- Advertisement -
தமிழ் கதைகள் | Tamil stories for reading

இறைவனை தன் முன் வரவைத்த மனிதன் – உண்மை சம்பவம்

புண்டலீகன் என்பவன் தன் மனைவியோடு ஒரு ஊரில் வாழ்ந்து வந்தான். அவனுடைய பெற்றோருக்கு வயது அதிகமாகிவிட்டது. ஆனாலும் அவன் தன் பெற்றோரை சரிவர கவனிக்காமல் வாழ்ந்து வந்தான். ஒருநாள் அவனுக்கு தன் மனைவியோடு காசிக்கு செல்ல வேண்டும் என்றொரு எண்ணம் வந்தது. உடனே தன் மனைவியோடு காசிக்கு நடை பயணமாக செல்ல தொடங்கினான்.

நடைபயணம் செல்கையில் ஒரு நாள் இரவு ஓய்வெடுப்பதற்காக ஒரு குடிசையின் திண்ணையில் படுத்து தூங்கினான். மறுநாள் காலை அந்த குடிசையில் இருந்து மூன்று பெண்கள் வந்து வாசல் பெருக்கி தெளித்து கோலமிட்டதை அவன் கண்டான். அந்த பெண்களை பார்த்தல் ராஜகுமாரிகள் போல இருந்தது. ஆனால் இவர்கள் ஏன் இந்த குடிசையில் இருந்து வருகிறார்கள் என்று எண்ணி அவர்களிடம் இது குறித்து வினவ தொடங்கினான்.

- Advertisement -

பெண்களே நீங்கள் யார்? உங்களை பார்த்தல் ராஜகுமாரிகள் போல் உள்ளது ஆனால் நீங்கள் ஏன் இந்த குடிசையில் இருந்து வருகிறீர்கள் ? குடிசையில் யார் வசிப்பது ? என்று தன் கேள்விகளை அடுக்கினால். அதுக்கு அந்த பெண்கள், நாங்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற மூன்று நதிகளின் தேவதைகள். மக்கள் தங்கள் பாவத்தை போக்க எங்கள் நதியில் வந்து நீராடுவார்கள். அவர்கள் நீராடிய பின் அவர்களின் பாவம் எங்களிடம் வந்து சேருகிறது. எங்களிடம் உள்ள பாவத்தை போக்கவே இந்த குடிசையில் உள்ள பெரியவருக்கு பணிவிடை செய்கிறோம் என்று கூறிவிட்டது அங்கிருந்து சென்றனர்.

இங்குள்ள பெரியவருக்கு பணிவிடை செய்தால் எப்படி இவர்களின் பாவம் போகும் ? யார் அந்த பெரியவர் அவரிடமே கேட்டுவிடுவோம் என்று எண்ணி அந்த குடிசைக்குள் நுழைந்து அங்கிருந்த பெரியவருக்கு தன் வணக்கத்தை தெரிவித்தான் புண்டலீகன். அவனுக்கு பேச்சை எப்படி ஆரமிப்பது என்று தெரியவில்லை. ஆகையால், ஐயா நான் காசிக்கு செல்லும் வழியில் இந்த குடிசையில் நேற்றிரவு தங்கி ஓய்வெடுத்தேன். இங்கிருந்து காசிக்கு எவ்வளவு தூரம் என்று கேட்டான். அதற்கு அந்த பெரியவர், தம்பி நான் காசிக்கெல்லாம் சென்றதில்லை ஆகையால் எனக்கு அது எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று தெரியாது. என்னுடைய வயதான தாய் தந்தையரை கவனித்துக்கொள்ளவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. அவர்களை தனியாக விடுத்தது நான் எப்படி காசிக்கு போக முடியும் என்று அவர் கூறினார்.

- Advertisement -

பெரியவர் கூறிய பதிலில் இருந்து அவருக்கு ஏன் அந்த தேவதைகள் பணிவிடை செய்கின்றனர் என்பதை உணர்ந்தான். உடனே காசிக்கு போகும் தன்னுடைய முடிவை விட்டுவிட்டு தன் பெற்றோரை இனி சரிவர கவனித்து அவர்களுக்கு பணிவிடை செய்வதே தன்னுடைய தலையாய கடமை என்று எண்ணி வீடு திரும்பினான். அன்று முதல் அவன் தன் பெற்றோரை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டான். அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் இவனே செய்தான்.

ஒரு நாள் இறைவன் இவன் முன் தோன்றி, நீ உன் பெற்றோருக்கு செய்யும் பணிவிடைகளை கண்டு யாம் உள்ளம் மகிழ்ந்தோம். உனக்கு ஏதாவது வரம் தரவேண்டும் என்று நான் எண்ணுகிறேன். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் என்றார். தன் தந்தையை அவன் குளிப்பாட்டி கொண்டிருக்கும் சமயத்தில் இறைவன் வந்தால் அவன் தன் பணியை பாதியிலேயே விட்டு விட்டு வந்துவிட்டான். ஆகையால் இறைவனிடம் அதுகுறித்து தெரிவித்துவிட்டு, இரண்டு செங்கற்களை ஒரு இடத்தில் வைத்துவிட்டு அதன் மேல் இறைவனை நின்றுகொண்டிருக்கு படி வேண்டி தன் பணியை செய்ய சென்றுவிட்டான்.

- Advertisement -

தன் தந்தையை குளிப்பாட்டி முடித்து பின் மற்ற சேவைகளை தன் பெற்றோர்களுக்கு செய்துவிட்டு அவன் வர கால தாமதம் ஆனது. அதுவரை இறைவன் அவன் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தார். பின் அவன் வந்து தன் தாமதத்திற்காக இறைவனிடம் மாணிப்பு கேட்டான். பின் “இறைவா நீங்கள் எனக்கு கொடுத்த தரிசனத்தால் நான் மிகவும் ஆனந்தமடைந்தேன் ஆனால் இந்த பரவசம் உலக மக்கள் அனைவருக்கும் கிட்ட வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் ஆகையால் இந்த செங்கற்கள் மேலே நின்று எப்போதும் பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்று அவன் வேண்டினான். அவன் கோரிக்கையை ஏற்று பகவானும் அங்கேயே நின்று இன்றுவரை பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அந்த இடமே ‘பண்டரிபுரம்’ என்னும் திருத்தலம்.

இதையும் படிக்கலாமே:
பாரத போரை நிறுத்த கிருஷ்ணரையே கட்டிப்போட்ட சகாதேவன் – சுவாரஸ்ய சம்பவம்

ஒருவன் தன் பெற்றோர்களுக்கு பணிவிடை செய்வதே தலையாய கடமை. அதை அவன் முறையாக செய்வதன் பலனாக இறைவன் அவனுக்கு அணைத்து வளங்களையும் வழங்குவார் என்பதற்கு புண்டலீகன் வாழ்வில் நடந்த சமபவமே ஒரு சிறந்த சான்று.

ஜென் கதைகள், ஆன்மீக கதைகள், சிறு கதைகள், குட்டி கதைகள் என பலவிதமான தமிழ் கதைகளை தினம் தினம் படிக்க எங்களுடைய மொபைல் ஆப்- ஐ டவுன்லோட் செய்து எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -