எந்த ராசிக்காரர்கள் எந்த ராசிக்காரர்களுடன் சேரக்கூடாது தெரியுமா? சேர்ந்தால் இது தான் நடக்கும்.

ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு ராசிக்காரர்கள் யோகமான ராசிக்காரர்களாக இருப்பார்கள். அவர்கள் இணையும் பொழுது நல்ல ஒரு அதிர்ஷ்டம் ஏற்படும். ராசிகள் ஒவ்வொன்றும் பஞ்ச பூதங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன. இவ்வகையில் எந்த ராசிக்காரர்கள் எந்த ராசிக்காரர்களுடன் சேரவே கூடாது? சேர்ந்தால் என்னவெல்லாம் நடக்கும்? என்பதைப் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.

astrology

மேஷ ராசிக்காரர்கள் ஆகிய நீங்கள் செவ்வாயை அதிபதியாகக் கொண்டவர்கள் என்பதை அறிவீர்கள். செவ்வாய் பகவானை அதிபதியாக கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு விருச்சிக ராசிக்காரர்கள் உடன் மணமுடித்து வைத்தால் அவர்களின் உறவில் கட்டாயம் பிளவுகள் உருவாகும். விருச்சிக ராசிக்காரர்களும் செவ்வாயின் ஆதிக்கத்தில் தான் இருக்கிறீர்கள். இவ்விரு ராசிகளும் செவ்வாயின் ஆதிக்கத்தில் இருந்தாலும் பஞ்சபூத தத்துவத்தின் அடிப்படையில் மேஷ ராசிக்காரர்கள் நெருப்பின் குணத்தை கொண்டிருப்பார்கள் அதற்கு நேர் எதிரான நீரின் குணத்தை விருச்சிக ராசிக்காரர்கள் கொண்டிருப்பதால் இந்த இரண்டு ராசிகளும் இணையும் பட்சத்தில் தம்பதிகள் இருவருக்கும் புரிதல் என்பது இருக்காது. ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்ல மாட்டார்கள். எனவே விருச்சிக ராசிக்காரர்கள் மேஷ ராசிக்காரர்களுடன் இணைவதை தவிர்ப்பது நல்லது. நீர் ராசியான விருச்சிக ராசிக்காரர்கள் நில ராசிக்காரர்களுடன் தாராளமாக இணையலாம்.

ரிஷப ராசிக்காரர்கள் ஆகிய நீங்கள் சுக்கிர பகவானை அதிபதியாக கொண்டவர்கள். சுக்கிரன் என்றால் சொல்லவா வேண்டும்? அவர் தான் காதல் தலைவன் ஆயிற்றே! நில ராசியான ரிஷப ராசிக்காரர்கள் நீர் ராசியான விருச்சிக ராசிக்காரர்கள் உடன் இணைந்தால் உங்களது வாழ்க்கை அன்பு நிறைந்ததாக இருக்கும். உங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து செல்லும் மனப்பான்மை கொண்டிருப்பார்கள். இல்லற சுகத்தை முழுமையாக அனுபவிப்பார்கள். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் கடைசி வரை ஒற்றுமையாக இணைந்து இருப்பார்கள்.

puthan

மிதுன ராசிக்காரர்கள் ஆகிய நீங்கள் புத பகவானை அதிபதியாக கொண்டவர்கள். பொறுமையின் சிகரமாக விளங்க கூடியவர்கள் மிதுன ராசிக்காரர்கள். மற்றவர்களை புரிந்து கொள்ளும் உணர்வு மற்ற ராசிக்காரர்களை விட உங்களுக்கு அதிகமாக இருக்கும். ஒருவர் தவறு செய்தால் ஏன் அந்த தவறை செய்கிறார்கள் என்று அவர்கள் இடத்திலேயே நின்று காணக் கூடியவர்கள் நீங்கள். அத்தகைய சிறப்பம்சம் கொண்ட நீங்கள் கடக ராசிக்காரர்கள் உடன் இணையும் பொழுது உங்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கடக ராசிக்காரர்கள் ஆகிய நீங்கள் உங்கள் துணையின் விருப்பத்தை அறிந்து செயல்படக் கூடியவர்கள் எனவே இவ்விரு ராசிக்காரர்களும் சேர்ந்தால் அவர்களின் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.

