- Advertisement -

இலவசமாக நமக்கு ஏதாவது ஒரு பொருள் கிடைக்கிறது என்றால் முன்பின் யோசிப்பதே கிடையாது. அந்த பொருளை கொண்டு வந்து உடனே நம் வீட்டில் வைத்துக் கொள்வோம். ஆனால் அந்த பொருளை இனாமாக வாங்கிய பிறகு ஏற்படக்கூடிய கஷ்ட நஷ்டங்களை பற்றி கொஞ்சம் கூட சிந்திப்பதே கிடையாது.

அடுத்தவர்களிடமிருந்து இலவசமாக வாங்கி பயன்படுத்தக் கூடாத அந்த பொருட்கள் எல்லாம் என்னென்ன தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

- Advertisement -

இலவசமாக வாங்கி பயன்படுத்தக் கூடாத பொருட்கள்

கஷ்டம் தீர வேண்டும் என்பதற்காகத்தான் கோவிலுக்கு சென்று விளக்கு போடுகின்றோம். ஆனால் அந்த விளக்கை ஏற்றி வைப்பதற்கு இரண்டு ரூபாய் கொடுத்து தீப்பெட்டி வாங்க மாட்டோம். யாரோ ஒருவர் தங்களுடைய கஷ்டம் தீர வேண்டும் என்பதற்காக ஒரு விளக்கை ஏற்றி வைத்திருப்பார்கள். அந்த விளக்கில் நம்முடைய விளக்கை பொருத்தி வைப்போம்.

அப்படி இல்லை என்றால் பக்கத்தில் இருப்பவர்களிடம் தீப்பெட்டி வாங்கி விளக்கு ஏற்றுவோம். இது இரண்டுமே தவறு. கோவிலில் நின்று கொண்டு அடுத்தவர்கள் கையில் இருந்து நெருப்பு பெட்டி வாங்கி தீபம் ஏற்றுவது சரியான முறை அல்ல. அதிலும் குறிப்பாக பரிகார ஸ்தலத்திற்குச் சென்று எள்ளு தீபம் போடுவது, கொள்ளு தீபம் போடுவது, மிளகு தீபம் போடுவது, போன்ற பரிகார விளக்குகளை ஏற்றும் போது நாம் எந்த பொருளையும் அடுத்தவர்கள் கையில் இருந்து வாங்க கூடாது. கடையில் காசு கொடுத்து வாங்கிய பொருளில் தான் அந்த விளக்கை ஏற்ற வேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக உங்க சொந்த பந்தங்கள், நெருங்கிய நண்பர்கள் யாராவது புதுசாக செருப்பு வாங்கி உங்களுக்கு கொடுத்தாலும், அதை நீங்கள் வாங்காதீங்க. நீங்கள் அணியும் செருப்பு, நீங்கள் காசு கொடுத்து வாங்கிய செருப்பாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, அடுத்தவர்கள் பரிசாக கொடுத்த செருப்பாக இருக்கக் கூடாது. எந்த டாப் பிராண்ட் செருப்பாக இருந்தாலும் இனாமாக வந்தால் அதை வாங்காதீங்க.

நாம கொஞ்சம் நடுத்தர குடும்பத்தினர் ஆகத்தான் இருப்போம். நாம் நெருங்கிய சொந்த பந்தங்கள் உறவுகள் கொஞ்சம் வசதியில் கூடுதலாக இருக்கலாம். அவர்கள் கணக்கில்லாத பொருட்களை வாங்கி வீட்டில் குவித்து வைப்பார்கள். இப்படிப்பட்ட பணம் படைத்தவர்கள் வீட்டிற்கு, யாராவது நடுத்தர வருடத்தினர் சென்றால், அவர்கள் பயன்படுத்தாத பொருட்களை எல்லாம் எடுத்து கொடுப்பாங்க.

- Advertisement -

அப்படி யாராவது உங்க சொந்தக்காரங்க கொஞ்சம் வசதியா இருக்கிறவங்க, உங்களுக்கு அவங்க பயன்படுத்திய பொருட்களை எல்லாம் கொடுத்தால் கைநீட்டி வாங்காதீங்க. அதுவும் எதிர்மறை ஆற்றலை உண்டு பண்ணிவிடும். அவங்க நல்ல மனசுக்காரங்களா இருக்கட்டும், அவங்க வாங்கிய பொருளை பயன்படுத்தாமல் அப்படியே புதுசா வைத்திருந்தாலும் சரி, அந்தப் பொருளை நாம் இனமாக வாங்க கூடாது.

கோவிலுக்கு போகின்றோம் அங்கு இருக்கக்கூடிய ஐயரின் கையால் மட்டுமே விகுதி குங்குமம் வாங்க வேண்டும். தவிர அடுத்தவர்கள் கையில் இருந்து அப்படியே நேராக விபூதி குங்கத்தை எடுத்து உங்கள் நெற்றியில் வைக்க கூடாது. உங்க கையில் இருக்கும் விபூதி குங்குமத்தையும் நீங்கள் தெரியாத அடுத்தவர்களுக்கு கொடுக்காதீங்க. அப்படி கொடுக்கணும்னு நினைச்சா கூட கையில் இருக்கும் விபூதி குங்கத்தை ஒரு பேப்பரில் கொட்டி அந்த பேப்பரை அவர்களிடம் நீட்டுங்கள். அந்த விபூதிக்கு முகத்தை அவர்கள் எடுத்து இட்டுக் கொள்ளட்டும்.

சில பேருக்கு இன்னொரு சந்தேகமும் இருக்கிறது. பரிகார ஸ்தலங்களுக்கு செல்லும்போது அங்கு வரக்கூடிய பக்தர்கள் தங்களுடைய பிரச்சனை தீர வேண்டும் என்று எள்ளு சாதம் பிரசாதமாக கொடுப்பாங்க. இந்த சாதத்தை கோவிலில் பிரசாதமாக வாங்கலாமா வாங்க கூடாதா. எள்ளு சாதத்தை பிரசாதமாக வாங்கலாம். வாங்கிய எள்ளு சாதத்தை அந்த கோவிலிலேயே அமர்ந்து நீங்க சாப்பிட்டு வந்துருங்க. அதை வீட்டுக்கு எடுத்துட்டு வராதீங்க அவ்வளவுதான்.

இதுபோல புளி, சீயக்காய், எண்ணெய், மிளகாய் தூள், இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள், இந்த பொருட்களை எல்லாம் அடுத்தவர்களுக்கு இலவசமாக கொடுக்கவும் வேண்டாம். நீங்க யார் கையில் இருந்தும் இந்த பொருட்களை இலவசமாக பெறவும் வேண்டும்.

இதையும் படிக்கலாமே: 27-04-2024 சனிக்கிழமையோடு வரும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

நீங்க பெரிய மளிகை கடைக்காரராக இருக்கலாம். நீங்களே செக்கு எண்ணெய் ஆட்டலாம். ஆனால் உங்களுடைய சொந்த பந்தங்களுக்கோ, உங்களுடைய பிள்ளைகளுக்கோ இந்த பொருட்களை காசு வாங்காமல் இனாமாக கொடுக்கவே கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது. நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -