- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகாரிய சித்தி உண்டாக கந்த சஷ்டி வழிபாடு

காரிய சித்தி உண்டாக கந்த சஷ்டி வழிபாடு

- Advertisement -

கந்த சஷ்டி விரத நாட்களில் ஆறாம் நாளாக சூரசம்காரம் திகழ்கிறது. அன்றைய நாளில் பலரும் முருகப்பெருமானை நினைத்து ஒருநாள் முழுவதும் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரோ அருகில் இருக்கக்கூடிய முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்று அங்கு நடக்கக்கூடிய சூரசம்கார விழாவில் கலந்துகொண்டு முருகப்பெருமானின் அருளை பெறுவார்கள். விரதம் இருக்க இயலாதவர்கள் அன்றைய தினம் வழிபாட்டை மட்டுமாவது செய்வார்கள். விரதம் இருப்பவர்களாக இருந்தாலும் சரி, கோவிலுக்கு செல்பவர்களாக இருந்தாலும் சரி வழிபாட்டை மட்டும் செய்பவர்களாக இருந்தாலும் சரி இந்த ஒரு சூட்சுமமான வழிபாட்டை செய்வதன் மூலம் சகல காரிய சித்தி உண்டாகும். அதைப்பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

காரிய சித்தி உண்டாக வழிபாடு

சூரசம்காரனை வதம் செய்வதற்காக அவதரித்த தெய்வமாக தான் முருகப்பெருமான் திகழ்கிறார். இவர் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் என்று நம் அனைவருக்கும் தெரியும். அதனால் சிவபெருமானும் முருகப்பெருமானும் ஒரே சாராம்சத்தை கொண்டவர்களாக திகழ்கிறார்கள் என்றும் கூறலாம். முருகப்பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் சிவபெருமானின் அருளையும் பெற முடியும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட முருகப்பெருமானுக்குரிய சூரசம்காரம் சிவபெருமானுக்குரிய திங்கட்கிழமை அன்று வருவது கூடுதல் சிறப்பை தரும். அன்றைய தினம் செய்ய வேண்டிய ஒரு எளிமையான சூட்சும வழிபாட்டை பற்றி இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

நமக்கு இருக்கக்கூடிய தடைகள் முற்றிலும் நீங்கி நாம் தொட்ட காரியங்கள் அனைத்திலும் நமக்கு வெற்றிகள் கிடைக்க வேண்டும் என்று என்பவர்கள் கந்த சஷ்டி விரதத்தின் ஆறாம் நாளான சூரசம்கார நாளன்று அதாவது அக்டோபர் மாதம் 27ஆம் தேதி திங்கட்கிழமை அன்று அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று சிவ தரிசனம் செய்ய வேண்டும். அப்படி செல்லும்பொழுது சிவபெருமானுக்கு வில்வ இலைகளை அர்ச்சனைக்காக சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

ஒருவேளை சிவபெருமானின் ஆலயத்திற்கு செல்ல இயலவில்லை என்பவர்கள் வீட்டிலேயே இருக்கக்கூடிய சிவபெருமானின் படம், சிலை மற்றும் முருகப்பெருமானின் படம், சிலை போன்றவற்றிக்கு வில்வ இலைகளை சமர்ப்பணம் செய்யலாம். அதே சமயம் வில்வ இலைகளால் அர்ச்சனையும் செய்யலாம். சூரசம்ஹார நாளன்று முருகப்பெருமானை எந்த அளவிற்கு வழிபாடு செய்ய வேண்டுமோ அதே அளவிற்கு சிவ வழிபாட்டிலும் நாம் ஈடுபட வேண்டும்.

- Advertisement -

இப்படி நாம் செய்வதன் மூலம் தந்தை மற்றும் மகனின் பரிபூரணமான அருளை பெறுவதோடு சகல காரிய சித்தியையும் பெற முடியும். சிவபெருமானுக்குரிய வில்வ இலையை சிவபெருமானுக்கு மட்டும் சமர்ப்பணம் செய்யாமல் முருகப் பெருமானுக்கும் சமர்ப்பணம் செய்து வழிபாடு செய்யும்பொழுது அளவில்லா நன்மைகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: கந்த சஷ்டி ஆறாம் நாள் வழிபாடு

விடாமுயற்சியுடன் செய்யக்கூடிய எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அதில் வெற்றியே உண்டாகும். இருப்பினும் அந்த வெற்றிகளை பெறுவதற்கு முருகப்பெருமானின் அருளையும் சிவபெருமானின் அருளையும் கந்த சஷ்டி கவசத்தின் ஆறாவது நாள் இந்த முறையில் வழிபாடு செய்து பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்