- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

நமக்கு ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து மகாலட்சுமி அருள் கிடைப்பதற்கு இந்த ஒரு தீபத்தை வைரவருக்கு ஏற்றி வழிபட்டாலே போதும். சகல செல்வங்களும் பெற்று நிறைவோடு வாழலாம்.

காக்கும் கடவுளாக கருதப்படும் சிவபெருமானின் அவதாரங்களில் ஒன்றுதான் பைரவ அவதாரம். இவரை நாம் கால பைரவர் என்று அழைத்தாலும் அஷ்ட பைரவராக வீற்றிருக்கிறார். எதிரிகளால் ஏற்படக்கூடிய பிரச்சனை, கடன் தொந்தரவு, வீட்டில் நிம்மதி இல்லாத தன்மை, விபத்துக்களால் அகால மரணம், என்று எந்த பிரச்சினையாக இருந்தாலும் காலபைரவரை நாம் வணங்கினால் இந்த பிரச்சனைகள் அனைத்திலும் இருந்து நம்மால் வெளிவர முடியும். அப்படிப்பட்ட கால பைரவருக்கு எந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால் நம் பிரச்சனைகள் தீர்வதோடு மட்டுமல்லாமல் மகாலட்சுமியின் அருளும் கிடைத்து சகல சம்பத்துகளும் பெற்று வாழ்வோம் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மனிதனுக்கு ஏற்படக்கூடிய அனைத்து வகையான பிரச்சனைகளில் இருந்தும் காக்கக்கூடிய தெய்வமாக திகழக்கூடியவர்தான் காலபைரவர். அதே சமயம் காலபைரவரின் மற்றொரு அம்சமாக திகழக்கூடிய ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் நமக்கு செல்வங்களை வாரி வழங்கக் கூடிய வள்ளலாக திகழ்கிறார். இவரை நாம் முறையாக வணங்குவதன் மூலம் நமக்கு மகாலட்சுமி தாயாரின் அருள் கிடைத்து அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் வெளிவந்து மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.

- Advertisement -

பைரவருக்கு உகந்த நாளாக கருதப்படுவது அஷ்டமி நாள். மாதத்தில் வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமிகள் வரும். வளர்பிறை அஷ்டமியில் அவரை நாம் வணங்கினோம் என்றால் நம்முடைய செல்வங்கள் அனைத்தும் வளரும் என்றும், தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் நம்முடைய கஷ்டங்களும், சங்கடங்களும் தீரும் என்றும் கூறப்படுகிறது.

பைரவருக்கு மிகவும் பிடித்த நிறமாக சிவப்பு நிறம் இருப்பதால் அவருக்கு நாம் என்ன செய்தாலும் சிவப்பு நிறத்தில் செய்தால் அவரின் அருளை பரிபூரணமாக நம்மால் பெற முடியும். அந்த வகையில் தான் பைரவருக்கு நாம் மாதுளம் பழத்தால் விளக்கேற்றினோம் என்றால் அவரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். மேலும் மாதுளம் பழம் என்பது மகாலட்சுமியின் அம்சம் என்பதால் அஷ்ட லட்சுமிகளின் அருளையும் நம்மால் பெற முடியும்.

- Advertisement -

நல்ல சிவப்பாக இருக்க கூடிய ஒரு மாதுளம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை பாதியாக நறுக்கிக் கொள்ளுங்கள். எலுமிச்சை பழ தீபம் ஏற்றுவதற்கு எப்படி நாம் எலுமிச்சம் பழத்தை நறுக்குவோமோ, அதேபோல் மாதுளம் பழத்தையும் நறுக்கி அதற்கு நடுவில் இருக்கக்கூடிய முத்துக்களில் சிறிதளவு மட்டும் ஒரு கரண்டியை உபயோகப்படுத்தி பள்ளமாக எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நாம் சுத்தமான நல்லெண்ணையோ அல்லது பசு நெய்யோ ஊற்றி தாமரைத் தண்டு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த தீபத்தை மாதத்தில் வரக்கூடிய ஏதாவது ஒரு அஷ்டமி தினத்தன்று ராகு காலத்தில் கால பைரவரின் சன்னதியில் ஏற்ற வேண்டும். வளர்பிறையில் ஏற்றினோம் என்றால் தொடர்ந்து வளர்பிறையில் தான் ஏற்ற வேண்டும். தேய்பிறையில் ஏற்றினோம் என்றால் தொடர்ந்து தேய்பிறையில் தான் ஏற்ற வேண்டும். மாற்றி மாற்றி ஏற்றக்கூடாது.

இதையும் படிக்கலாமே: தாங்க முடியாத துன்பத்தில் தவிப்பவர்கள் துர்க்கை அம்மனை இந்த ஒரு மலர் கொண்டு அர்ச்சனை செய்தால் நிச்சயம் அம்பிகையே நேரில் வந்து உங்கள் பிரச்னைகளை தீர்ப்பார்.

இவ்வாறு நாம் தொடர்ந்து எட்டு அஷ்டமி தினத்தன்று பைரவருக்கு மாதுளை பழம் தீபம் ஏற்றுவதன் மூலம் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, அஷ்ட லட்சுமிகளின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -