உங்களுக்கு கஷ்டம் ஏற்படும் சமயத்தில் கடவுளை திட்டும் குணம் கொண்டவர்களாக நீங்கள்? இதை கட்டாயம் படியுங்கள்.

scolding-god

நம் வாழ்க்கையில் சந்தோஷமான தருணங்கள் ஏற்படும்போது அந்த கடவுளை நினைக்கிறோமோ இல்லையோ கஷ்டம் என்று வந்துவிட்டால் முதலில் நம் வாயிலிருந்து வரும் வார்த்தை ‘அந்த கடவுளுக்கு கண்ணில்லையா? எனக்கு ஏன் இவ்வளவு பெரிய கஷ்டம்’ என்று அந்த கடவுளை திட்டுவோரின் எண்ணிக்கை தான் அதிகம்.

kanji-periyava

ஆனால் அந்தக் கடவுளால் கொடுக்கப்படும் கஷ்டமானது நமக்கு ஏதோ ஒரு வகையில் நன்மையை தரும் என்பது நம்மில் சிலருக்கு புரிவதில்லை. அதை நமக்கு புரிய வைக்க, காஞ்சி பெரியவர் அவர்கள் தன் சீடனுக்கு ஒரு கதையை கூறி புரிய வைத்தார்கள். அது என்ன கதை என்பதைப் பற்றி நாமும் தெரிந்து கொள்வோமா?

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு பெரிய வசதிப் படைத்த ஜமீன்தார் மிகவும் நல்ல குணம் கொண்டவர். இவர் பல கோவில்களை சீர் அமைப்பதற்கு தன்னிடம் உள்ள செல்வத்தை கொடுத்திருக்கின்றார். சமூக சேவையிலும் அதிக ஆர்வம் கொண்டவர். அந்த ஜமீன்தாருக்கு ஒரு நாள் எதிர்பாராத வகையில் ஒரு பெரிய கஷ்டம் வந்துவிட்டது. அவரிடம் உள்ள சொத்துக்கள் எல்லாம் பறி போகும் அளவிற்கு அந்த கஷ்டமானது அவரை வாட்டி வதைத்தது. இவர் காஞ்சி பெரியவரின் பரம பக்தனும் கூட. தன் கஷ்டங்களை கூறுவதற்காக காஞ்சி பெரியவரை சந்திக்க சென்றார்.

kanji-periyava

‘நான் மற்றவர்களுக்கு நல்லதைத் தான் நினைக்கின்றேன். அந்த ஆண்டவன் எதற்காக எனக்கு இவ்வளவு பெரிய கஷ்டத்தை தரவேண்டும். அந்த கடவுளை நான் இனி வணங்க மாட்டேன்’ என்று கோபத்துடன் தன் ஆதங்கத்தை எல்லாம் காஞ்சி பெரியவரிடம் கொட்டி தீர்த்தார்.

- Advertisement -

எல்லாம் அறிந்த அந்த காஞ்சிப் பெரியவருக்கு நன்றாக தெரியும். இந்த சமயத்தில் ஒரு மனிதனுக்கு என்ன அறிவுரை கூறினாலும் அவன் மூளையை போய் சேராது என்று. இதனால் ஒரு கதையை மட்டும் அந்த ஜமீன்தாருக்கு காஞ்சி பெரியவர் கூறினார்.

kamatchi logo

நீண்ட நாட்களுக்கு முன்பு  கிராமத்தில் ஒரு உப்பு வியாபாரி வாழ்ந்து வந்தான். அந்த ஊரில் உள்ளவர் எல்லாம் இந்த வியாபாரியிடம் தான் உப்பு வாங்குவார்கள். உப்பு வியாபாரம் செய்து தன் வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து கொண்டிருந்தான். இவன் ஒரு காமாட்சியம்மன் பக்தன். தினமும் காமாட்சி அம்மனை வணங்கி விட்டுதான் வியாபாரத்திற்கு செல்வான். இப்படி தினம்தோறும் இவனது வாழ்க்கை சுமூகமாக தான் சென்று கொண்டிருந்தது.

