வீட்டில் சுவாமிக்கு எப்படி ஆரத்தி காட்டுவது சிறந்தது.

aarathijpg

வீட்டில் நாம் பூஜை நேரங்களில் இறைவனுக்கு ஆரத்தி காண்பிப்பது வழக்கம். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக ஆரத்தி காண்பிக்கிரோம். அனால் ஆரத்தியை காண்பிப்பதற்கான சில வழிமுறைகளை ஆகம சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. வாருங்கள் அதை பற்றி விரிவாக பார்ப்போம்.

வீட்டில் விளக்கேற்றிய பின்னர் இறைவனுக்கான பாடல்களையோ மந்திரங்களையோ கூறிவிட்டு, கற்பூர ஆரத்தி அல்லது தீப ஆரத்தி காண்பிக்க வேண்டும். ஆரத்தி காண்பிப்பவர் தனது வலது கையால் ஆரத்தி தட்டினை எடுத்துக் கொண்டு தெய்வத்தின் அங்கம் முழுவதும் தீப ஒளி படரும்படி “ஓம்’ வடிவில் மூன்று முறை ஆரத்தி தட்டினை சுற்றிக் காட்ட வேண்டும் என ஆகம சாஸ்திரம் கூறுகிறது.

அதே போல் சில ஆகமங்களில் சுவாமியின் பாதத்தில் நான்கு முறையும், வயிற்றுப்பகுதியில் இருமுறையும், முகத்திற்கு நேராக ஒருமுறையும் ஆரத்தி காட்டிவிட்டு இறுதியாக சுவாமியின் அங்கம் முழுவதும் மூன்று முறை சுற்றிக் காட்ட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.