- Advertisement -

தம்பதிகளுக்குள் பிரச்சனை தீர தீர்த்தம்.

- Advertisement -

கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் வந்து கொண்டிருந்தால், முதலில் அதனை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். எந்த பிரச்சனைகளும் ஒரு நாளைக்கு மேல் நீடிக்க கூடாது. அப்படி நீடித்தால் அது தொடர்கதை ஆகிவிடும். தம்பதிகளுக்குள் இருக்கும் பிரச்சினைகள் தீர்ந்து, சுமூகமான நல்லிணக்கம் ஏற்பட செய்ய வேண்டிய எளிய பரிகாரம் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இந்த பதிவில் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.

ஆன்மீக ரீதியாக ஒரு சில தாந்திரீக பரிகாரங்கள் செய்யும் பொழுது அதற்கு உரிய பலன்களை நாம் கண்கூடாக காண முடியும். அவ்வரிசையில் தம்பதிகளுக்குள் இருக்கும் பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றுமையுடன் இருப்பதற்கு, தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு இந்த வேலையை செய்துவிட்டு தூங்கச் சொல்லுங்கள். காலையில் எழுந்த பின்னும் உங்களுக்கு இந்த பரிகார வேலைகள் தொடரும்.

- Advertisement -

ஒரு செம்பினால் ஆன சொம்பு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். செம்பு என்கிற உலோகம் குளிர்ச்சித் தன்மை பொருந்தியது. அதில் தினமும் நீரூற்றி குடித்து வர, பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். முந்தைய காலங்களில் செம்பு குடங்களில் தான் தண்ணீரை வீட்டில் வைத்திருப்பார்கள். மண்பானை, செம்பு பானை, பித்தளை பானைகளில் தண்ணீர் ஊற்றி குடிக்க, உடல் உஷ்ணம் அதிகரிக்காது, சீராக இருக்கும்.

இந்த செம்பு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை ஊற்றி, இரவு தூங்க செல்லும் போது தலைமாட்டிற்கு பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். கை, கால்கள் பட்டு தண்ணீர் சிந்தி விடக்கூடாது, எனவே ரொம்பவும் பக்கத்திலும் வைக்க வேண்டாம். பின்னர் காலையில் எழுந்ததும் அந்த தண்ணீரை எடுத்து உங்கள் வீட்டில் நீங்கள் வளர்க்கும் துளசி செடிக்கு ஊற்றி வர வேண்டும். துளசி செடி இல்லாதவர்கள், கண்டிப்பாக துளசி செடியை வாங்கி நட்டு வளருங்கள்.

- Advertisement -

இப்படி தொடர்ந்து ஒவ்வொரு இரவும் செம்பு தண்ணீரை தலைமாட்டிற்கு பக்கத்தில் வைத்துக் கொண்டு காலையில் எழுந்ததும் குளித்து முடித்து சுத்த பத்தமாக துளசி செடிக்கு அந்த தண்ணீரை எடுத்து ஊற்றி வர வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், மனதில் இருக்கும் கசப்புகள் நீங்கி மூளை தெளிவாகும். துளசி தாயின் அருளால் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும். தம்பதிகளுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் களைந்து ஒற்றுமை அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே:
சங்கடஹர சதுர்த்தி சர்க்கரைவள்ளிக் கிழங்கு பரிகாரம்

இந்த செம்பு பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை வேறு செடிகளுக்கு ஊற்றலாமா? ஆம், தாராளமாக எந்த செடிகளுக்கும் நீங்கள் இந்த தண்ணீரை ஊற்றி வரலாம். துளசி புனிதமான மூலிகை. இது மகாலட்சுமியின் ஸ்ரூபமாகவும் கருதப்படுகிறது. தலைமாட்டிற்கு அருகில் செம்பு உலோகத்தில் தண்ணீரை நிரப்பி வைப்பதால் உங்களுடைய மூளை நரம்புகள் தளர்ந்து ரிலாக்ஸாக உணர்வீர்கள். இதனால் தேவையற்ற சிந்தனைகள் களையப்படும். மனதில் இருக்கும் வக்ர, வன்ம எண்ணங்கள் அனைத்தும் நீங்கி, சாந்தமான எண்ண அலைகள் பிரதிபலிக்கும். இந்நீரை துளசி செடிக்கு ஊற்றுவதன் மூலம் பக்தி மேம்படும். புதிய தன்னம்பிக்கையும், தைரியமும் உருவாகும். சிந்தனைகள் ஒருமுகப்படும். பக்தியின்பால் உங்கள் மனம் ஈர்க்கப்படும் பொழுது, இயல்பாகவே நற்குணங்கள் அதிகரிக்கும். இதனால் குடும்பத்தில் ஒற்றுமையும் மேலோங்கி காணப்படும்.

- Advertisement -