- Advertisement -
- Advertisement -

குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் இருக்கலாம். சண்டை, சச்சரவுகள் இல்லாத வீடுகள் குடும்பமே ஆகாது. அவ்வப்பொழுது சிறு சிறு சண்டைகளும், பின் மகிழ்ச்சியும் இருந்தால் தான் சுவாரசியமாக இருக்கும் வாழ்க்கையும்! ஆனால் அதற்காக எப்பொழுதும் சண்டை, சச்சரவு என்று இருந்தால் வாழ்க்கை வெறுத்துப் போய் விடுகிறது என்று புலம்புபவர்கள், வீட்டில் இந்த தீபத்தை ஏற்றி பாருங்கள், நல்ல பலன் கிடைக்கும். சண்டை வராமல் இருக்க, குடும்பத்தில் மகிழ்ச்சி திரும்ப ஏற்ற வேண்டிய 3 தீபம் என்னென்ன? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை அறிவோம் வாருங்கள்.

கூட்டுக் குடும்பத்தில் தான் பிரச்சனை என்று தனித்தனியாக பிரிந்த பின்னரும் பிரச்சனை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சரியான புரிதல், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாத இடங்களில் தான் சண்டையும் உண்டாகிறது. இருவரும் சரிசமமாக விட்டுக் கொடுக்க வேண்டும். ஒருவரே விட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தால் அந்த வீடு சுபிட்சம் அடையாது, நிலைத்தும் நிற்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கவும், சண்டை சச்சரவுகள் வராமல் இருக்கவும் தினமும் இந்த தீபத்தை ஏற்றி பாருங்கள் நல்ல பலன் தெரியும்.

- Advertisement -

இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய் ஆகிய விளக்கு ஏற்ற உகந்த இந்த எண்ணெய்களை தனித்தனியாக மண் அகல் விளக்குகளில் ஊற்றி பஞ்சுத் திரியிட்டு தீபம் ஏற்றி வர வேண்டும். இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் எப்பேர்பட்ட தடைகள் இருந்தாலும், அவை நிவர்த்தி ஆகி குடும்பத்தில் முன்னேற்றம் உண்டாகும். சகல விதமான ஐஸ்வரியங்களும் உங்களை வந்தடையும். இலுப்பை எண்ணெய் பொதுவாக குலதெய்வத்திற்கு ஏற்ற உகந்தது ஆகும். சிறு, குறு, காவல் தெய்வங்களுக்கும் இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்றுவார்கள்.

நல்லெண்ணெய் பெருந்தெய்வங்களுக்கு ஏற்ற உகந்த எண்ணெய் ஆகும். ஆரோக்கியம் அதிகரிக்கவும், மருத்துவ செலவுகள் குறையவும், குடும்பத்தில் நிம்மதி நிலைக்கவும் நல்லெண்ணெயில் தீபம் ஏற்றி வர வேண்டும். தினமும் பூஜை அறையில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம். நெய், மகாலட்சுமிக்கு உகந்தது ஆகும். நெய் ஊற்றி தினமும் தீபம் ஏற்றி வருபவர்களுக்கு நினைத்த காரியம் வெற்றி அடையும், செல்வங்கள் குவியும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

இந்த மூன்று எண்ணெய்களையும் ஒன்றாக கலக்காமல் தனித்தனியாக அகல் விளக்குகளில் ஊற்றி தினமும் பூஜை அறையில் வைத்து தீபம் ஏற்றி வர வேண்டும். இஷ்ட தெய்வம், குலதெய்வம், மகாலட்சுமியின் அருள் கிடைக்கவும், குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் இல்லாமல் நிம்மதி இருக்கவும், மகிழ்ச்சி அதிகரிக்கவும் இந்த தீபத்தை தனித்தனியாக ஏற்றி வர நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். தேங்காய் எண்ணெயில் புதன்கிழமை தோறும் விநாயகருக்கு மட்டும் தீபம் ஏற்றி பாருங்கள், ஞானம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
பீர்க்கங்காய் கடையல்

கணவன், மனைவிக்குள் புரிதல் உண்டாகவும், ஒருவருடன் ஒருவர் பரஸ்பர ஒற்றுமையோடு இருக்கவும் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் புதன் கிழமைகளில் தேங்காய் எண்ணெய் தீபம் விக்னங்களை தீர்க்கும் விநாயகருக்கு ஏற்றி வரலாம். குடும்பத்தில் மற்றவர்களுடன் மன கசப்புகள் இருந்தாலும், மற்ற உறவுகளுடன் சண்டை, சச்சரவுகள் இருந்தாலும் அம்பாளுக்கு வேப்ப எண்ணையில் தீபம் ஏற்றி வழிபடலாம். வேப்ப எண்ணையில் தீபம் ஏற்றுபவர்கள், வீட்டில் ஏற்றாமல் கோவிலுக்கு சென்று அம்பாள் சன்னதியில் ஏற்றி வரலாம். இதுவும் குடும்ப அமைதிக்கு நல்ல பலன் தரும் தீபம் ஆகும்.

- Advertisement -