- Advertisement -
வாஸ்து சாஸ்திரம் | Vasthu sasthram Tamil

உங்கள் வீட்டு வாசல் கதவு இப்படி இருந்தால், கஷ்டத்தில் இருந்து உங்களை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.

பொதுவாகவே நம் வீட்டிற்கு நிலை வாசல் கதவு என்பது, இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்களால் சாஸ்திரப்படி கூறப்பட்டுள்ளது. இதற்கு காரணமும் இருக்கின்றது. நம் வீட்டை பாதுகாக்கும் அதிர்ஷ்ட தேவதைகளும், வாஸ்து தேவதைகளும், மகாலட்சுமியும் நம் வீட்டு நிலை வாசல் கதவில் தான் குடியிருப்பதாக ஐதீகம். நம் வீட்டையும், நம்மையும் பாதுகாக்கும் வீட்டின் முன்வாசல் கதவை எப்படி வைத்திருக்க வேண்டும். எப்படி வைத்திருக்கக்கூடாது என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு.

நம் வீட்டை பாதுகாக்கும் தேவதைகள் முன் வாசல் கதவில் குடி கொண்டிருப்பதால், தேவையற்ற சத்தங்கள் அந்த கதவியிலிருந்து வரக்கூடாது. மூடும் போதும், திறக்கும் போதும் சில வீடுகளில் ‘கீச் கீச்’ என்ற சத்தம் ஒலிக்கும். அந்த சத்தம் கேட்காமல் சிறிதளவு எண்ணெய் விட்டு மென்மையாக மூடி, திறக்கும்படி வைத்துக்கொள்வது நல்லது. நம் வீட்டில் முன்னோர்கள் கதவு தாழ்பாளை ஆட்ட வேண்டாம். சண்டை வரும் என்று கூறுவார்கள். அதற்கு காரணம் தாழ்ப்பாலில் இருந்து எழுப்பப்படும் சத்தம் ஆனது தேவதைகளை கோபத்தினால் வீட்டில் மகிழ்ச்சி குறையும்.

- Advertisement -

நம்முடைய வாசல் கதவிற்கு நேர் எதிராக மரமோ அல்லது கரண்ட் கம்பமோ இருக்கக்கூடாது. இது நம் வீட்டிற்குள் மகாலட்சுமி நுழைவதை தடுக்கும் வகையில் அமைந்திருப்பதாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

வீட்டின் முன் வாசல் கதவில் விரிசல் ஏற்பட்டு இருந்தாலும், உடைந்து இருந்தாலும், அதில் இருக்கும் வர்ணங்கள் பழுது அடைந்து இருந்தாலும், அதை உடனே புதுப்பிப்பது தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் வீட்டிற்குல் தரித்திரம் சேர்ந்து விடும்.

- Advertisement -

முன் காலங்களில் எல்லாம் முன் வாசல் கதவு என்பது இரண்டு கதவுகளாகத்தான் இருக்கும். நாகரீகம் என்ற பெயரில் இந்த காலத்தில் எல்லாம் ஒற்றை கதவை வைக்கிறார்கள். சாஸ்திரப்படி ஒற்றைக் கதவு வைப்பதை விட, இரட்டைக் கதவு வைத்து முன்வாசல் அமைப்பதுதான் மிக சிறப்பான ஒன்று.

ஒற்றைக் கதவாக இருந்தாலும், இரட்டைக் கதவாக இருந்தாலும் அதில் வேலைபாடு என்பது சற்று குறைவாக இருப்பது நல்லது. முடிந்தவரை ஒரு சுவாமி படம் மட்டும் இருந்தால் போதும். அதிகப்படியான வேலைப்பாடுடைய கதவுகளும் அவ்வளவு சரியானது அல்ல.

- Advertisement -

இதேபோல் நம் வீட்டிற்குள் இருக்கும் மற்ற அறைகளின் கதவை விட, நம்முடைய வீட்டின் முன்வாசற்படி கனவானது நீளத்திலும், அகலத்திலும் பெரியதாக தான் இருக்க வேண்டுமே தவிர, சிறிதாக இருந்தால் நம் வீட்டிற்கு அது அவ்வளவு நல்லது கிடையாது. ராஜவாசல் என்பது மற்ற கதவுகளை விட பெரியதாக இருப்பது தானே நல்ல பலனை தரும்.

வீட்டிலிருக்கும் எந்த கதவாக இருந்தாலும் அந்த கதவை உள்பக்கம் தான் திறக்க வேண்டும். சிலரது வீட்டில் கதவை வெளிப்பக்கமாக திறக்கும்படி அமைத்திருப்பார்கள். ஜன்னல்களை வேண்டுமென்றால் வெளிப்பக்கமாக திறக்கலாமே தவிர, கதவு எப்பொழுதும் வெளிப்பக்கம் திறக்கும் படி அமைத்துக் கொள்ள வேண்டாம்.

வாரம் தோறும் வரும் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் நில வாசற்படிக்கு மஞ்சள் குங்குமம் வைத்து, இரண்டு பக்கமும் பூக்களை வைத்து, ஊதுவத்தி காட்டி வணங்குவது நல்ல பலனை தரும்.

நம் வீட்டு நிலை வாசல் படியும் தெய்வம் தான் என்பதை நினைத்து வழிபட்டால் மட்டுமே, எந்த ஒரு தெய்வமும் நம் வீட்டிற்குள் நுழைந்து வந்து நம்மை காக்கும். இல்லாவிட்டால் வாசல் வரை வந்த தெய்வம் கூட, உங்களது வாசல் கதவை பார்த்து, திரும்பிப் போய்விடலாம் என்பதை உங்கள் மனதில் வைத்துக் கொண்டு உங்கள் நில வாசற்படியை கவனமாக கவனித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
எந்த ராசிக்காரர்கள் எந்த ராசிக்காரர்களுடன் சேரக்கூடாது தெரியுமா? சேர்ந்தால் இது தான் நடக்கும்.

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Thalaivasal vastu in Tamil. Tamil vastu main door. Main door vastu in Tamil. Nilai vasal vasthu. Thalaivasal vastu.

- Advertisement -