சந்திர கிரகணம் சமயத்தில் எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது தெரியுமா ?

Chandra grahanam
- Advertisement -

நிலவானது பூமிக்கு பின்னால் செல்வதால் சூரியனின் கதிர்கள் நிலவின் மீது படாமல் பூமியால் மறைக்கப்படும் அந்த நிகழ்வே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வின் போது சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும். பொதுவாகவே சந்திர கிரகணம் பௌர்ணமி அன்றே நிகழும். அந்த வகையில் இன்று நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தின் போது எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது என்பதை பற்றி பார்ப்போம் வாருங்கள்.

chandra grahanam

இன்று(27-07-2018) இரவு சுமார் 11.54 மணி முதல் நாளை அதிகாலை 3.55 மணி வரை சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. அந்த நேரத்தில் கர்பிணி பெண்கள், வயதானோர், நோயுற்றவர்கள், குழந்தைகள் ஆகியோர் கிரகணம் ஏற்படும் சமயத்தில் வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. இதன் மூலம் கிரகண கதிர்வீச்சில் இருந்து அவர்கள் தப்பிக்க இயலும்.

- Advertisement -

கிரகணம் ஆரமிப்பதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பில் இருந்து எதையும் உண்ணக்கூடாது. வீட்டில் ஏதேனும் உணவை சமைத்து வைத்திருந்தால் அதில் தர்ப்பை புல்லை போட்டு வைக்க வேண்டும். கிரகணம் முடிந்து குறைந்தது ஒரு மணி நேரம் கழித்தே உணவருந்த வேண்டும்.

food

கிரகணம் ஏற்படும் சமயத்தில் கோவில்கள் அனைத்தும் மூடி இருக்கும். ஆகையால் வீட்டில் இருந்தபடியே தியானம் செய்யலாம், இறைவணனின் நாமத்தை ஜபித்தவாறு இருக்கலாம் அல்லது கீழே உள்ள மந்திரத்தை ஜபிக்கலாம்.

- Advertisement -

சந்திர கிரகணம் மந்திரம் :

யோஸெள வஜ்ரதாரோ தேவ; ஆதித்யானாம் ப்ரபுர்தப;
ஸஹஸ்ரநயன: சந்த்ரக்ரஹ பீடாம் வ்யபோஹது

- Advertisement -

கிரகண சமயங்களில் ஹோமங்கள் செய்யலாம். இதன் மூலம் வழக்கத்திற்கு மாறாக அதிகப்படியான பலன்களை அந்த ஹோமத்தில் இருந்து நாம் பெற இயலும். உதாரணத்திற்கு ஒரு ஹோமத்தில் இருந்து நாம் 100 மடங்கு பலன்களை பெற இயலும் என்றால் அதே ஹோமத்தை சந்திர கிரகண சமயத்தில் செய்யும்போது அதில் இருந்து 1000 மடங்கு பலனை பெறலாம்.

parigaaram

கிரகணம் முடிந்த பிறகு தர்ப்பணம் செய்வது நல்லது. இதனை கிரகண தர்ப்பணம் என்பர். இதன் மூலம் கிரகணத்தால் ஏற்படக்கூடும் தோஷங்கள் அனைத்தும் விலகும், புண்ணியம் பெருகும். கிரகணம் துவங்குவதற்கு முன்பும் கிரகணம் முடிந்த பிறகும் குளிப்பது நல்லது.

இதையும் படிக்கலாமே:
கிரகண சமயத்தில் இந்த எண்ணெயில் விளக்கேற்றுவது அவசியம்

கிரகணம் முடிந்த பிறகு அருகில் உள்ள கோயிலிற்கு சென்று அர்ச்சனை செய்து வழிபடுவது மேலும் சிறப்பை சேர்க்கும். கிரகணம் முடிந்த பிறகு பசியால் வாடும் ஏழைகளுக்கு அரிசியை தானம் செய்வதன் மூலம் நமக்கு புண்ணியம் பெருகும்..

English overview:
Here we described Chandra grahanam 2018 do’s and don’ts in Tamil an also we suggested a mantra that needs to be chanted during Grahanam time.

- Advertisement -