- Advertisement -
தொழில்நுட்பம்

Whatsapp : குரூப்புல 100 பேரு மெசேஜ் அனுப்புனாலும் நாம தனியா ஒருத்தரோட மெசேஜ் மட்டும் பாக்குற வசதி இப்போ வந்தாச்சு – எப்படினு பாருங்க

வாட்ஸ்அப் செயலி கடந்த 2009 ஆம் ஆண்டு அறிமுகமாகியது. ஆண்ட்ராய்டு செயலி மூலம் உருவாக்கப்பட்ட அப்ளிகேஷன் நமது குறுந்தகவல்கள் (மெசேஜ்) எளிதாகவும் இலவசமாகவும் இணையத்தின் உதவி மூலம் அனுப்புமாறு வடிவமைக்கப்பட்டது. இத அப்ளிகேஷன் இந்தியா மற்றுமின்றி உலகம் முழுவதும் பல கோடி பயனாளர்களுடன் இன்றுவரை வெற்றிகரமாக இயங்கிவருகிறது.

2009 ஆம் ஆண்டு முதல் தனியாக செயல்பட்டு வந்த வாட்ஸ்அப் நிறுவனத்தை 2014ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கி அதில் அதிகமான புதிவசதிகள் (எ.கா) வீடியோ ஸ்டேட்டஸ், பணம் அனுப்புதல், குரூப் மெசேஜ் மற்றும் ஒருநாள் மட்டுமே இருக்கும் ஸ்டேட்டஸ் என பல்வேறு வசதிகளை அதனுள் புகுத்தி எதிர்பாரா அளவு வெற்றி பெற்று இன்று வாட்ஸ்அப் இல்லாமல் யாரும் இல்லை என்னும் நிலை வந்துவிட்டது.

- Advertisement -

இதில் ஒரு பிரச்னை என்னவெனில் நாம் ஏதேனும் ஒரு நண்பர்களோ அல்லது தொழில் சார்ந்தோ, மற்ற வேறு எந்த குரூப்பில் இருந்தாலும் தொடர்ந்து பலர் மெசேஜ் செய்வார்கள். அதனால் நாம் எதிர்பார்க்கும் நபரின் மெசேஜ் தனியாக குரூப்பில் பார்க்க முடியாது. இதனை சரிசெய்ய இப்போது வாட்ஸ்அப் டெவலப்பிங் குழு இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

அதன்படி வாஸ்ட்அப் குரூப் “அட்வான்ஸ் சர்ஜ்” எனும் புதிய வசதியை கொண்டுவந்துள்ளது. இதன்மூலம் எத்தனை நபர்கள் குரூப்பில் இருந்தாலும் நமக்கு வேண்டிய நபர் செய்யும் மெசேஜ் மட்டும் பிரித்து தனியே பார்க்க முடியும். இந்த வசதி தற்போது சோதனை ஓட்டத்தில் வெற்றிபெற்றுள்ளது. எனவே, இன்னும் சில வாரங்களில் இந்த வசதி வாட்ஸ்அப் செயலியில் அப்டேட் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by