- Advertisement -

பொதுவாக சந்திர கிரகணம் பௌர்ணமி அன்றே நிகழும். அந்த வகையில் இந்திய நேரப்படி இன்று இரவு 12.13 முதல் நாளை அதிகாலை 04:30 மணி வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதன் காரணமாக எந்தெந்த நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவார்கள், அவர்கள் என்ன பரிகாரம் செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

உத்திராடம் நட்சத்திரத்தில் நிகழவிருக்கும் இந்த சந்திர கிரகணத்தால் கிருத்திகை, உத்திரம், உத்திராடம் , ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்வ வேண்டியுள்ளது

- Advertisement -

மேலே குறிப்பிட்டுள்ள நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் கிரகண சமயத்தின் போது தியானம் இருந்து இறைவனை மனதார வேண்டிக்கொள்வது நல்லது. கிரகணம் முடிந்த உடன் கீழே குறிப்பிட்டுள்ள பரிகாரங்களை செய்து கிரகண தோஷத்தை போக்கிக்கொள்ளலாம்.

பரிகாரங்கள்:
புனித நீரால் வெள்ளி பாத்திரத்தில் மகா லட்சுமிக்கு அபிஷேகம் செய்து மகாலட்சுமி அஷ்டோத்ரம் சொல்வது சிறந்தது.

- Advertisement -

அம்மனுக்கு சந்தன காப்பு சார்த்தி வழிபாடு செய்து அபிராமி அந்தாதி சொல்வது சிறந்தது.

சந்திர கிரகணம் நிகழும் சமயத்தில் சந்திரன் காயத்ரி மந்திரம் சொல்வதும் ஒரு நல்ல பரிகாரம் தான்:

- Advertisement -

சந்திர காயத்ரி மந்திரம் 1:

ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தன்னஸ் சந்திரஹ் ப்ரசோதயாத்

சந்திர காயத்ரி மந்திரம் 2:

ஓம் அம்ருதேசாய வித்மஹே
ராத்ரிஞ்சராய தீமஹி
தன்னஸ் சந்திரஹ் ப்ரசோதயாத்

சந்திர காயத்ரி மந்திரம் 3:

ஓம் ஆத்ரேயாய வித்மஹே
தண்டஹஸ்தாய தீமஹி
தன்ன: சந்திரஹ் ப்ரசோதயாத்

சந்திர காயத்ரி மந்திரம் 4:

ஓம் க்ஷீரபுத்ராய வித்மஹே
அமிர்தாய தீமஹி
தன்ன: சந்திரஹ் ப்ரசோதயாத்

சந்திர காயத்ரி மந்திரம் 5:

ஓம் சங்கஹஸ்தாய வித்மஹே
நிதீச்வராய தீமஹி
தன்ன: சோமஹ் ப்ரசோதயாத்

சந்திர காயத்ரி மந்திரம் 6:

ஓம் சுதாகராய வித்மஹே
மஹாஓஷதீஸாய தீமஹி
தன்னோ சோமஹ் ப்ரசோதயாத்

இதையும் படிக்கலாமே:
சந்திர கிரகணம் சமயத்தில் இதை எல்லாம் மறக்காமல் செய்யுங்கள்

மேலே உள்ள மந்திரத்தில் ஏதாவது ஒரு மந்திரத்தை கிரகண சமயத்தில் உச்சரிப்பது நல்லது.

- Advertisement -