அந்தக் காலத்திலெல்லாம் உப்பு விற்க செல்பவர்கள் கழுதையின் மீது உப்பு மூட்டையை போட்டு எடுத்துக்கொண்டு போய் வியாபாரம் செய்வார்கள். வழக்கம் போல உப்பு மூட்டைகளை கழுதையின் மீது ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு சென்றான் உப்பு வியாபாரி. என்றைக்கும் இல்லாமல் அன்றைக்கு காலநிலையானது மிகவும் மோசமாக மாறி நன்றாக மழை பெய்து விட்டது. என்ன ஆகும்? மூட்டையில் இருந்த உப்புக்கள் எல்லாம் கரைந்து போய்விட்டது. அந்த வியாபாரிக்கு பெருத்த நஷ்டம். கஷ்டம் வந்துவிட்டது முதலில் அவன் திட்டியது அந்த காமாட்சி அம்மனை தான்.

salt

தினம்தோறும் உன்னை நினைத்து பூஜை செய்த எனக்கு இப்படியொரு தண்டனையா? எனக்கு பெருத்த நஷ்டம், இனிமே நான் உன்னை வணங்க மாட்டேன். என்று அந்த அம்மனை திட்டி கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தான்.

அந்த சமயத்தில் வழியில் வந்த வழிப்பறிக் கொள்ளையர்கள் இவனை மிரட்டி கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் அந்த வியாபாரி தான் இன்று வியாபாரம் செய்யவில்லையே. இவனிடம் எப்படி பணம் இருக்கும். வந்தவர்கள் அவனை நன்றாக சோதனை செய்து விட்டு பணம் இல்லை என்று விட்டு சென்று விட்டார்கள்.

cash

திருடர்கள் இவனை விட்டு சென்ற போது இந்த உப்பு வியாபாரியை பார்த்து ‘உனக்கு இன்று நல்ல நேரம் போலிருக்கு. உன்னிடம் பணம் ஏதுமில்லை. அதனால் உன்னை விட்டு விட்டு செல்கின்றோம்.’ என்று கூறிவிட்டு சென்றனர். அப்போது தான் அந்த உப்பு வியாபாரி யோசித்தான்.. ‘ஒருவேளை இன்று நாம் உப்பினை விற்றுவிட்டு பணத்தோடு வந்திருந்தால் பணத்தை காப்பாற்ற, இந்த திருடர்களிடம் சண்டையிட வேண்டியதாக இருந்திருக்கும். இதனால் என் உயிரை கூட நான் இறந்திருப்பேன். இன்றைக்கு என் உப்பு கரைந்து கூட நல்லதுக்காக என்பதை நான் உணர்ந்து விட்டேன்’. என்று அந்த காமாட்சி அம்மனிடம் மனதார மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.

irukkankudi-amman

இப்படியாக காஞ்சி பெரியவர் கூறிய கதையை கேட்ட அந்த பெரிய ஜமீன்தார் மௌனத்தோடு, தனக்கு ஏற்பட்டிருக்கும் கஷ்டம் கூட ஏதாவது நன்மைக்காகத் தான் இருக்கும் என்று யோசித்துக்கொண்டே, தன் வீட்டிற்கு புறப்பட்டு விட்டார்.

சிறிது நாள் கழித்து அந்த காஞ்சி பெரியவரை சந்திக்க அந்த ஜமீன்தார் திரும்பவும் வந்திருந்தார். ஸ்வாமி என்னுடைய சொத்துக்கள் எல்லாம் பறிபோகும் நிலமையானது எனக்கு வந்த போது, சொத்துக்கள் எல்லாம் என்னுடையது தான் என்பதற்கான ஆதாரங்கள், என் முன்னோர்கள் திருப்பணி செய்த ஒரு கோவிலின் குருக்களிடம் இருந்தது. அந்த சொத்து பத்திரத்தை வைத்து என் சொத்துக்களையெல்லாம் நான் எந்த சேதாரமும் இல்லாமல் மீட்டுவிட்டேன். அன்றைக்கு எனக்கு ஏற்பட்ட கஷ்டம் கூட என் நல்லதுக்காக தான் என்பதை நான் உணர்ந்து விட்டேன். என்று காஞ்சி பெரியவரை வணங்கி ஆசிபெற்று பெற்றார் அந்த ஜமீன்தார்.

உங்களுக்கு புரிகிறதா அந்த கடவுள் நமக்கு கொடுக்கும் கஷ்டத்தில் கூட நமக்காக ஏதாவது ஒரு நன்மையை வைத்துதான் கொடுப்பார் என்பது.

இதையும் படிக்கலாமே
பெண்கள் அணியும் கண்ணாடி வளையலுக்கு பின்னால் இவ்வளவு ரகசியங்கள் அடங்கி உள்ளதா?

English Overview:
Here we have Kadavul kodukkum kastam. Kadavul thiruvilaiyadal Tamil. Kadavul nambikkai in tamil. Kanji periyavar story in Tamil.