சகல சௌபாக்கியங்களையும் பெற இப்படி தீபம் ஏற்றுவது நல்லது.

mahalakshmil

ஒரு வீடானது சகல சௌபாக்கியங்களையும் பெற வேண்டுமென்றால் அந்த மகாலட்சுமியின் ஆசியை முழுமையாக பெற்றிருக்க வேண்டும். மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தை பெற்று, செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும் என்றால் அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். எந்த வேலையுமே செய்யாமல் பணம் நம் வீடு தேடி வர வேண்டும் என்று நினைப்பது மிகவும் தவறான ஒன்று. நம் வறுமையை நீக்கி, வாழ்க்கையை மாற்றிக் கொள்வதற்காக நாம் எடுக்கும் முயற்சிகளில் சில தடைகள் வரலாம். அந்த தடைகளை நிவர்த்தி செய்வதற்குத் தான் பரிகாரங்களே தவிர, எந்த முயற்சியிலும் ஈடுபடாமல், பரிகாரத்தை செய்தால் மட்டும் பலன் கிடைத்து விடும் என்று நினைப்பது தவறு. அதாவது உங்களது முயற்சியில் உண்டாக்கப்படும் தடைகளை நிவர்த்தி செய்யவே பரிகாரங்கள். மாலை வேலையில் இருக்கும் இருளை நீக்குவதற்காக ஏற்றப்பட்ட தீபச் சுடரை மகாலட்சுமி அம்சம் என்று கூறுவார்கள். இதேபோல் உங்களது வாழ்வில் இருக்கும் இருளை நீக்கி ஒளிமயமான வாழ்க்கைக்கு உங்களை கொண்டு செல்ல இந்த பரிகாரம் ஒரு நல்ல பலனைக் கொடுக்கும்.

mahalakshmi

இந்தப் பரிகாரத்தை உங்களது வீட்டிலும் செய்யலாம் அல்லது நீங்கள் தொழில் செய்யும் இடத்திலும் செய்யலாம். உங்கள் வீட்டிலோ அல்லது தொழில் செய்யும் இடத்திலோ மகாலக்ஷ்மியின் திருவுருவப் படத்திற்கு முன்பாக முதலில் ஒரு தீபம் ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தீபத்தை ஏற்றும்போது “ஸ்ரீ சுக்ல மகாசுக்லே நவாங்கே ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோ நமஹ” என்ற மந்திரத்தை மனதார உச்சரிக்க வேண்டும். ‘எங்கள் வீட்டிலும், தொழிலிலும் இருக்கும் வறுமை நீங்கி நல்ல முன்னேற்றம் அடையவேண்டும் என்பதே இதன் பொருள்.’ மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்த பாலில் பச்சை கற்பூரம், ஏலக்காய், கற்கண்டு இவைகளை சேர்த்து நைய்வேத்திமாகப் படைக்க வேண்டும். அடுத்ததாக வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம், வாசனை மிகுந்த பூக்கள் இவற்றை மகாலட்சுமியின் படத்திற்கு முன்பு படைக்க வேண்டும். பின்பு தீபம் குளிர்ந்ததும் தீபத் திரியில் இருக்கும் கருப்பினை நெற்றியில் இட்டுக் கொள்வது மிகவும் சிறந்தது. இப்படி வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அன்று செய்வது மிகவும் சிறப்பானது. வாரம்தோறும் உங்களால் இந்த பரிகாரத்தை செய்ய முடியவில்லை என்றால் மாதம் ஒரு முறை பவுர்ணமி தினத்தன்று செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். இந்த பரிகாரமானது நீங்கள் செய்யும் வியாபாரத்தில் இருக்கும் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்ற மிகவும் உகந்த பரிகாரம். தொழில் ரீதியாக உங்களுக்கு இருக்கும் எதிரிகள் கூட நண்பர்களாக மாறிவிடுவார்கள். தொழில் முன்னேற்றத்திற்கு ஜாதக கட்டத்தில் ஏதாவது தோஷங்கள் இருந்தாலும் கூட இந்த பரிகாரத்தின் மூலம், உங்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள் குறையும். வீட்டில் பணம் சேராமல் இருப்பதற்கு ஏதேனும் தோஷங்கள் இருந்தால் கூட இந்த பரிகாரம் நிவர்த்தி செய்துவிடும்.

