- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசங்கடஹர சதுர்த்தி சர்க்கரைவள்ளிக் கிழங்கு பரிகாரம்

சங்கடஹர சதுர்த்தி சர்க்கரைவள்ளிக் கிழங்கு பரிகாரம்

- Advertisement -

நிறைய பேர் வாழ்க்கையில் கசப்பான அனுபவங்கள் தான் நிறைய இருக்கும். இனிமை என்பது வாழ்க்கையில் சுத்தமாக இருக்காது. இதுபோல உங்கள் வாழ்க்கையிலும் கடுமையான கஷ்டங்களை நீங்கள் எதிர்கொண்டு வந்தால், இந்த சக்தி வாய்ந்த விநாயகர் வழிபாடு உங்களுக்காகத்தான். இன்று வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் சங்கடஹர சதுர்த்தி.

உங்கள் கையால் விநாயகருக்கு இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை பின் சொல்லக் கூடிய முறைப்படி நெய்வேதியம் செய்துவிட்டு, பிரசாதமாக சாப்பிட்டு பாருங்கள். பிறகு அடுத்த நாளிலிருந்து உங்கள் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் விலகும். உங்கள் செவிகளில் விழக்கூடிய அத்தனை செய்திகளும் இனிமையான செய்திகளாக தான் இருக்கும்.

- Advertisement -

இந்த வார்த்தைகளை கேட்கும் போது எவ்வளவு சந்தோஷமா இருக்கு. தினம் தினம் கெட்ட செய்திகளை கேட்டு, தினம் தினம் தோல்வியை தழுவி, எடுக்கும் முயற்சிகளை எல்லாம் தடைபட்டு நிற்பவர்களுக்கு இந்த பரிகாரத்தின் மூலம் நிச்சயம் ஒரு விமோசனம் கிடைக்கும். சரி இந்த பரிகாரத்திற்குள் பயணம் செய்வோமா.

வைகாசி மாத சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

சங்கடஹர சதுர்த்தி வழிபாடு என்றாலே அது மாலை நேர வழிபாடுதான் சிறப்பு. இன்று மாலை விநாயகருக்கு அருகம்புல் சாத்தி கொஞ்சம் வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கில் தேன் ஊற்றி நெய்வேதியமாக படைத்துவிட்டு, தீப தூப ஆராதனை காட்டி விநாயகா என்னுடைய வாழ்க்கையில் இருக்கும் கசப்பான கஷ்டங்கள் அனுபவங்கள் எல்லாம் என்னை விட்டு நீங்க வேண்டும்.

- Advertisement -

இனி வரக்கூடிய என்னுடைய வாழ்க்கை இந்த தேன் போல ருசிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிறகு தீப தூப கற்பூர ஆராதனை காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொண்டு, மறக்காமல் தோப்புக்கரணம், பிள்ளையார் கொட்டு வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கையும் தேனையும் வீட்டில் இருப்பவர்கள் பகிர்ந்து பிரசாதமாக உண்ணலாம். முடிந்தால் கொஞ்சம் நிறைய இந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கை செய்து, இல்லாதவர்களுக்கு தானமும் கொடுக்கலாம். இதே போல வழிபாட்டை நீங்கள் கோவிலுக்கு சென்றும் செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: வைகாசி வெள்ளிக்கிழமை ஹனுமன் வழிபாடு

வேகவைத்த சக்கரவல்லி கிழங்கையும் தேனையும் இறைவனுக்கு நெய்வேத்தியமாக கொடுத்து அர்ச்சனை செய்து, அங்கு வரும் பக்தர்களுக்கு இதை பிரசாதமாக கொடுத்தாலும் சிறப்பு. உங்களால் வீட்டில் இந்த வழிபாட்டை செய்ய முடிந்தாலும் சரி அல்லது கோவிலுக்கு சென்று இந்த வழிபாட்டை செய்ய முடிந்தாலும் சரி, பலன் நிச்சயம் கை மேல் கிடைக்கும். நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு இந்த ஆன்மீகம் சார்ந்த எளிய பரிகாரம் நிச்சயம் பைனல் பலன் கொடுக்கும். இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் விநாயகரை பிரார்த்தனை செய்வோம். நல்லதே நடக்கும்.

சற்று முன்