பொதுவாக பனிக்காலங்களில் சருமம் வறண்டு போய் இருக்கும். அதற்கு காரணம் பனிக்காலங்களில் நாம் அதிக அளவு தண்ணீர் குடிக்காததே. அதிகமாக தண்ணீர் குடிக்கும் எண்ணமும் ஏற்படாது. அதே சமயம் வியர்வை துளிகளும் வராத காரணத்தினால் அதிகமான அளவு தண்ணீரை நாம் அருந்த மாட்டோம். இந்த சமயங்களில் நம்முடைய சருமத்தில் வறட்சி ஏற்படக்கூடும். அந்த வறட்சியால் கை கால்களில் வெடிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இந்த அழகு குறித்து குறித்த பகுதியில் பாதி எலுமிச்சம் பழத்தை வைத்து கை கால்களை எப்படி மிருதுவாக மாற்றுவது என்றுதான் பார்க்கப் போகிறோம்.
பனி காலத்தில் சருமத்தை பராமரிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக தான் திகழும். என்ன செய்தாலும் உடனே குளிர்ச்சி ஏற்பட்டு அதனால் நமக்கு சளி பிடிப்பது போன்ற பக்க விளைவுகள் ஏற்படக்கூடும். அவற்றை சரி செய்வதற்கு என்னதான் நாம் மாய்ஸ்டரைசரை பயன்படுத்தினாலும் சிறிது நேரத்திலேயே மறுபடியும் தோல் வறண்டு விடும். இதை சரி செய்வதற்குரிய ஒரு எளிய ஸ்கிரப்பரை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
இதற்கு அரை எலுமிச்சம்பழம் வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு தேன், ஒரு ஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடா, பிறகு நாம் உபயோகப்படுத்தும் பல் தேய்க்கும் பேஸ்ட் மூன்றையும் எலுமிச்சம் பழத்தின் மேல் வைத்து அதை அப்படியே கை கால்களில் எந்த இடத்தில் வறண்டு போய் பிளவு ஏற்பட்டு இருக்கிறதோ அந்த இடத்தில் நன்றாக அழுத்தி தேய்க்க வேண்டும்.
அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் துணியை நனைத்து அந்த துணியின் உதவியால் இந்த ஸ்க்ரப்பரை துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தேய்ப்பதன் மூலம் வறண்ட சருமமும் இறந்த செல்களும் நீக்கப்பட்டு அந்த இடம் மிகவும் மிருதுவாகவும் அழகாகவும் மாறிவிடும். இதை முகத்தில் தடவுவதை தவிர்க்க வேண்டும். மேலும் கை, கால்களில் இருக்கக்கூடிய கருமை நிறமும் மாறும்.
அடுத்ததாக நமக்கு கற்றாழை தேவைப்படும். கற்றாழையை எப்பொழுதும் செடியிலிருந்து பறித்தவுடன் உபயோகப்படுத்தக்கூடாது. அதை அரை மணி நேரமாவது அப்படியே வைத்து விட வேண்டும். அதிலிருந்து மஞ்சள் நிறத்தில் ஒரு திரவம் வெளிப்படும். அந்த திரவம் முழுவதும் வடிந்த பிறகு அதை சுத்தமாக கழுவி விட்டு தான் நாம் உபயோகப்படுத்த வேண்டும்.
ஒரு கற்றாழை மடலை எடுத்து அதை நீளவாக்கில் பாதியாக நறுக்கி அதற்குள் இருக்கும் சதைப்பகுதியில் லேசாக கீறிவிட்டு ஒரு ஸ்பூன் அளவிற்கு சர்க்கரையும் ஒரு ஸ்பூன் அளவிற்கு கஸ்தூரி மஞ்சள் தூளையும் போட்டு கருமை இருக்கும் இடங்களில் நன்றாக தேய்த்து அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் துணியை நனைத்து துடைத்து எடுப்பதன் மூலம் கருமை நீங்குவதோடு மட்டுமல்லாமல் மிருதுவாகவும் காட்சியளிக்கும்.
இதையும் படிக்கலாமே: பட்டு போன்ற அழகிய கூந்தலைப் பெற
இந்த பனிக்காலத்திற்கு ஏற்ற முறையில் நாம் நம்முடைய சருமத்தை பேணி பராமரிப்பதன் மூலம் என்றென்றைக்கும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும்.