- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து தீபம் ஏற்றும் போது, இந்த தவறை மட்டும் கட்டாயம் செய்து விடாதீர்கள்! பண கஷ்டம் வந்து விடும்.

ஆன்மீக ரீதியாக இன்று சொல்லப்படும் முக்கியமான விஷயங்களில், பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து தீபமேற்ற வேண்டும் என்ற ஒரு வழிபாட்டு முறையும் முக்கியமாக இருந்து வருகிறது. அந்த சமயம் கட்டாயம் வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த ஒரு தவறை செய்யவேக் கூடாது. அது என்ன தவறு! என்பதைப் பற்றியும், பிரம்ம முகூர்த்த நேரத்தில் என்ன செய்தால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும் என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சில பேர் வீடுகளில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தீபமேற்றும் பழக்கம் இருந்தால், விளக்கு ஏற்றுவதற்கு முன்பு, அவர்கள் வீட்டை கூட்டி சுத்தம் செய்வது கூடாது. அதாவது தேவர்களும், தேவதைகளும், மகாலட்சுமியும், உலா வரக் கூடிய சமயம் அது. அந்த சமயத்தில் வீட்டைக் கூட்டி கழிவுகளை வெளியே போடும் பழக்கம் உங்களிடம் இருந்தால், தயவு செய்து அதை விட்டு விடுங்கள்.

- Advertisement -

வீட்டை கூட்டாமல் தீபம் ஏற்றலாமா? என்ற கேள்வி எல்லோருக்கும் வரும். முடிந்தவரை முந்தைய நாளே உங்களது வீட்டை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். பிரம்ம முகூர்த்த காலை வேளையில் வீட்டு வாசலை மட்டும் கூட்டி கோலமிடுவது தான் சரியான முறை. தவிற எக்காரணத்தைக் கொண்டும் வீட்டை கூட்டி குப்பைகளை வெளியே கொட்டுவது மிக மிகத் தவறு. குறிப்பாக காலை 4.00 மணியிலிருந்து 5.30 மணி வரை வீட்டை கூட்டக் கூடாது. இந்த நேரத்தில் கட்டாயம் வாசல் தெளித்து கோலம் போடலாம்.

சிலபேருக்கு வீட்டை கூட்டி சுத்தம் செய்யாமல் தீபமேற்ற பிடிக்காது. இப்படிப்பட்டவர்கள் பூஜை அறையில் மட்டும் ஒரு துணியால் துடைத்து சுத்தம் செய்துவிட்டு தீபம் ஏற்றிக் கொள்ளலாம். தனியாக பூஜை அறை இல்லாதவர்கள், பூஜை அலமாரிக்கு கீழ் பகுதியை மட்டும் ஈரத்துணியால் துடைத்து விட்டு தீபமேற்றுவது உத்தமம்.

- Advertisement -

அடுத்ததாக பிரம்மமுகூர்த்தத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய ஒரு வேலை உள்ளது. வாசல் தெளித்து கோலம் போடும், அந்த சமயம் உங்கள் வீட்டு அருகில் ஏதாவது ஒரு நாய் வந்தாலோ அல்லது பூனை வந்தாலோ அதற்கு உங்களால் முடிந்த பிஸ்கட்டை அல்லது ஏதாவது தின்பண்டங்களை உணவாக வைக்கலாம். உங்களது வீட்டு பக்கத்தில் மாட்டுக்கொட்டகை இருந்தால் இன்னும் சிறப்பு. அங்கு இருக்கும் மாடுகளுக்கு உங்களால் முடிந்தது ஒரு வாழைப்பழத்தையாவது பிரம்ம முகூர்த்த நேரத்தில் கொடுப்பது சிறப்பு.

சில பேர் வீடுகளில், விடியற்காலை சமயத்திலேயே, மொட்டை மாடியிலோ வெளிப்பகுதியிலோ அல்லது வீட்டின் அருகில் இருக்கும் மரத்திலோ காக்காய், குருவிகள், பறவைகள் எல்லாம் எழுந்திருக்கும் சத்தம் கேட்கும். அவைகளுக்கு உணவு தானியங்களை போடலாம். சூரிய உதயத்திற்கு முன்பு வாயில்லா ஜீவனுக்கு கொடுக்கப்படும் உணவு, நம்முடைய செல்வ வளத்தை அதிகரிப்பதாக சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தினந்தோறும் கட்டாயம் செய்ய வேண்டுமா? என்ற சந்தேகம் வேண்டாம். உங்களால் எப்போதெல்லாம் முடியுமோ அப்போது இந்த புண்ணிய செயலை செய்து வாருங்கள்.

- Advertisement -

பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து இறைவழிபாடு செய்வதே பெரும் புண்ணியமான காரியம் தான். அதிலும் குறிப்பாக மேற்குறிப்பிட்ட ஒரு தவறை கட்டாயம் செய்யாதீர்கள். மேற்குறிப்பிட்ட ஒரு நல்ல காரியத்தை செய்வதன்மூலம் உங்களின் புண்ணிய பட்டியலில், மேலும் புண்ணியம் சேரும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த மாதிரி கோலம் போட்டால் கடன் பிரச்சனை கட்டாயம் குறையாது தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Brahma muhurtham benefits in Tamil. Brahma muhurtham. Brahma muhurtham neram Tamil. Brahma muhurtham valipadu. Brahma muhurtham vilakku.

- Advertisement -