
நாம் விளக்கு ஏற்றும் பொழுது பொதுவாக தீப்பெட்டியை தான் பயன்படுத்தி தீபத்தை ஏற்றி வைக்கிறோம். இப்படி ஏற்றும் பொழுது செய்யக் கூடாத சில தவறுகள் மற்றும் தீபம் ஏற்றும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரம், அதனால் கிடைக்கக்கூடிய எண்ணிலடங்கா அதிர்ஷ்ட பலன்கள் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவில் தொடர்ந்து பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.
தீபம் ஏற்றும் பொழுது ஒவ்வொரு முறையும் “ஓம் தீப மகாலட்சுமியை நமோ நமஹ”என்னும் இந்த எளிய சக்தி வாய்ந்த தீப மந்திரத்தை சொல்லி விளக்கு ஏற்ற வேண்டும். தீப ஜோதியில் இருக்கும் மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கு இந்த மந்திரம் சொல்லப்படுகிறது. “ஒளி வடிவத்தில் இருக்கும் மகாலட்சுமியை வணங்குகிறேன்”என்பது இதன் பொருளாகும். நீங்கள் எப்போது விளக்கு ஏற்றினாலும், இந்த மந்திரத்தை சொல்லி ஏற்றினால் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.
இந்த மந்திரத்தை சொல்வதால் இன்பமும், மகிழ்ச்சியும் ஏற்படும். குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் அகலும். துரதிர்ஷ்டங்கள், தரித்திரங்கள் நீங்கி சுபிட்சமான ஒரு சூழ்நிலை நிலவும். மகாலட்சுமியின் அருள் கடாட்சத்துடன் 16 செல்வங்களும் கிடைக்க பெறுவீர்கள். கடன் தொல்லைகள் தீர்ந்து, வருமானம் அதிகரிக்க பெறுவீர்கள். மனதில் இருக்கும் வேண்டுதல்கள் பலிக்கும். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை தீபம் ஏற்றும் பொழுது சொல்ல மறக்க வேண்டாம்.
வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது முதலில் ஒரு அகல் விளக்கை தீப்பெட்டியில் இருந்து தீக்குச்சியை எடுத்து ஏற்றிவிட்டு, பின்னர் அந்த விளக்கை வைத்து தான் மற்ற தீபங்களை ஏற்ற வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. தீப்பெட்டியில் இருந்து தீக்குச்சியை எடுத்து பற்ற வைக்கும் பொழுது, அதில் இருக்கும் சல்ஃபர் என்னும் வேதிப்பொருள் விளக்கில் இருக்கும் நல்ல சக்தியை குறைப்பதாக நம்பிக்கை உள்ளது. விளக்கு ஏற்றும் புனிதமான செயலை, முழு தூய்மையுடன் ஏற்ற வேண்டும் என்பதற்காக இவ்வாறு சொல்லப்படுகிறது.
அகல் தீபத்தை ஏற்றிய பின்பு அந்த தீபத்தை வைத்து நீங்கள் காமாட்சி அம்மன் விளக்கு, குபேர விளக்கு, குத்துவிளக்கு, மணி விளக்கு போன்ற தீபங்களை, உங்கள் வீட்டில் இருக்கும் தீபங்களுக்கு ஏற்ப ஏற்றி வைக்கலாம். நிலை வாசலில் இரண்டு அகல் தீபங்களை ஏற்றி வைப்பது நல்லது. சூரியன் மற்றும் சந்திரனின் அருள் ஆசியோடு, குலதெய்வ ஆசீர்வாதமும் கிடைக்கும். பண்டைய காலங்களில் திண்ணைகளில் இரண்டு அகல் தீபங்களை மாடத்தில் ஏற்றி வைப்பது வழக்கமாக இருந்து வந்தது.
இதையும் படிக்கலாமே:
பஞ்சகவ்ய சாம்பல் என்ன செய்வது?
மாடத்தில் ஏற்றாவிட்டாலும் நிலை வாசலில் ஏற்றவது ரொம்பவே நல்லது. மாடம் அமைத்து ஏற்றுவது இன்னும் சிறப்பானது. அதுபோல துளசி செடிக்கு அருகில் ஒரு தீபம் ஏற்றி வைக்க வேண்டும். மாடிப்படி இருந்தால் முதல் படியில் 2 விளக்குகள் ஏற்ற வேண்டும். சமையலறையில் அன்னபூரணி படத்திற்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைப்பது, வறுமை இல்லாத வாழ்க்கையை கொடுக்கும். தன, தானியத்திற்கு பஞ்சம் ஏற்படாது என்று சொல்லுவார்கள். எந்த தீபத்தை ஏற்றினாலும் அது நேராக நின்று சுடர்விட்டு எறிய வேண்டும். ஒற்றைத் திரியை பயன்படுத்தாமல் இரண்டு திரிகளை போடுவது நல்லது. குத்துவிளக்கில் ஐந்து முகங்கள் முழுமையாக எறிவது செல்வ செழிப்பை கொடுக்கவல்லது. வெள்ளிக்கிழமைகளில் இது போல ஏற்றலாம், லட்சுமி அருள் கிடைக்கும்.