- Advertisement -
சுவாரஸ்ய தகவல்கள்

அகழ்வாய்வில் மகா பாரத போர் கருவிகளை கண்டு அசந்த ஆய்வாளர்கள்

உலகின் பல இன கலாச்சாரம் கொண்ட மக்கள் அனைத்து நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் பலரும் தங்களின் முன்னோர்கள் விட்டுச்சென்ற சில சான்றுகளை அடையாளமாக வைத்து தங்களின் வரலாற்றை பதிவு செய்கின்றனர். அந்த வகையில் இந்திய நாட்டு ஆய்வாளர்களும் சமீபத்தில் அகழ்வாய்வில் ஈடுபட்ட போது மகாபாரத காலத்தின் சில பொருட்கள் வெளிப்பட்டன. அதுகுறித்து இங்கு காண்போம்.

இந்தியர்கள் பெரும்பாலானோரின் மனதில் நீங்கா இடம் பெற்ற அமர காவியம் “மகாபாரதம்”. அதிலும் குருச்சேத்திர யுத்தத்தின் போது “பகவான் கண்ணன்” பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனனுக்கு பிரபஞ்சத்தின் உண்மை நிலையை விளக்க ஆற்றிய உரை “பகவத் கீதை” எனும் புனித நூலக இந்துக்கள் அனைவராலும் போற்ற படுகிறது. இத்தகைய புனிதமான இதிகாச சம்பவம் ஒரு கற்பனை கதை என்றே சிலர் கூறிவந்தனர்.

- Advertisement -

இதற்கிடையில், சமீபத்தில் இந்திய வரலாறு மற்றும் அகழ்வாராய்ச்சி துறையினர் உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பக்ஹ்ப்பட் மாநிலத்தில் நடத்திய அகழ்வாய்வில் மகாபாரத காலத்தோடு தொடர்புடைய பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த ஆய்வில் 4000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த போர்வாட்களின் பகுதிகள், உடைந்த அம்பு மற்றும் ஈட்டியின் பகுதிகள், சிதைந்த நிலையில் ஒரு ரதம் மேலும் சில மனித எலும்புகள், எட்டு இலைகள் போன்ற ஒரு உருவம் பொறிக்கப்பட்ட சவப்பெட்டி, உடைந்த மண்பாண்டங்கள் தங்க மணிகள் போன்றவை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். இந்த பொருட்கள் அனைத்தும் மகாபாரத போரோடு தொடர்புடையதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த அகழ்வாய்வில் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ரதம் இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். ஏனெனில் இத்தகைய ரதம் இந்தியாவில் கண்டெடுக்கப்பட்டது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு இது போன்ற ரதங்கள் உலகின் மிக பழமையான நாகரீகம் என கூறப்பட்ட “மெசப்பொட்டேமிய, எகிப்திய” நாகரீக ஆகழ்வாய்வுகளில் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன. இந்த ரதம் குறித்து மேலும் பல ஆய்வுகள் நடைபெறுகின்றன.

- Advertisement -

மகாபாரதத்தில் “பிரம்மாஸ்திரம்” எனப்படும் அணு ஆயுதம் போன்ற ஒன்று பயன்படுத்தப்பட்டதாக இந்தியாவின் பழமையான விஞ்ஞானத்தை குறித்து ஆராய்பவர்கள் கூறுகிறார்கள். இப்போது இங்கே கிடைத்திருக்கும் போர்க்கருவிகள் மற்றும் மனிதர்களின் எலும்புகளை அணு கதிரியக்க ஆய்வுக்கு உட்படுத்தும் போது அந்த பிரம்மாஸ்திரத்தை பற்றிய மேலும் பல உண்மைகள் தெரிய வரலாம் என கருதுகின்றனர் ஆய்வாளர்கள்.

இதையும் படிக்கலாமே:
அனுமனின் பாதச்சுவடுகள் இன்றும் அழியாமல் உள்ள சில இடங்கள் பற்றி தெரியுமா ?

English overview:
Here we discussed few things about excavation which happen in UP and the Mahabharatam period things which got in the

- Advertisement -