- Advertisement -
- Advertisement -

வறுமை நிலையில் இருப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் எப்படியாவது முன்னேறி செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படி ஆசைப்பட்டால் மட்டும் பத்தாது. அதற்குரிய முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அந்த முயற்சிகளை மேற்கொள்வதோடு மகாலட்சுமி தாயாரின் அருளையும் பரிபூரணமாக பெற்றால் கண்டிப்பான முறையில் அவர்களால் செல்வ செழிப்புடன் வாழ முடியும். இப்படி மகாலட்சுமி தாயாரின் அருளை பெற்று வறுமையை நீக்குவதற்கு கிராம்பை வைத்து எப்படி தீபம் ஏற்ற வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மகாலட்சுமிக்கு பிடித்தமான பொருட்களுள் ஒன்றாக திகழ்வதுதான் கிராம்பு. இந்த கிராம்பில் பல மருத்துவ குணம் இருப்பது போலவே சக்தி வாய்ந்த ஆன்மீக பரிகாரத்திற்கும் இந்த கிராம்பை நாம் உபயோகப்படுத்துவோம். இந்த கிராம்பில் நேர்மறை ஆற்றல்கள் அதிகமாக இருக்கிறது. எந்த ஒரு வீட்டில் கிராம்பு அதிகமாக இருக்கிறதோ அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல்களும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் இந்த கிராம்பின் வாசனைக்கு மகாலட்சுமி தாயார் அடிமை என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கிராம்பை வைத்து தீபம் ஏற்றும் முறையை பார்ப்போம்.

- Advertisement -

இந்த தீப வழிபாட்டை வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பிப்பது மிகவும் சிறப்பு. மேலும் பிரம்ம முகூர்த்த நேரத்திலும் மாலை நேரத்திலும் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். முதலில் பூஜை அறையில் நல்ல மொட்டு உடையாத கிராம்பாக பார்த்து 48 கிராம்பை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தட்டில் மஞ்சள் கலந்த பச்சரிசியை அதாவது அச்சதையை போட்டு பரப்பிக் கொள்ளுங்கள்.

அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து அதில் சுத்தமான பசு நெய்யை ஊற்றி பஞ்சுத்திரியை போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இப்படி தீபம் ஏற்றிய பிறகு நாம் தனியாக எடுத்து வைத்திருக்கும் 48 கிராம்பில் இருந்து ஒரு கிராம்பை மட்டும் எடுத்து இந்த விளக்கில் போட வேண்டும். காலையிலும் மாலையிலும் இந்த தீபத்தை ஏற்றி விட வேண்டும்.

- Advertisement -

மறுநாள் காலையில் இந்த விளக்கில் இருக்கக்கூடிய கிராம்பை எடுத்து வைத்துவிட்டு புதிய கிராம்பை போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இப்படி தொடர்ந்து 48 நாட்களும் செய்ய வேண்டும். 49 வது நாள் நாம் எடுத்து வைத்திருக்கும் இந்த 48 கிராம்பையும் பொடி செய்து வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் போட்டு காட்ட வேண்டும். இப்படி நாம் செய்வதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். மகாலட்சுமி தாயாரின் அருள் கிடைத்துவிட்டால் வீட்டில் இருக்கக்கூடிய வறுமை விலகும். செல்வ செழிப்பு ஏற்படும். பணரீதியான பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். இன்பமான வாழ்க்கை கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: பண வரவை அதிகரிக்கும் கற்றாழை செடி

மிகவும் எளிமையான இந்த கிராம்பு தீப வழிபாட்டில் முழு நம்பிக்கை இருப்பவர்கள் மகாலட்சுமி தாயாரை மனதார நினைத்து இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டு முழு பலனையும் பெறலாம்.

- Advertisement -