்டாலும் உங்கள் கடன் பிரச்சனை குறையும். விளக்கு போட்டுவிட்டு பிறகு இந்த சாப்பாட்டை செவ்வாய்க்கிழமை சாப்பிடும்போது இரட்டிப்பு மடங்கு பலனை பெற முடியும் என்கிறது சாஸ்திரம்.

இதையும் படிக்கலாமே: வெற்றி தரும் முருகப்பெருமான் மந்திரம்

எளிமையான பரிகாரம் தான் எல்லோராலும் செய்யப்படக்கூடிய அளவில் இருக்கக்கூடிய பரிகாரம் தான். இதற்கு அதிகமாக செலவாக போவது கிடையாது. இதனால் எந்த பாதிப்பும் உங்களுக்கு இல்லை. ஆனால் நல்லது நடந்தால் நிம்மதியான வாழ்க்கை கிடைப்பது மட்டும் 100% உறுதி. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த எளிமையான வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்