இந்த பரிகாரத்தை வீட்டில் செய்வதாக இருந்தால் பெண்கள் செய்யலாம். தொழில் செய்யும் இடத்தில் செய்ய வேண்டும் என்றால் ஆண்கள் செய்வதில் தவறில்லை. ஒரு வீடானது சகல சவுபாக்கியங்களையும் பெறவேண்டுமென்றால், அவர்கள் செய்யும் தொழிலானது நல்ல முன்னேற்றம் அடைந்தாலே போதும். வருமானம் அந்த வீட்டில் நிறைந்திருக்கும். நிம்மதியும், மகாலட்சுமியும் அந்த இடத்தில் நிரந்தரமாக வாசம் செய்வார்கள்.

Goddess Lakshmi

மகாலட்சுமி நிரந்தரமாக நம்மிடம் வாசம் செய்ய இவற்றைப் பின்பற்றலாம்.

- Advertisement -

நீங்கள் யாருக்காவது பணம் கொடுக்க வேண்டுமென்றால் வலது கையில் கொடுங்கள். யாரிடமிருந்தாவது பணத்தை பெற வேண்டும் என்றாலும் வலது கையிலே பெற்றுக் கொள்ளுங்கள்.

வெளியிடங்களுக்கு செல்லும் போது கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் செல்லக் கூடாது. அதாவது எவ்வளவுதான் ஏ.டி.எம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் வைத்திருந்தாலும் கையில் ஒரு நூறு ரூபாய் நோட்டு கூட இல்லாமல் வெளியில் செல்லக்கூடாது. பணம்தான் பணத்தை ஈர்க்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

counting-cash

பணத்தை எண்ணும்போது எச்சில் தொட்டு என்னும் பழக்கம் உங்களிடம் இருந்தால் அதை இன்றோடு விட்டுவிடுங்கள். நீங்கள் வியாபாரத்திற்காக கணக்கு எழுதும் நோட்டுப் புத்தகங்களின் காகிதத்தை கூட உங்களது எச்சில் வைத்து திருப்பக் கூடாது.

பழைய நோட்டு முடிந்து கணக்கு வழக்கிற்காக புதிய நோட்டுகள் தொடங்க வேண்டும் என்றால் அதன் முதல் பக்கத்தில் மஞ்சளைக் கொண்டு ஸ்வஸ்டிக் அல்லது லாபம் என்று எழுதவேண்டும். இரண்டும் எழுதினாலும் தவறில்லை.

swastik symbol benefits tamil

நீங்கள் பணப்பெட்டியை வைத்திருக்கும் அறையின் சுவரில் முடிந்தவரை மஞ்சள் நிறம் பூசுவது நல்லது. கருப்பு, சிகப்பு, நீலம் இந்த நிறங்களை தவிர்ப்பது நல்லது. வாரம் ஒரு முறையாவது சுத்தமான நீரில் மஞ்சள் தூளை கலந்து அந்த நீரை நீங்கள் தொழில் செய்யும் இடம் முழுவதும் தெளித்து விட வேண்டும். உங்களது வீட்டிலும் இப்படி செய்வது நல்லது.

இதையும் படிக்கலாமே
பணத்தேவையை பூர்த்தி செய்ய முருகப்பெருமானை இப்படித்தான் வழிபட வேண்டும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Thozhil valarchi pariharam tamil. Thozhilil munnera vazhipadu in Tamil. Selvam peruga pariharam Tamil. Selvam peruga poojai Tamil.