- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

உப்பு தீபம் ஏற்றுவதில் உங்களுக்கு சந்தேகமா?

வீட்டில் உப்பு தீபம் ஏற்றலாமா? வேண்டுமா? என்பதில் இன்றளவும் அனைவருக்கும் அதிக சந்தேகங்கள் இருந்துதான் வருகின்றது. ஒரு சிலர் இதை ஏற்று கூடாது என்ற கருத்தையும் முன் வைக்கிறார்கள். ஆனால் சாஸ்திரப்படி உப்பு தீபம் ஏற்றுவதில் எந்த தவறும் இல்லை. நம் வீட்டில் தாராளமாக உப்பு தீபம் ஏற்றும் பழக்கத்தை கடைபிடிக்கலாம். உப்பு என்றாலே மஹாலக்ஷ்மியின் ஸ்வரூபம் என்று கூறுவார்கள். அவ்வளவு புனிதத்தன்மை வாய்ந்த உப்பினை பெருமை படுத்துவதற்காக ஏற்றப்படும் தீபமே உப்பு தீபம்.

பொதுவாக இந்த உப்பிற்கு கெட்ட ஆற்றலை நம் வீட்டில் இருந்து வெளியேற்றும் சக்தி அதிகமாகவே உள்ளது. என் வீட்டின் கதவுகளின் பின்புறத்தில் அதிகமாக எதிர்மறை ஆற்றல்கள் இருக்கும். அதனை நீக்குவதற்கு ஒரு சிறு குவளையில் கல்லுப்பு நிரப்பி கதவின் பின்புறத்தில் வைத்துவிட வேண்டும். இதனால் எதிர்மறை ஆற்றலின் மூலம் நம் வீட்டில் ஏற்படும் பிரச்சனைகள் குறையும்.

- Advertisement -

உப்பினை மஹாலக்ஷ்மி அம்சம் என்று கூறுவதால் அதன்மேல் சுடும் தீபத்தை ஏற்றுவது தவறு என்று சிலர் நினைக்கின்றார்கள். அந்த சடரில் தான்  மஹாலக்ஷ்மி வாழ்கின்றார் என்பதை நாம் உணர வேண்டும்.

நம் முன்னோர்கள், கண்திருஷ்டி பட்டுவிட்டால் கல்லுப்பு ஒரு கைப்பிடி அளவு எடுத்து நம்மைச் சுற்றி, அடுப்பில் உள்ள தீயில் போட்டு விடுவார்கள். அந்த உப்பானது எந்த அளவுக்கு நெருப்பில் பொறிகின்றதோ அந்த அளவுக்கு நம் கண் திருஷ்டியானதும் விலகி விட்டது என்றும் கூறுவார்கள். ஆகவே அந்த கல் உப்பின் மேல் தீபத்தை ஏற்றி வைப்பதில் எந்த தவறும் இல்லை.

- Advertisement -

அடுத்ததாக கல்லுப்பு தீபம் எப்படி ஏற்றலாம் என்பதை பற்றி காண்போம்.

பித்தளையினாலோ அல்லது செம்பினாலோ செய்யப்பட்ட சிறிய அளவு தாம்பூலத்தட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த தட்டில் மஞ்சள் குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும். தட்டின் மேல் கல் உப்பினை பரவலாகக் கொட்டிக் கொள்ள வேண்டும். அதன்மேல் மண்னால் செய்யப்பட்ட அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுவது மிகவும் சிறந்தது. இரண்டு திரையை ஒன்றாக திரித்து போடுவது நல்லது. ஒற்றைத் திரியில் விளக்கு ஏற்ற வேண்டாம். அகல்விளக்கிற்க்கும் குங்குமப்பொட்டு வைத்திருக்க வேண்டும். விளக்கினை சுற்றி வாசனை உள்ள பூக்களை வைக்க வேண்டும். தாமரைப்பூ கிடைத்தால் இன்னும் சிறப்பு. இந்த தீபத்தினை தென்மேற்கு அல்லது வடகிழக்கு மூலையில் கிழக்கு பக்கம் பார்த்தது போன்று ஏற்ற வேண்டும்.

- Advertisement -

உங்களால் முடிந்தால் வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் காலையில் 6 மணி அளவிலும், மாலை வேளைகளில் 6 மணியிலிருந்து 8 மணிக்கு முன்பாகவும், இந்த விளக்கை வீட்டில் ஏற்றி வைக்கலாம். முடியாதவர்கள் மாதம் ஒரு முறையாவது பவுர்ணமி தினத்தன்று இந்த விளக்கை ஏற்றி வைப்பது மிகவும் சிறந்தது.

இந்த விளக்கினை ஏற்றி வைத்துவிட்டு அதன் முன்பு சிறிது கற்கண்டை நைவேத்தியமாக வைத்து, அதை பிரசாதமாக குழந்தைகளுக்கு தருவது இன்னும் சிறப்பு வாய்ந்த ஒன்று. இந்த தீபத்தினை முழு நம்பிக்கையோடு ஏற்றி வைத்து அந்த மஹாலக்ஷ்மியை வழிபடுவதன் மூலம் நம் வீட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாக தங்கி விடும்.

இதையும் படிக்கலாமே
உங்களுக்கு கஷ்டம் ஏற்படும் சமயத்தில் கடவுளை திட்டும் குணம் கொண்டவர்களாக நீங்கள்? இதை கட்டாயம் படியுங்கள்.

English Overview:
Here we have Uppu deepam doubts in Tamil. Uppu deepam benefits in Tamil. Uppu deepam uses in Tamil. Salt deepam doubts in Tamil.

- Advertisement -