- Advertisement -

சிம்ம ராசிக்காரர்கள் ஆகிய நீங்கள் இணைய கூடாத ஒரு ராசியாக கன்னி ராசி பார்க்கப்படுகிறது. நெருப்பு ராசியான சிம்ம ராசிக்காரர்கள் என்றும் தலைமையிடத்தில் இருப்பதையே விரும்புபவர்கள். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை உங்களுக்கு குறைவாகவே இருக்கும். நீங்கள் மற்றவர்களைப் புரிந்து கொள்வதை விட உங்களை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அடம் பிடிப்பவர்கள். சிம்ம ராசிக்காரர்கள் ஆதிக்கம் செலுத்துவதை கன்னி ராசிக்காரர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே கன்னி ராசிக்காரர்களுடன் நீங்கள் இணையும் பொழுது ஆரம்ப காலகட்டத்தில் ஆனந்தமான வாழ்க்கை அமைந்தாலும் சிறிது காலம் கழித்து உங்கள் இருவருக்கும் இடையே கட்டாயம் பிரச்சினைகள் மற்றும் பிளவுகள் உண்டாகும்.

kanni

கன்னி ராசிக்காரர்களாகிய நீங்கள் மகரம் அல்லது விருச்சிக ராசிக்காரர்கள் உடன் இணைந்தால் உங்களது வாழ்க்கை பிரகாசம் அடையும். நில ராசியான கன்னி ராசிக்காரர்கள் நில ராசியான மகரத்துடனோ, நீர் ராசியான விருச்சிகத்துடனோ சேரும் பொழுது பிரச்சனைகள் இன்றி நல்ல வாழ்க்கை அமையும். இவர்களுக்கு பிறக்க இருக்கும் குழந்தைகளும் அறிவில் சிறந்தவர்களாக விளங்குவார்கள். நில ராசியான கன்னி ராசிக்காரர்கள் இணைய கூடாத ராசியாக மிதுன ராசிக்காரர்கள் பார்க்கப்படுகிறார்கள். இவ்விரு ராசிகளும் இணையும் பொழுது சண்டை, சச்சரவுகள் அதிகமாக காணப்படும். சிறு சிறு விஷயங்களில் கூட பெரிய விஷயமாக மாற்றி விடுவார்கள். கடைசியில் இருவருக்கும் பிரிவுதான் ஏற்படும்.

துலாம் ராசிக்காரர்களாகிய நீங்கள் காற்றை அடிப்படையாக கொண்டவர்கள். நீங்கள் மீன ராசிக்காரர்களுடன் இணையும் பொழுது பிரச்சனையே வாழ்க்கை என்ற சூழ்நிலையை எதிர்கொள்ள நேரலாம். இவ்விரு ராசிக்காரர்களும் இடையே திருமண பந்தம் ஏற்பட்டால் சரியான புரிதல் இருக்காது. கடலில் மிதக்கும் படகை போல அவர்கள் வாழ்க்கை தத்தளித்துக் கொண்டே இருக்கும். பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான அறிவாற்றல் இவர்களிடம் இருக்காது. அதனால் இவர்களுடைய வாழ்க்கை சிறப்புற அமையாது.

dhanusu-rasi

தனுசு ராசிக்காரர்களாகிய நீங்கள் உங்களது இணையை அதிகமாக விரும்புவீர்கள். பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து வைப்பதை விட உங்களுக்கு காதல் திருமணமே மகிழ்ச்சிகரமான வாழ்க்கையாக இருக்கும். குறிப்பிட்ட வயதிற்குள் உங்களது வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் நீங்கள் சம்பாதித்து விடுவீர்கள். தனுசு ராசிக்காரர்கள் இணையக் கூடாத ராசிக்காரர்களாக கருதப்படுவது மகர ராசிக்காரர்கள். இவ்விரு ராசிக்காரர்களும் இணையும் பட்சத்தில் அன்பு குறைந்து இருவருக்கும் இடையே அதி விரைவில் வெறுப்பு வளர்ந்து விடும்.

இதையும் படிக்கலாமே
எந்த கிரக தோஷம் நீங்க எந்த விலங்குக்கு உணவு கொடுப்பது பலன் தரும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Entha rasiku entha rasi porutham in Tamil. Rasi porutham in Tamil. Best zodiac pairs. Jothida porutham in Tamil. Astrology in Tamil.