ஒவ்வொரு தெய்வத்திற்கும் அதற்கென்று செடியோ மரமோ இருக்கும். அந்த செடியில் அந்த தெய்வத்தின் அம்சம் நிறைந்திருக்கும். அந்த செடியை நம்முடைய வீட்டில் வைத்து வளர்ப்பதன் மூலம் அந்த தெய்வத்தின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். அந்த வகையில் முப்பெரும் தேவியரின் அம்சம் நிறைந்த செடியாக திகழக்கூடிய கற்றாழையை எந்த முறையில் நாம் வாங்கி வழிபட்டால் நம்முடைய பண பிரச்சினைகள் தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சோற்று கற்றாழை பரிஹாரம்
முப்பெரும் தேவிகளாக திகழக்கூடிய பார்வதி, லட்சுமி, சரஸ்வதி இவர்கள் மூவரின் அம்சம் நிறைந்த செடியாக திகழ்வதுதான் கற்றாழை செடி. பொதுவாக இந்த கற்றாழை செடியை கண் திருஷ்டி போக வேண்டும் என்பதற்காக வீட்டில் வாங்கி வைத்து வளர்ப்பார்கள். ஒரு சில தங்களுடைய நிலை வாசலுக்கு முன்பாக கட்டிவிடுவார்கள்.
இந்த செடியில் முப்பெரும் தேவியரும் நிறைந்திருக்கிறார்கள் என்பதோடு மட்டுமல்லாமல் 5 கிரகங்களும் இதில் இடம்பெற்று இருக்கிறார்கள். கற்றாழை செடியின் வேர் பகுதியில் சனி, ராகு, கேது போன்ற கிரகங்களும் கற்றாழையின் இலைப்பகுதியில் புதன், சுக்கிரன் போன்ற கிரகங்களும் வீற்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இந்த கற்றாழை செடியை எந்த நாளில் வாங்கி வந்து எப்படி வழிபட வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.
பொதுவார்த்தமாக கற்றாழை செடியை நாம் வீட்டிற்கு வாங்கி வர வேண்டும் என்றால் சில குறிப்பிட்ட நாட்கள் இருக்கிறது. அந்த நாட்கள் பௌர்ணமி, அமாவாசை கழித்து அடுத்த நாள் வரக்கூடிய பாட்டிமை, இல்ல தலைவரின் ஜென்ம நட்சத்திர நாள், அவர்கள் பிறந்த கிழமை அல்லது அவர்கள் பிறந்த தேதி இது போன்ற நாட்களில் தான் கற்றாழையை வீட்டிற்கு வாங்கி வர வேண்டும்.
வீட்டிற்கு வாங்கி வந்த உடன் அப்படியே எடுத்து தொட்டியிலோ அல்லது நிலைவாசலிலோ கட்டிவிடக்கூடாது. அதை சுத்தமான தண்ணீரை ஊற்றி வேர் மற்றும் இலைகளை நன்றாக கழுவி அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து வழிபாடு செய்துவிட்டு தான் தொட்டியில் வைப்பதாக இருந்தாலும் நிலை வாசலில் கட்டுவதாக இருந்தாலும் செய்ய வேண்டும்.
அடுத்ததாக இதன் இலைகளில் சுக்கிரன் மற்றும் புதனின் தன்மை இருக்கிறது என்பதால் வெள்ளிக்கிழமை அன்று இந்த கற்றாழையில் இருக்கக்கூடிய சோற்றுப்பகுதி என்று சொல்லக்கூடிய ஜெல்லை எடுத்து நன்றாக சுத்தம் செய்து ஒரு கிண்ணத்தில் வைத்து மகாலட்சுமி தாயாருக்கு நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். மறுநாள் அந்த கற்றாழை ஜெல்லை எடுத்து உடல் முழுவதும் தேய்த்து குளிக்க வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் நம் உடலில் இருக்கக்கூடிய தீய சக்திகள் அனைத்தும் விலகுவதோடு மட்டுமல்லாமல் லஷ்மி கடாட்சமும் ஏற்படும். இந்த செடியை தொட்டியில் வைத்து வளர்ப்பதாக இருந்தால் வடக்கு, கிழக்கு, வடகிழக்கு, வடமேற்கு போன்ற திசைகளில் வைத்து வளர்ப்பது குடும்பத்திற்கு மிகவும் நன்மையை தரும். நல்ல வேலை கிடைப்பது, வேலையில் உயர் பதவிகள் ஏற்படுவது, பணவரவு அதிகரிப்பது, கடன் பிரச்சினை குறைவது என்று பணரீதியான பல பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக இந்த கற்றாழை விளங்குகிறது.
இதையும் படிக்கலாமே: பிரச்சினைகள் தீர லட்சுமி தீப வழிபாடு
அனைவரின் இல்லங்களிலும் இந்த காலத்தில் கற்றாழை என்பது இருக்கத்தான் செய்கிறது. அதை முறையாக நாம் வைத்து வழிபாடு செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் இந்த கற்றாழை செடியின் மூலம் நம்முடைய வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படும். முயற்சி செய்து பாருங்களேன்.