
இன்றைய காலத்தில் தலைமுடியின் ஆரோக்கியம் என்பது மிகவும் பாதிப்படைந்த நிலையில் தான் இருக்கிறது. ஆரோக்கியமான தலைமுடியை பெற்றவர்கள் என்று பார்க்கும் பொழுது அது மிகவும் அரிதாகி விட்டது. இதற்கு காரணம் அவர்கள் முடியை ஒழுங்காக பராமரிக்காதது தான். அந்த வகையில் நாம் சந்திக்கக்கூடிய பிரச்சனை தலைமுடி உதிர்தல் மற்றும் இளநரை பிரச்சினை. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு வீட்டிலேயே எளிமையான முறையில் எப்படி எண்ணெய் தயார் செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
இளநரை பிரச்சினை வந்துவிட்டது என்றால் அதை இயற்கையான முறையில் சரி செய்ய வேண்டும் என்று பலரும் நினைப்பதில்லை. இதற்கு காரணம் நேரமின்மை அல்லது சோம்பேறித்தனம் என்று கூறலாம். அதனாலேயே கடைகளில் விற்கக்கூடிய கெமிக்கல் நிறைந்த ஹேர் டை பயன்படுத்தி விடுகிறார்கள். இதனால் தலைமுடி அந்த சமயம் மட்டுமே கருப்பாகுமே தவிர்த்து மறுபடியும் சிறிது நாட்கள் கழித்து பழைய நிறத்திற்கு மாறிவிடுவதோடு மட்டுமல்லாமல் பல விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.
இளநரையை நீக்கி கருமையாக மாற்றுவதற்கு இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான பொருள்தான் அவுரி. இந்த அவுரி இலையை நாம் அப்படியே அரைத்து தலையில் தேய்த்து குளித்தாலும் முடி கருமையாகும். ஆனால் இதை ஒவ்வொரு முறையும் நாம் அரைத்து தடவி ஊறவைத்து குளிக்க முடியாது அல்லவா? இதையே சில பேர் பொடியாக வாங்கி வைத்து கலந்து தலையில் தடவுவார்கள். அதற்கும் நாம் ஒரு குறிப்பிட்ட நேரம் தலையில் ஊற வைத்து தலையை அலச வேண்டும்.
இப்படி இந்த சிரமங்கள் எதுவும் இல்லாமல் மிகவும் எளிமையான முறையில் அவுரி பொடியை வைத்து நாம் எண்ணெய் தயார் செய்து விட்டோம் என்றால் அன்றாடம் நம் தலைக்கு இந்த எண்ணையை தேய்க்கும் பொழுது அது நம்முடைய தலைமுடியை கருப்பாக மாற்றிவிடும். ஒரு சுத்தமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை சேர்க்க வேண்டும். பிறகு அதில் மூன்று ஸ்பூன் அவுரி பொடியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி அதை கெட்டியாக பிணைந்து கொள்ள வேண்டும். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு இரும்பு கடாயை வைத்து அதில் 100 மில்லி லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் நாம் உருட்டி வைத்திருக்கும் உருண்டைகள் அனைத்தையும் அந்த எண்ணெயில் போட்டு உடனே அடுப்பை அணைத்து விட வேண்டும்.
எண்ணெய் நன்றாக ஆரிய பிறகு இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் அந்த உருண்டைகளுடன் ஊற்றி வைத்து விட வேண்டும். மூன்று நாட்கள் வரை இதை சூரிய வெளிச்சம் படாத ஒரு இடத்தில் வைத்து விட வேண்டும். மூன்று நாட்கள் கழித்து நாம் இந்த எண்ணெயை உபயோகப்படுத்த ஆரம்பிக்கலாம்.
இதையும் படிக்கலாமே: பனிக்காலத்தில் மிருதுவான கை கால்களை பெற
இந்த எண்ணையை நாம் உபயோகப்படுத்துவதன் மூலம் தலைமுடி உதிர்தல் பிரச்சனையும் தீர்க்கப்படுகிறது. அதே சமயம் இளநரை பிரச்சினையும் தீர்க்கப்படுகிறது.