- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

குலதெய்வ வழிபாட்டின் அற்புத பலன்களும் குலதெய்வத்தை கண்டறியும் வழிமுறையும்.

தந்தை வழியில் பரம்பரை பரம்பரையாக வணங்கி வரும் ஒரு தெய்வத்தை தான் நாம் குலதெய்வம் என்கிறோம். ஒரு குழந்தைக்கு, தெய்வம் என்றால் என்னவென்று அறியாத வயதிலே, அதை குலதெய்வ கோயிலிற்கு அழைத்து சென்று அங்கு மொட்டை அடித்து காது குத்தி குலதெய்வத்தின் அருள் பெற செய்கிறோம். இப்படி செய்வதால் அந்த பரம்பரையில் வந்த அத்தனை புண்ணிய ஆத்மாக்களின் அருளும் அந்த குழந்தைக்கு கிடைக்கிறது.

குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாக காணப்பட்டாலும், மற்ற தெய்வங்களை விட குல தெய்வத்திற்கே சக்தி அதிகம். நாம் பல தெய்வங்களை வழிபாடு செய்தாலும் அவை அனைத்தும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே நமக்கு அருளினை வழங்க முடியும்.

- Advertisement -

எமன் கூட குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் ஒருவரின் உயிரை எடுக்க முடியும் என்றால் குலதெய்வத்தின் சக்தியை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.

ஒருவர் யாரிடமாவது குறிகேட்க சென்றால், குறி சொல்பவர் நம்குல தெய்வத்தை அழைத்து அதனிடம் அனுமதி கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக எதையும் சொல்ல முடியாது.

- Advertisement -

நமக்கு யாரவது செய்வினை வைக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு முதல் தடையாக இருப்பது நம் குலதெய்வம் தான். இதனை உணர்த்த மந்தவாதிகள்.

ஒருவருக்கு செய்வினை வைக்கும் முன்பு அவர்களது குலதெய்வத்தினை மந்திர கட்டு மூலம் கட்டுப்படுத்தி விட்ட பின்பு தான் செய்வினை வைப்பார்கள். எந்த மந்திர கட்டுக்கும் காட்டப்படாத தெய்வங்களும் உண்டு. அப்படி பட்ட தெய்வத்தினை கட்டுப்படுத்த நினைக்கும் மந்திரவாதிகளுக்கு அழிவு நிச்சயம்.

- Advertisement -

ஒரு பரம்பரையில் வந்த பலர் மூட்டை மூட்டையாகப் புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம் இன்னும் பலர் மூட்டை மூட்டையாக பாவத்தை சுமந்திருக்கலாம். அனால் நாம் குலதெய்வ கோயிலிற்கு சென்று வழிபடும்போது.

நம் முன்னோர்வழி வந்த அத்தனை புண்ணிய ஆத்மாக்களும் நமக்கு அருள் புரிவதோடு நமக்கு ஆபத்து நேரும் காலத்தில் அந்த சக்தி நம்மை ஒரு கவசம் போல காக்கும்.

தங்களது குல தெய்வம் யார் என்று தெரியாத சிலர் தங்களது இஷ்ட தெய்வத்தை வழிபட்டாலும் கூட பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

குலதெய்வத்திற்கு பூஜை செய்யாத ஒருவர் தங்களது இஷ்ட தெய்வத்தை எவ்வளவு தான் வழிபட்டாலும் அவர்களுக்கு பலன் கிடைக்காதை. ஆகையால் எப்பாடுபட்டாவது குலதெய்வத்தினை கண்டறிந்து அதற்குரிய வழிபாட்டினை செய்து வரவேண்டும்.

குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி ?

குலதெய்வமே தெரியாதவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் கால பைரவர் சந்நிதிக்கு சென்று அர்ச்சனை செய்து தங்களின் குலதெய்வத்தினை காட்டும் படி காலபைரவரிடம் மனமுருகி வேண்டிக்கொள்ள வேண்டும்.

அந்த சமயத்தில் குலதெய்வத்தை காட்டி தரும் கோரிக்கையை தவிர வேறு எந்த கோரிக்கையையும் காலபைரவரிடம் முன்வைக்க கூடாது. இப்படி 9 வாரங்கள் தொடர்ந்து கால பைரவருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை முடிந்தவுடன் பசுவிற்கு ஒரு கட்டு அகத்தி கீரை உணவாக அளிக்க வேண்டும்.

இந்த 9 வாரங்களில் கண்டிப்பாக உடலுறவு கூடாது அதோடு அசைவ உணவு, மது பழக்கம் இப்படி எதுவும் இருக்கக்கூடாது. இப்படி கால பைரவரை வணங்கிவரும் வேலையில் உங்கள் குலதெய்வத்தை கண்டிப்பாக அவர் ஏதாவது ஒரு ரூபத்தில் உங்களுக்கு காட்டி கொடுப்பார்.

யாராவது குலதெய்வம் பற்றிய தகவலை உங்களிடம் கூறலாம் அல்லது கனவில் தங்களின் குலதெய்வம் பற்றிய விவரங்கள் கிடைக்கலாம். இந்த வழிபாட்டினை உடல் சுத்ததோடும் மனசுத்தத்தோடும் செய்யாவிட்டால் நிச்சயம் பலன் கிடைக்காது.

இதையும் படிக்கலாமே:
வீட்டில் சுவாமிக்கு எப்படி ஆரத்தி காட்டுவது சிறந்தது.

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், மந்திரங்கள், ஜோதிட குறிப்புகள் பலவற்றை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

English Overview:
Here we discussed how to find kula deivam ? What are the benefits of worshiping Kula deivam in Tamil. It is called as Kula deiva vazhipadu in Tamil

- Advertisement -
Published by