
முருகன் உதிப்பதற்கு காரணமாக திகழக்கூடிய சூரசம்காரம் நடைபெற்ற நாளாக தான் இன்றைய நாள் திகழ்கிறது. இந்த நாளில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு வழிப்பாடாக இருந்தாலும் அந்த வழிபாட்டை முழுமனதோடு செய்யும் பொழுது முருகப்பெருமானின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். கந்த சஷ்டி விரதத்தின் ஆறாம் நாளான இன்று இரவு 12 மணிக்குள் நாம் இந்த ஒரு எளிமையான வழிபாட்டை செய்யும் பொழுது நாம் முன்வைத்த வேண்டுதல் விரைவில் நிறைவேறும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
முருகப்பெருமானுக்கு உகந்த கந்த சஷ்டி விரதத்தின் முக்கியமான நாளாக தான் இந்த சூரசம்கார நாள் திகழ்கிறது. ஆறு நாட்களும் விரதம் இருக்க இயலாதவர்கள் கூட ஆறாவது நாளான சூரசம்கார நாள் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த சூரசம்கார நாளில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாடு நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றும். அப்படிப்பட்ட வழிபாட்டை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
இந்த வழிபாட்டை அக்டோபர் மாதம் 27ஆம் தேதி சூரசம்ஹார நாள் அன்று இரவு 12 மணிக்குள் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழிபாட்டை செய்பவர்கள் கட்டாயம் குளித்திருக்க வேண்டும், அசைவத்தை தவிர்த்து இருக்க வேண்டும், பெண்கள் தீட்டு சமயமாக இருக்கும் பட்சத்தில் இந்த வழிபாட்டை செய்யக்கூடாது. இரவு 12 மணிக்குள் ஏதாவது ஒரு அரை மணி நேரத்தை தேர்வு செய்து வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக ஒரே ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். தரையில் ஒரு விரிப்பை விரித்து அதன் மேல் வடக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள்.
உங்களுடைய வலது கையில் ஆறு ஒரு ரூபாய் நாணயங்கள் இருக்க வேண்டும். இந்த ஒரு ரூபாய் நாணயங்களை கையில் வைத்துக்கொண்டு முருகப்பெருமானிடம் ஒரே ஒரு வேண்டுதலை முன்வைத்து அந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். பிறகு முருகப்பெருமானின் மூலமந்திரமான “ஓம் சௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ” என்னும் மந்திரத்தை நிறுத்தி நிதானத்துடன் முருகப்பெருமானை முழுமனதோடு நினைத்து இருபது நிமிடம் கூற வேண்டும். 20 நிமிடம் கூறி முடித்த பிறகு திரும்பவும் உங்களுடைய வேண்டுதலை முருகப்பெருமானிடம் முன் வைக்க வேண்டும்.
பிறகு கையில் இருக்கக்கூடிய ஒரு ரூபாய் நாணயங்களை சிவப்பு, மஞ்சள் அல்லது பச்சை இந்த மூன்று நிறங்களில் ஏதாவது ஒரு நிறத்தில் ஒரு துணியை எடுத்து அதில் வைத்து மூட்டையாக கட்டி முருகப்பெருமானின் பாதத்தில் வைத்து விடுங்கள். உங்களுடைய வேண்டுதல் எப்பொழுது நிறைவேறுகிறதோ அப்பொழுது இந்த மூட்டையை அப்படியே எடுத்துக் கொண்டு போய் அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்தில் இருக்கக்கூடிய உண்டியலில் சேர்த்து விட வேண்டும். முருகப்பெருமானின் மூல மந்திரத்தை கூறுவது என்பது மிகவும் சிறப்பு. அதிலும் கந்தசஷ்டி விரதத்தின் ஆறாவது நாளான சூரசம்ஹார நாளன்று முருகப்பெருமானை நினைத்து நாம் முருகப்பெருமானின் மூல மந்திரத்தை கூறும் பொழுது முருகனின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும்.
இதையும் படிக்கலாமே: காரிய சித்தி உண்டாக கந்த சஷ்டி வழிபாடு
அதி அற்புதமான சூரசம்ஹார நாளான இன்று இரவுக்குள் முருகப்பெருமானை நினைத்து இந்த முறையில் வேண்டுதலை முன்வைப்பவர்களுக்கு விரைவிலேயே முருகனின் அருளால் வேண்டுதல் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.