- Advertisement -

இவர்களில் யாரை தூங்கும்போது பாதியில் எழுப்பலாம்? யாரை எழுப்பக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார் தெரியுமா?

ஒரு சிலர் எப்போதும் தூங்கி கொண்டே இருப்பார்கள். ஒரு சிலருக்கு தூங்குவது என்பதே கிடையாததாக இருக்கும். தூக்கம் எவ்வளவு முக்கியம் என்று இன்றைய காலத்தில் பல பேருக்கு புரிவதே இல்லை. மனிதன் சராசரியாக 6 லிருந்து 8 மணி நேரம் வரை தூங்குவது தான் ஆரோக்கியம் தரும். போதுமான தூக்கம் இல்லையென்றால் உடலில் சுரப்பிகள் சரியாக வேலை செய்யாது. இதனால் உள்ளமும் பாதிக்கக்கூடும். உடல் சோர்வடையும். மூளையின் செயல் திறன் குறையும். வலி உணரும் சக்தி, அறிவாற்றல், நினைவாற்றல், கவனம் போன்றவற்றில் பாதிப்பு இருக்கும்.

தூக்கம் என்பது குறிப்பிட்ட கால அளவு தான். எப்போதும் தூங்கி கொண்டு இருப்பது சிலருக்கு வாடிக்கையாக இருக்கும். அவ்வாறான நபர்களில் யாரை பாதியில் எழுப்பலாம்? யாரை பாதியில் எழுப்ப கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார் தெரியுமா? வாருங்கள் அதை பற்றிய அலசல் இதோ.

- Advertisement -

பயணம் மேற்கொள்பவர்களை பாதியில் எழுப்பலாம். பயணம் செய்யும் பொழுது உறங்கக்கூடாது. எதற்காக பயணிக்கிறோம்? என்ன நோக்கத்துடன் பயணிக்கிறோம்? என்ற சிந்தனை இருந்து கொண்டே இருக்க வேண்டும். இவர்கள் ஆழ்ந்த உறங்கக்கூடாது எனவே பாதையில் எழுப்புவதில் தவறில்லை.

கல்வி கற்பவர்கள் அதிகம் தூங்க அனுமதிக்கக்கூடாது. அதிகம் தூங்குபவர்கள் எதிலும் ஒருமுக படமாட்டார்கள். சிந்தனைகளை அலைபாய விட்டுவிடுவார்கள். கல்வி கற்பவர்களுக்கு அது உகந்ததல்ல. எனவே அவர்களைப் பாதியில் எழுப்புவதில் தவறே இல்லை.

- Advertisement -

சாப்பிடாமல் தூங்குபவரை தூங்கட்டும் என்று விட்டுவிடக்கூடாது. வெறும் வயிற்றுடன் உறங்குவது உடல் நலனுக்கு நல்லதல்ல. எனவே பசியுடன் இருப்பவர்களை தூங்க விடக்கூடாது. வயிற்றுப்பசி மட்டுமல்ல அறிவு பசியில் இருப்பவர்களையும் அதிகம் தூங்க விடக்கூடாது.

உதவியாளர்கள். உங்களுக்கு உதவி செய்ய ஒருவரை நியமித்து இருந்தால் அவர்களை அதிகம் தூங்க விடக்கூடாது. அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் தான் நீங்கள் இருப்பீர்கள். அந்த எண்ணம் அவர்களுக்கு இருந்தால் தூங்கி இருக்க மாட்டார்கள். எனவே அவர்களை பாதையில் எழுப்புவது தவறில்லை.

- Advertisement -

பணம் தொடர்பான விஷயங்களை கையாள்பவர்கள் அதிகம் உறங்கக்கூடாது. அவர்களின் கவனச் சிதறலினால் பல பிரச்சனைகள் உருவாகிவிடும். எனவே அவர்களை பாதையில் எழுப்புவது நல்லது தான்.

ஒரு சிலர் எப்போதும் ஒரு விதமான பதட்டத்துடனும், பயத்துடனும் இருப்பார்கள். அவர்கள் ஆழ்ந்து தூங்குவது நல்லதல்ல. இது போன்றவர்களை பாதியில் எழுப்புவதில் தவறொன்றுமில்லை.

தூங்கிக்கொண்டிருக்கும் மிருகங்களை எழுப்பக்கூடாது. அவற்றின் நித்திரையை கலைப்பது பாவச்செயலாகும். மிருகங்கள் மட்டுமல்ல ஊர்வனவற்றையும் துன்புறுத்தக்கூடாது. அவர்களைப் பாதியில் எழுப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்கிறார் சாணக்கியர்.

முட்டாள்களை ஒரு போதும் எழுப்பி விடக்கூடாது. அவர்கள் விழித்திருப்பதனால் தான் பலருக்கு பல பிரச்சனைகள் உருவாகக்கூடும். தூங்குவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. எனவே முட்டாள்களை விரும்பிய மட்டும் தூங்க விடுவது நல்லது.

குழந்தைகளுக்கு தூக்கம் இன்றியமையாத ஒன்றாக இருக்கும். அவர்களின் வளர்ச்சிக்கு போதுமான தூக்கம் அவசியமாகும். எனவே தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை பாதியில் எழுப்புவது தவறான ஒரு செயலாகும்.

தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு அரசனை கட்டாயம் எழுப்பக்கூடாது. ஒரு அரசனுக்கு நிம்மதியான ஓய்வு தேவை. ஆட்சி புரியும் அரசனின் நித்திரை அதீத முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதபடுகிறது. எனவே அவர்களை எழுப்புவது பாவ காரியமாகும்.

ஆய்வாளர்களின் கூற்றுபடி செயற்கை ஒளிகளினால் பெரும்பாலானோர்களின் தூக்கத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தூங்கும் முன் மின் உபகரணங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். மனதை அமைதிபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடவும். தூக்கத்தில் உள்ளவர்களை எழுப்பும் முன் யோசிக்கவும். அவர்களை எழுப்பவது சரியா? தவறா? என்று. அதன் பின் எழுப்பவும்.

இதையும் படிக்கலாமே
சகல சௌபாக்கியங்களையும் பெற இப்படி தீபம் ஏற்றுவது நல்லது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Chanakya quotes in Tamil. Chanakya thanthram. Chanakya thoughts. Sanakiyan thathuvam.

- Advertisement -