- Advertisement -

பெண்கள் கட்டாயம் செய்யக்கூடாத அந்த 3 தவறுகள் என்னென்ன? இந்த தவறுகளை திருத்திக் கொண்டால், கணவர் கொடுத்த காசை சுலபமாக சேமித்து விடலாம்.

நம்முடைய வீட்டில் மகாலட்சுமி கலாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்றால், அது பெண்கள் கையில்தான் உள்ளது. பெண்கள் தங்களுடைய வீட்டை எப்படி பொறுப்பாக பார்த்துக் கொள்கிறார்கள் என்பதை வைத்துதான் அந்த வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக தங்கலாமா? வேண்டாமா? என்று முடிவு செய்வாள். மேற்கண்ட விஷயங்கள் எல்லாம் கிட்டத்தட்ட நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ‘என்னுடைய வீட்டை நான் எப்போதும் சுத்தமாகத்தான் வைத்து இருக்கின்றேன்’! இருந்தாலும் வீட்டில் சேமிப்பு தங்கவே இல்லையே! அது ஏன்? இந்த கேள்வி உங்கள் மனதிலும் எழுகிறதா?

சில பேரது வீட்டில் சேமிப்பு தங்காமல் இருப்பதற்கு அந்த வீட்டுப் பெண்கள் செய்யும் தவறு தான் காரணமாக இருக்குமே தவிர, மற்றபடி பெரிய பிரச்சினைகள் எதுவுமே இருக்காது.  வீட்டில் அந்தப்பெண் அறியாமல் செய்யக்கூடிய அந்த சின்ன சின்ன தவறுகளை கூட திருத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பதிவு. அது என்ன தவறு, என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டு திருத்திக் கொள்ளலாமா!

- Advertisement -

ஒரு வீட்டில் பெண்கள் கோவிலாக மதிக்கக்கூடிய இடம் பூஜை அறை என்றால், மற்றொன்று இடம் சமையல் அறையாக இருக்க வேண்டும். எந்த வீட்டில் ஒரு பெண், சமையல் அறையை, பூஜை அறையாக நினைத்து சுத்தபத்தமாக வைத்துக் கொள்கிறாளோ அந்த வீட்டில் லட்சுமி நிச்சயம் தங்குவாள். இரவு நேரத்தில் சாப்பிட்ட எச்சில் பாத்திரங்களையும், மிச்சம் மீதி உள்ள பண்டங்களையும் முறையாக எடுத்து வைக்காமல் கண்டபடி போட்டு விட்டு உறங்கச் செல்லக்கூடாது.

மறுநாள் காலை எழுந்ததும், சமையலறையை சுத்தம் செய்யாமல் சமையலை தொடங்கக்கூடாது. காலை அவசர வேலை காரணமாக விரைவாக சமைக்க வேண்டும் என்றால், முடிந்தவரை இரவு நேரத்தில் சமையலறையை சுத்தம் செய்து வைத்துவிட்டு தூங்குவதே மிகவும் சிறப்பு.

- Advertisement -

‘இரவு நேரத்தில் நாம் சமையல் அறையை சுத்தம் செய்கின்றேன். எச்சில் பாத்திரத்தை முறையாகத்தான் எடுத்து வைக்கின்றேன்.’ இருந்தும் என் வீட்டில் பணம் தங்கவில்லை. இப்படிப்பட்டவர்கள் செய்யும் ஒரு தவறு, காலை சமயலறைக்கு சென்ற உடன் அடுப்பை பற்ற வைப்பது தான். அடுப்பை பற்ற வைப்பதற்கு முன்பு, கட்டாயம் துணி கொண்டு துடைக்க வேண்டும். உங்களது அடுப்பு ஏற்கனவே சுத்தமாக தான் இருக்கிறது. இருந்தாலும் பரவாயில்லை அந்த கேஸ் ஸ்டவ்வை பற்ற வைப்பதற்கு முன்பாக ஒரு முறை துணி கொண்டு துடைத்து விட்டு, அக்னி பகவானை ஒருமுறை மனதார வேண்டிக்கொண்டு உங்களது அடுப்பை பற்ற வைத்தால் உங்கள் கையில் சேமிப்பை அதிகரிக்கும்.

இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு அடுப்பை வானம் பார்க்க வைக்கக் கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லுவார்கள். அடுப்பின் மேல் வெறுமனே ஏதாவது ஒரு பாத்திரத்தை வைப்பது மிகவும் நல்லது. அந்த காலத்தில் எல்லாம் விரகடுப்பில் சமைப்பார்கள் அல்லவா? சமைத்த அடுப்பு சூடாக இருக்கும்போது, பூனை வந்து அமர கூடாது என்பதற்காக அதன் மேல் ஒரு பாத்திரத்தை வைத்துள்ளார்கள். அதாவது ஓட்டு வீட்டுக்குள் பூனை வந்துபோகும் நடமாட்டம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நம் வீட்டிற்குள் பூனை வராது என்றாலும், நம் வீட்டில் இருப்பது கேஸ் அடுப்பாக இருந்தாலும், இந்த பழக்கத்தை நம் வீட்டில் கடைபிடித்தால் நன்மைதான்.

- Advertisement -

இரண்டாவதாக பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயம், அவர்களது காலில் போட்டு வைத்திருக்கும் மெட்டி. கல்யாணமான போது போட்டிருப்பார்கள்! ஐந்து, ஆறு வருடம் கழிந்து இருக்கும். ஆனால் மெட்டியை மாற்றாமல் அந்த பழைய மெட்டியை அணிந்திருப்பார்கள். அதாவது தேய்ந்த மெட்டியை பெண்கள் காலில் அணிந்து கொள்ளக் கூடாது. அது தரித்திரத்தை தேடித்தரும். முடிந்தவரை அதை இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையாவது மாற்றுவது நல்லது. அதைப் பார்க்கும் போதே நமக்கு நன்றாக தெரியும். மெட்டி தேய்ந்திருக்கிறதா, இல்லையா? என்று. தேய்ந்து இருந்தால், உடனே அதை கொடுத்துவிட்டு புதிய மெட்டியை வாங்கி அணிந்து கொள்வது நல்லது. நம்முடைய முன்னோர்கள் கால் கட்டை விரலுக்கு பக்கத்தில் உள்ள விரலில் மட்டும் தான் மெட்டி அணிய வேண்டும் என்று சாஸ்திரப்படி சொல்லியுள்ளார்கள். ஆகையால் மெட்டி போட்டு இருக்கும் விரலுக்கு அடுத்த விரல், அதற்கு அடுத்த விரல் என்று மூன்று விரல்களில் மெட்டி அணிவதை தவிர்ப்பது நல்லது.

அடுத்ததாக வீட்டில் பெண்கள் தலைக்கு வைப்பதற்காக பூவை வாங்கினால், உங்களது கணவர் உங்களுக்காக பூவை வாங்கி கொண்டு வந்து தந்தாலும், அந்த பூவை தலையில் வைப்பதற்கு முன்பு அந்த பூவில் இருந்து கொஞ்சம் பூவை காமாட்சி அம்மன் விளக்கிற்க்கு வைப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். இது குடும்பத்திற்கு நிரந்தர லட்சுமி கடாட்சத்தை தேடித் தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆக இந்த சின்ன சின்ன தவறுகளை அழறியாமல் இதுநாள்வரை செய்திருந்தால் இனி அதை திருத்திக் கொண்டு உங்களுடைய வீட்டில் இருக்கும் தரித்திரத்தை துரத்தியடித்து சேமிப்பை சுலபமாக சேர்த்து விட முடியும்.

இதையும் படிக்கலாமே
ஸ்டிக்கர் பொட்டு வைக்கும் பழக்கம் உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உள்ளதா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Pengal seiya kudathavai. Pengal seiya vendiyavai Tamil. Pengal seiyya vendiya seyalgal. Vettil pengal seiya vendiyavai Tamil. Pengal kadamaigal in Tamil.

- Advertisement -