ஸ்டிக்கர் பொட்டு வைக்கும் பழக்கம் உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உள்ளதா?

kungumam1
- Advertisement -

சுமங்கலிப் பெண்களாக இருந்தால் நெற்றியில் கட்டாயம் குங்குமப்பொட்டு இருக்க வேண்டும், என்ற காலமானது மாறி ஸ்டிக்கர் பொட்டோ, குங்குமப்பொட்டோ, சாந்து பொட்டோ, அல்லது கலர் சாந்து பொட்டு ஏதாவது ஒன்று அந்த நெத்தியில் இருந்தால் போதும் என்ற நிலைமைக்கு நாம் வந்துவிட்டோம். இதை யார் மனதையும் புண்படுத்துவதற்காக கூறவில்லை. நவநாகரிகம் என்று மாறி வரும் இந்த காலகட்டத்தில் நடந்துகொண்டிருக்கும் உண்மையான நிகழ்வு தான் இது. ஆனால், இந்த காலகட்டத்திலும் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்ளாமல் ஒரு நொடி கூட இருக்காத பல சுமங்கலி பெண்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

bindi

குங்குமம் வைக்கும் பெண்களாக இருந்தாலும் சரி. ஸ்டிக்கர் பொட்டு வைக்கும் பெண்களாக இருந்தாலும் சரி. நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ளாமல் ஃபேஷனாக இருக்கும் பெண்ணாக இருந்தாலும் சரி. இந்த குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொள்வதற்கு பின்னால் என்ன அர்த்தம் மறைந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அது என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாமா.

- Advertisement -

குங்குமம் வைப்பதன் நன்மைகள்

சுமங்கலிப் பெண்ணின் வகுடில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஒரு ஐதீகம் உள்ளது. ஆகவே, கட்டாயம் வகிட்டில் குங்குமம் வைக்க வேண்டியது அவசியம். இதேபோல் நெற்றியில் குங்குமம் வைப்பது மங்களகரத்தை வெளிப்படுத்தும் என்பது ஆன்மீக ரீதியான கருத்து. இது பொதுவாக நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.

kungumam

அந்த காலங்களில் எல்லாம் பெண்களை வசியம் செய்வதற்கு மந்திர தந்திர முறைகளை அதிகமாக பிரயோக படுத்துவார்கள். அப்படியிருக்க பெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால் இரு புருவங்களுக்கும் மத்தியில் குங்குமம் வைத்துக் கொண்டாலே போதும். எந்த ஒரு மந்திர தந்திர வசிய முறைகளும் அவர்களை அண்டாது என்பது நம்பிக்கை. இது உண்மையும் கூட. இரு புருவங்களுக்கிடையில் இருக்கும் சக்கரம் மிக நாசுக்கானது. அந்த இடத்தில் குங்குமம் வைக்காமல் வெற்றிடமாக இருந்தால் கட்டாயம் பாதிப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அந்த காலத்தில் தானே மந்திரம் தந்திரம் எல்லாம் இருந்தது. இந்த காலத்தில் என்ன பயம் இருக்கிறது? என்ற விதண்டாவாத கேள்விக்கு பதில் இல்லை. தவறான கண்ணோட்டத்தில் கூட ஒருவரது கெட்ட பார்வை பெண்களை தாக்கக் கூடாது என்பதற்காகத்தான்  நெற்றிப்பொட்டில் குங்குமம் வைக்க சொன்னார்கள் நம் முன்னோர்கள்.

kungumam

மஞ்சள், சுண்ணாம்பு, படிகாரம் இவை மூன்றுமே கிருமிநாசினி. இதை வைத்துதான் குங்குமம் தயாரிக்கப்படுகிறது. இந்த மூன்று பொருட்களுக்கும் எதிர்மறை ஆற்றலையும், கெட்ட சக்தியையும் கண் திருஷ்டியும், விரட்டியடிக்கும் தன்மையும் உண்டு என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இது மட்டுமல்லாமல் இரு புருவங்களுக்கு மத்தியில் குங்குமம் வைத்துக் கொள்வதன் மூலம் உடலிலிருந்து, மூளைக்குச் செல்லக்கூடிய நரம்புகளின் சூட்டை இந்த குங்குமம் தணிப்பதாக ஒரு அறிவியல் ஆராய்ச்சி சொல்கிறது. நெற்றியில் இருக்கும் குங்குமத்தின்மேல் சூரிய ஒளிக்கதிர்கள் விழும்போது அதன் சக்தியானது இன்னும் அதிகரிக்கப்பட்டு, அந்த சக்தியோடு விட்டமின் டி சக்தியும் ஒன்றாக சேர்ந்து பெண்களின் உடலுக்கு அதிகப்படியான ஆற்றலை சேர்கிறது.

kungumam

குங்குமம் என்று சொல்லக்கூடிய இந்த ஒரு பொருளின் மூலம் பலவகைப்பட்ட நன்மைகள் உள்ளடங்கி இருப்பது தெரியாமல் இன்று அந்தப் பழக்கத்தை நாம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி, பலபேர் மறந்தே போய்விட்டார்கள் என்று சொன்னால் அது பொய்யாகாது. ஸ்டிக்கர் பொட்டு வைக்கும் பெண்களாக இருந்தாலும் சரி, ஸ்டிக்கர் பொட்டுக்கு கீழே இரண்டு புருவத்தின் மத்தியிலும் சிறிதளவு குங்குமத்தை இட்டுக் கொள்வது தான் சரியான முறை என்பதை குறிப்பிடவே இந்தப் பதிவு.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டு சமையலறையில் உப்பு ஜாடியை எந்த இடத்தில் வைத்துள்ளீர்கள்? பிரச்சினைக்கு இது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kungumam benefits in Tamil. Kungumam palangal. Kungumam in Tamil. Kungumam vaipathu. Kungumam vaikum murai.

- Advertisement -