- Advertisement -

மூன்று நாட்களில் நினைத்தது நடக்க பரிகாரம்

- Advertisement -

இதுவரை யாரும் கேள்வி படாத விசித்திர பரிகாரம் என்று இதை சொல்லலாம். இந்த பரிகாரத்தை முருகரை நினைத்து தான் செய்ய வேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது. உங்களுடைய இஷ்ட தெய்வம் எது. நீங்கள் தினம் தினம் எந்த தெய்வத்தை நினைத்து வீட்டில் விளக்கு ஏற்றி, பூஜை செய்கிறீர்கள்.

அந்த தெய்வத்தை நினைத்தும் இந்த பரிகாரத்தை செய்யலாம். முருகன் வெற்றி கடவுள். ஒரு காரியத்தில் வெற்றி கிடைக்க வேண்டும் என்றால் முருகனை நினைத்து பரிகாரத்தை செய்தால் கூடுதல் பலன் கிடைக்கும். வாழ்வில் உங்களுக்கு எவ்வளவு பெரிய கஷ்டம் இருந்தாலும், அந்த கஷ்டமானது மூன்றே நாட்களில் உங்களை விட்டு விலகிச் செல்லும் அதிசயம் நடக்கும். இது உண்மை.

- Advertisement -

நம்பிக்கையோடு பரிகாரத்தை செய்பவர்களுக்கு கடவுள் நிச்சயம் கைவிடமாட்டார். அந்த பரிகாரம் என்ன. ஆன்மிகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா. விளக்கு ஏற்ற வேண்டாம். பூஜை செய்ய வேண்டாம். எந்த ஆன்மீகம் சார்ந்த விஷயத்தையும் செய்ய வேண்டாம். ஆன்மீகம் சார்ந்த நம்பிக்கை உங்கள் மனதில் இருக்கிறதா. எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளுங்கள்.

மூன்று நாட்களில் நினைத்தது நடக்க பரிகாரம்

ஒரு சிவப்பு நிற பேனாவை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வலது கால் விரல்கள் இருக்கும் அல்லவா. கால் பாதத்தில், விரல்களுக்கு கீழ்ப்பாக்கத்தில் உங்களுடைய கோரிக்கையை ஒரு வரியில் எழுதுங்கள். எந்த கோரிக்கையாக இருந்தாலும் சரி, ஒரு வரியில் உங்களுடைய தேவையை வலது கால் பாதத்தில் எழுதி விடுங்கள். கடன் தீர வேண்டும். வருமானம் பெருக வேண்டும். குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும். திருமணம் நடக்க வேண்டும். நோய்நொடி தீர வேண்டும் இப்படி எழுதலாம்.

- Advertisement -

உங்களுடைய பிரச்சினை என்ன என்பது உங்களுக்கு தெரியும் அல்லவா. குறிப்பிட்ட அந்த நபரின் பெயரை எழுதி அந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்றும் பாதத்தில் நீங்கள் எழுதிக் கொள்ளலாம். நினைவு வைத்துக் கொள்ளுங்கள் சிவப்பு நிற பேனாவில் தான் எழுத வேண்டும். வலது கால் பாதத்தில், கால் விரலுக்கு கீழ்ப்பகுதியில் இருக்கும் இடத்தில் சிவப்பு நிற பேனாவில் ஒரே ஒரு கோரிக்கையை எழுதி விடுங்கள்.

பிறகு எழுந்து நின்று வலது காலை தரையில் 11 முறை தட்ட வேண்டும். 11 முறை காலை தரையில் தட்டும் பொழுதும் நீங்கள் காலில் என்ன கோரிக்கையை எழுதி வைத்தீர்கள். அந்த கோரிக்கை நடக்க வேண்டும் என்று இந்த பிரபஞ்சத்திடமும் உங்கள் வாயால் சொல்லலாம். சத்தமாகவும் சொல்லலாம் மனதிற்குள்ளேயும் சொல்லிக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம். ஒரே ஒரு நாள் மட்டும் இந்த பரிகாரத்தை செய்து அப்படியே விட்டுவிடுங்கள்.

- Advertisement -

தொடர்ந்து இதே பரிகாரத்தை செய்ய வேண்டும் என்று அவசியம் கிடையாது. ஆனால் நீங்கள் அந்த வலது கால் பாதத்தில் என்ன வேண்டுதலை எழுதினீர்களோ, அந்த வேண்டுதல் கூடிய விரைவில் நிச்சயம் பலிக்கும். உங்களுடைய இஷ்ட தெய்வத்தை வேண்டி இந்த பரிகாரத்தை செய்து பாருங்களேன். நஷ்டம் அடைவதற்கு எதுவுமே இல்லை. ஆனால் ஏதோ மந்திரம் போட்டது போல, மேஜிக் செய்தது போல நீங்க நினைத்தது அப்படியே நடந்து விடும். நம்பவே மாட்டீங்க.

இதையும் படிக்கலாமே: பிள்ளைகள் பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற

பிரபஞ்சத்திற்கு கோடி நன்றி சொல்லுங்கள். சந்தோஷம் மட்டுமே உங்களுக்கு சொந்தமாக இருக்க வேண்டும் என்று முருகனை வேண்டிக்கொள்வோம். நல்லதற்காக மட்டுமே இந்த பரிகாரம் பயன்பட வேண்டும் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -